பெரிய மற்றும் சாதாரண நிகழ்ச்சிக்கான உங்கள் கூந்தல் திட்டம் இது தான் என்றால், நீங்கள் பின்னல் அமைத்துக்கொண்டு செல்லலாம். பெரும்பாலான பெண்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். ஆனால், மென்மையான மற்றும் மெல்லிய கூந்தல் கொண்ட பெண்களுக்கு இது சரியாக வராது. அவர்கள் கூந்தலை அழகாக பின்னிக்கொள்ள முயலும் ஒவ்வொரு முறையும், இளகிவிடக்கூடிய பின்னலை பெற்று சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு ஒரு வழி இருக்கிறது. உங்களுக்கு உதவக்கூடிய உத்திகளை அளிக்கிறோம். உங்கள் பின்னலை அடர்த்தியாக தோன்றச்செய்யக்கூடிய இந்த வழிமுறைகளை பின்பற்றிப்பாருங்கள்.
· தலைமுடி வாருவது
· இழுப்பது, அகலமாக்கல்
· மூன்று பின்னல்
· சரியான பின்னல்
தலைமுடியை சரியாக வாருவது

உங்கள் தலைமுடியை பின்பக்கமாக வாருவது, கூந்தலின் அடர்த்தியை அதிகமாக்கி, பின்னலை முழுமையாக தோன்றச்செய்கிறது.
டோனி &கெய் கேஷுவல் சிணீsuணீறீ : சீ சால்ட் டெக்சரிங் ஸ்பிரே போன்ற டெக்சர் அளிக்ககூடிய ஸ்பிரேவை பயன்படுத்தி கூந்தலை வாரலாம். இப்போது உங்களுக்கு பிடித்தமான பின்னலை செய்து கொள்ளவும். இது அடர்த்தியான பின்னலை அளிக்கும். குறிப்பு: மீன் வால் பின்னலுக்கு பொருத்தமாக இருக்கும்
இழுத்து, அகலமாக்கல்

இந்த உத்தி பான் கேக்கிங் என சொல்லப்படுகிறது. உங்கள் தலைமுடியில் இருந்து சில கொத்துகளை தனியே இழுப்பது, அதை பெரிதாகவும், அடரித்தியாகவும் தோன்றச்செய்யும். நீங்கள் விரும்பும் பின்னலை அமைத்து, பின்னல் பகுதிகளை இழுத்து தளரச்செய்யவும். இது அகலத்தை அதிகமாக்கி கூந்தலை முழுமைய தோற்றம் பெற வைக்கும். குறிப்பு: போஹோமிய பின்னல்களுக்கு ஏற்றது.
மூன்று பின்னல்

வீவிங் முறை, பின்னலை அடர்த்தியாக்குவதோடு, நீளமாகவும் ஆக்குகிறது. கூந்தலை மூன்று பகுதியாக பிரிக்கவும். ஒவ்வொரு பகுதியையும் வழக்கமான முறையில் பின்னிக்கொள்ளவும். இப்போது மூன்று பின்னல்களையும் ஒன்றாக சேர்த்து பின்னிக்கொள்ளவும். நல்ல தோற்றம் அளிக்கும். குறிப்பு: பாரம்பரிய மூன்று பின்னல் முறைக்கு ஏற்றது.
சரியான பின்னல்

மிகவும் முக்கியமான சரியான பின்னலை அடையாளம் காண்பது. ஒரு சில கூந்தல் அமைப்புக்கு சில வகை பின்னல்கள் அடர்த்தியாக காட்சி அளிக்கும். டச்சு பின்னல்களை விட பிரெஞ்சு பின்னல்கள் எப்போதுமே அடர்த்தியானது. மீன்வால் பின்னல், கயிறு பின்னலைவிட அடர்த்தியானது. நேர்த்தியான, மெல்லிய பாக்சர் பின்னல்களை விட, இழுக்கும் பின்னல்கள் அடர்த்தியானவை.
ஒளிப்படங்கள்: பிண்டிரெஸ்ட் (தி லேட்டஸ்ட் ஸ்டைல், சதர்ன்வெட்டிங்ஸ் .காம் , ஹேர் ஸ்டைல்.காம்)
Written by Team BB on 22nd Feb 2019