வேம்பில் இருக்கும் ஆயுர்வேத தன்மைகள் பற்றி நீண்ட நெடுங் காலமாகவே அறியப்பட்டுள்ளது, ஆகவே பல இயற்கையான ஷாம்பூகள் மற்றும் தலைக்கு தேய்க்கும் எண்ணெய்களில் அது பயன்படுத்தப்படுகிறது. நீளமான தலைமுடியை பெற வேம்பை நீங்கள் எப்படி பயன்படுத்த முடியும் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.....
 

நீளமான தலைமுடிக்கு வேம்பு

நீளமான தலைமுடிக்கு வேம்பு

வேம்பு ஆன்டி&ஆக்ஸிடன்ட் தன்மைகளை கொண்டுள்ளது தெரிந்ததே, இது உங்கள் தலையின் மேல்தோல் சேதமடைவதில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் அது தலைமுடி வேகமாக, ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது.

 

நல்ல ஹேர் கண்டிஷனர்

நல்ல ஹேர் கண்டிஷனர்

உங்கள் முடிக்கு வேம்பு ஒரு மாய்ஸ்ட்ரைசர் ஆகவும் செயல்பட முடியும். வேப்ப எண்ணெய் முடி ஷாஃப்ட் உள்ளே ஆழமாக ஊடுருவிச் சென்று அதற்கு தேவையான அனைத்து ஊட்டங்களையும் கொடுக்கிறது. இது குறிப்பாக வறண்ட மற்றும் சேதமடைந்த கேசத்துக்கு உதவிகரமாக இருக்கும். வேப்ப எண்ணெய்யை முறையாக தடவி வருவதால் ஆரோக்கியமான, மினுமினுக்கும் முடியை நீங்கள் எதிர்பார்க்க முடியும்.

 

பொடுகை எதிர்த்து போராடுகிறது

பொடுகை எதிர்த்து போராடுகிறது

தலையின் மேல்தோலில் நோய்த்தொற்றுகள் மற்றும் பொடுகை எதிர்த்து போராட உதவும் பூஞ்சை&எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர்&எதிர்ப்பு தன்மைகளை கொண்டதாக வேம்பு விளங்குகிறது. உங்கள் தலையின் மேல்தோலில் அரிப்பால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், நீங்கள் வேப்ப எண்ணெய்யை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.