கெரட்டின் என்பது தலைமுடி தொடர்பான வார்த்தைகளில் ஒன்று என்று மட்டுமே பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள், ஆனால் அதனுனடைய அர்த்தம் அனைவருக்கும் தெரியாது. உங்களுக்கு புத்துணர்ச்சி தேவைப்பட்டால், உங்களுடைய தலைமுடி, சருமம் மற்றும் நகங்களில் காணப்படும் இயற்கையான நார்ச்சத்துள்ள கட்டமைப்பு புரதக் குடும்பத்தின் ஒரு அங்கமாகும் இந்த கெரட்டின். உங்கள் உடலின் இத்தகைய பகுதிகளை கட்டமைப்பதற்கு உறுதுணையாகவும், சீரமைக்கும் பணிக்கு உதவியாகவும் இந்தப் புரதங்கள் செயல்படுகின்றன. அது சிறப்பாகவும், நல்லதாகவும் செயல்பட்டாலும், உண்மையில் கெரட்டின் என்ன செய்கிறது? கெரட்டின் தலைமுடியை நேராக்கி மற்றும் மென்மையாக்குகின்றது. மேலும், சுருட்டையை நீக்கி, தலைமுடிக்கு வலிமையை சேர்க்கிறது. தரமான டிப்-டாப் கூந்தலை பெற விரும்பும் பல நபர்களால் கெரட்டின் சிகிச்சைகள் மிகவும் மதிக்கப்படுகிறது. நீங்கள் இன்னும் அதைப் பற்றி மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் எனில், கவலைப்பட வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்கள் தலைமுடி பராமரிப்பில் கெரட்டின் சேர்ப்பதனால் கிடைக்கும் ஐந்து நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

 

01. இது உங்கள் முடியைப் பாதுகாக்கிறது

01.  இது உங்கள் முடியைப் பாதுகாக்கிறது

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நாங்கள் பார்த்துக கொள்கிறோம். அல்ட்ரா வய்லெட் பாதுகாப்பு பற்றிய இரண்டாவது யோசனையே இருக்கக் கூடாது. நேரான முடிக்கு உத்தரவாதம். வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்கான கெரட்டின் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பாகும். வெப்ப சேதம் மற்றும் ஹீட் ஸ்டைலிங் என்று வரும்போது, அந்த வெப்பத்தை தடுக்கும் பணி மற்றும் பாதுகாக்கும் பணி ஆகிய இரண்டையும் இந்த கெரட்டின் சிகிச்சைகள் சிறப்பாக செய்கின்றன. மேலும் தலைமுடிக்கு அதன் பளபளப்பையும் மற்றும் அழகிய வடிவத்தை தக்க வைக்க உதவுகிறது. வெப்ப சேதத்திலிருந்து உங்கள் தலைமுடியை பாதுகாப்பதற்கு, கெரட்டின் கலந்த ஏதாவது ஒன்று உங்களுக்குத் தேவையென்று நினைத்தால், Tresemme Keratin Smooth Heat Protection Spray  தான் உங்களுக்கு சிறந்தது. வெப்ப சேதத்திலிருந்து பாதுகாப்பதற்கு, உங்கள் தலைமுடியை கெரட்டின் அடிப்படையிலான ஸ்ப்ரேயால் தெளியுங்கள். வெப்பத்தினால் ஏற்பட்ட சேதத்தை பற்றிய எந்த கவலையுமின்றி உங்களுக்கு மென்மையான, பட்டுப் போன்ற மற்றும் பொலிவான கூந்தலுக்கு இது உறுதியளிக்கும்

 

02. இது சுருட்டை முடியை நீக்குகிறது

02.  இது சுருட்டை முடியை நீக்குகிறது

கோடை காலம் முடிவடைந்தாலும், ஈரப்பதம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஈரப்பதத்தை பாதுகாக்கவும், கெரட்டின் சிகிச்சையை வீட்டிலிருந்தபடியே பயன்படுத்துவதே உங்கள் தலைமுடியை சுருட்டையாகாமலும், மென்மையாகவும் வைத்திருப்பதற்கான சரியான வழியாகும். ஏனெனில் இதிலுள்ள மூலப்பொருட்கள் முடி மெலிந்து போகாமலும், சுருட்டையாகாமலும் வைத்திருக்க இந்த சிகிச்சை உதவுகிறது. TRESemmé Keratin Smooth Deep Smoothing Mask ,ஐ பயன்படுத்தி கெரட்டின் சிகிச்சையை வீட்டிலிருந்து கொண்டே நீங்களே சிகிச்சை செய்து பழகிக் கொள்ளுங்கள். மருலா எண்ணெயின் நற்பண்புகள் இதில் நிரப்பப்பட்டுள்ளதால், இதை நீங்கள் தடவிக் கொண்டப் பிறகு உங்களின் கூந்தலுக்கு மென்மையையும், பளபளப்பையும் கொடுக்கிறது. ஷாம்புப் போட்டுக் குளித்தப் பிறகு உங்கள் தலைமுடியில் இந்த மாஸ்க்கை தாராளமாக தடவிக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பிறகு தலைமுடியை நன்றாக அலசவும்.

