உங்களின் கூந்தல் என்ன டைப், அதன் நீளம் என்ன, தன்மை என்ன என்பது ஒரு மேட்டரே அல்ல. அப்படி எந்த வித்தியாசமும் இல்லாமல் பலருக்கும் இருக்கக்கூடிய பிரச்சனைதான் கூந்தல் உடைதல். இது பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனை. நுனி வெடிப்பு, உலர்வான கூந்தல் பிரச்சனை கொண்டவர்களுக்கு முடி உடைதல் அதிகம் ஏற்படும். கூந்தல் பராமரிப்பு எளிதான காரியம் அல்ல. ஆனால் சரியான வழிமுறைகளை பின்பற்றினால் அது கடினமானதும் அல்ல. சரியான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதோடு உங்கள் கூந்தலை ஜென்டிலாக கையாள வேண்டும்.

உங்கள் கூந்தலை நாசமாக்கும் சில பழக்க வழக்கங்களிலிருந்து வெளியேறுவதற்கு இந்தக் கட்டுரையில் நாங்கள் உதவப் போகிறோம். நீங்கள் உடனே செய்ய வேண்டிய சிகை நல மாற்றங்கள் இவை.

 

முடி சிக்கெடுத்தல்

முடி சிக்கெடுத்தல்

வறண்ட, சுருள் முடியில் சிக்கெடுப்பது கடினமான காரியம்தான். ஆனால் சிக்கெடுக்காமல் அப்படியே விட்டுவிடாதீர்கள். அது உங்கள் கூந்தலை பலவீனமாக்கி, உடைதலுக்கு காரணமாக மாறும். அகலமான பல் கொண்ட சீப்பினை பயன்படுத்தி அல்லது விரல்களால் சிக்கெடுக்கவும். கூந்தல் ஈரமாக இருக்கும்போது முடி வாரக்கூடாது. கூந்தல் உடைவதைத் தடுக்க லேசாக ஈரம் இருக்கும் போதே முடிச்சுகளை நீக்க வேண்டும்.

 

ஹீட் ஸ்டைலிங் கருவிகளை அதிகமாக பயன்படுத்தக்கூடாது

ஹீட் ஸ்டைலிங் கருவிகளை அதிகமாக பயன்படுத்தக்கூடாது

எப்போதாவது ஹீட் ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அதிகமாக பயன்படுத்தினால் முடியில் இருக்கும் ஈரப் பதம் காணாமல் போகும். ஸ்டைலிங் கருவிகளினால் ஏற்படும் சூடு முடிக்கு டேமேஜ் ஏற்படுத்தும். அதனால் அடிக்கடி ஹீட் ஸ்டைலிங் கருவிகள் பயன்படுத்த வேண்டாம். டிரெஸம் கேராடின் ஸ்மூத் ஹீட் ப்ரடக்ஷன் ஷைன் ஸ்ப்ரே (Tresemme Keratin Smooth Heat Protection Shine Spray) பயன்படுத்திய பிறகே ஸ்ட்ரெய்டனர் அல்லது கர்லர் பயன்படுத்த வேண்டும்.

 

கூந்தலை அதிகம் ப்ரஷ் செய்யக்கூடாது

கூந்தலை அதிகம் ப்ரஷ் செய்யக்கூடாது

ஒரு நாளில் 100 முறை ஹேர் ப்ரஷ் பயன்படுத்தினால் கூந்தலின் தரமும் ஆரோக்கியமும் சூப்பராக இருக்கும் என்பது போன்ற கதையைக் கேட்டிருக்கிறீர்களா. அதெல்லாம் பாட்டி வடை சுட்ட கதை மாதிரி. அதையெல்லாம் நம்பாதீர்கள். அடிக்கடி ஹேர் பிரஷ் செய்தால் முடி உலர்ந்து போய்விடும். இதனால் கூந்தல் உடையும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2-3 முறைக்கு மேல் ஹேர் பிரஷ் பயன்படுத்த வேண்டாம்.

 

டவலால் முடியை பின்னிப் பெடல் எடுக்கக்கூடாது

டவலால் முடியை பின்னிப் பெடல் எடுக்கக்கூடாது

டவலால் முடியை மிகவும் அழுத்தி, தேய்த்து துடைக்கக்கூடாது. எவ்வளவு லேட்டானாலும், எவ்வளவு அவசரம் என்றாலும் அதைச் செய்யாதீர்கள். அதில் ஏற்படும் உராய்வு, கூந்தல் எளிதாக உடைவதற்கு காரணாக இருக்கும். அதற்கு பதிலாக காட்டன் டி-ஷர்ட் எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஈரமான முடியில் சிறிது நேரம் கட்டி வைப்பது மூலம் தேவையற்ற ஈரத்தை துடைக்கலாம்.