 

03. உங்கள் தலைமுடிக்கு வலிமையைத் தருகிறது

03. உங்கள் தலைமுடிக்கு வலிமையைத் தருகிறது

கூந்தலில் கெரட்டினை பயன்படுத்துவதால், உங்கள் கூந்தலின் வேர்களுக்கும், மயிர்க்கால்களுக்கும் இடையேயான பிணைப்புகள் திறந்திருப்பதை உறுதிசெய்கிறது. மேலும் தலைமுடியுடன், வேர்களின் பிணைப்பு மீண்டும் புரதத்துடன் பிணைக்கப்படுகின்றன. உங்கள் வேர்களுடன் உங்கள் கூந்தல் பாதுகாப்பாக இணைக்கப்படும் என்பதே இதன் பொருளாகும். இது உங்கள் தலைமுடி உதிர்வையும் தடுத்து, தலைமுடி மெலிந்து போகாமல் இருக்கவும் உதவிச் செய்கிறது.

 

04. சுருள் முடியைப் பாதுகாக்கிறது

04. சுருள் முடியைப் பாதுகாக்கிறது

நீங்கள் உங்கள் தலைமுடியை நேராக வைத்துக் கொள்ள விரும்பினாலோ அல்லது உங்கள் இயற்கையான சுருட்டை முடியை பாதுகாக்க விரும்பினாலோ, இதற்கு கெரட்டின் சிகிச்சை மிகவும் சிறந்தது. வீட்டிலிருந்து கொண்டே கெரட்டின் சிகிச்சை செய்து கொண்ட பிறகு, உங்கள் தலைமுடி வலிமைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் ஸ்டைலிங் செய்து கொள்ளும் போது தலைமுடி அவ்வளவு எளிதில் உடையாமல் இருப்பதையும் நீங்கள் உணரலாம். உங்கள் தலைமுடியை நேராக்க விரும்பாவிட்டாலும், கெரட்டின் சிகிச்சை உங்கள் சுருட்டை முடிகளை நீக்கி சீராக்க உதவுவதோடு, இது உங்கள் தலைமுடியை நன்கு பராமரிக்கவும் உதவி செய்கிறது.

 

05. மாஸ்யர் மற்றும் பளபளப்பையும் அதிகரிக்கிறது

05. மாஸ்யர் மற்றும் பளபளப்பையும் அதிகரிக்கிறது

உங்கள் உச்சந்தலையின் மேற்பரப்பின் மீது தலைமுடியின் வெளிப்புறப் பகுதி பாதிக்கப்படும் போது, குறைந்தளவே ​​ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் கெரட்டின் சிகிச்சை இவையெல்லாவற்றையும் சரி செய்து விடும். உச்சந்தலையின் மீதுள்ள தலைமுடிகளை குணப்படுத்தும் போது, உங்கள் தலைமுடியிலுள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். தலைமுடிக்கு அதிக ஈரப்பதம் கிடைத்தவுடன், நீங்கள் ட்ரை கூந்தலுக்கு வழியனுப்பி விட்டு, மென்மையான, பளபளப்பான முடியை உங்கள் வாழ்க்கைக்குள் வரவேற்கலாம். கூடுதல் போனஸ் : உங்கள் தலைமுடி ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதால், கூந்தலின் முடிமுனையில் குறைவான பிளவுகளே உருவாகும். மென்மையான, பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு TRESemmé Keratin Smooth Hair Serum ஐ நீங்கள் பயன்படுத்துங்கள். சீரம்மில், கேமிலியா எண்ணெயின் பண்புகள் அடங்கியுள்ளதால் இந்த சிகிச்சையில் தவறுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அதன் விளைவாக கிடைக்கும் நன்மைகளை மட்டுமே மேம்படுத்தும்.

பிரத்யேகப் புகைப்பட உதவி : @katrinakaif