கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஐந்து எளிய வழிகள்

Written by Team BB19th Aug 2018
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஐந்து எளிய வழிகள்

பாட்டிகள் போல வரமுடியாது அல்லவா? பாட்டி என்று வரும் போது, அன்பு, உணவு, பரிசுகள், வீட்டு வைத்தியம் மற்றும் தலை மசாஜ் குறிப்புகள் என எல்லாமே அபிரிமிதமாக இருக்கும்.

இந்த மசாஜ்கள் உங்கள் சிறுவயது நினைவுகளுடன் பின்னியிருக்கலாம். இன்றைய அவசர உலகில், பாட்டி மற்றும் அத்தைகளின் அருகாமை குறைந்துவிட்டாலும், அவர்களின் அனுபவ குறிப்புகளின் பலனை நாம் தொடர்ந்து பெறலாம்.

உங்கள் கூந்தலை வலுவாக்க உதவக்கூடிய, எண்ணெய் சார்ந்த ஐந்து எளிய குறிப்புகளை வழங்குகிறோம்.
 

 

கருவேப்பிலை + தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் + ஆலிவ் ஆயில்

நம் சமையலைறைகளில் எளிதாக கிடைக்கும் கருவேப்பிலை தான், உங்கள் கூந்தலுக்கான அற்புத பொருளாகும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகள், ஆண்டிஆக்சிடெண்ட், அமினோ அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ள கருவேப்பிலை, மயிர்கால்களை வலுவாக்கி முடி உதிர்வதை தடுக்கிறது. கருவேப்பிலையில் பீட்டார் கார்ட்டோன் மற்றும் புரதம் அதிகம் இருப்பதால் தலைமுடி நன்றாக வளரவும் வழி செய்கிறது.  

எப்படி?:
கொஞ்சம் கருவேப்பிலையை வெயிலில் இரண்டு நாள் காய வைக்கவும். பின்னர் அதை 100 மிலி தேங்காய் எண்ணெயில் காய்ச்சவும். சூட்டில் இருந்து அகற்றி ஆற வைக்கவும். பின்னர் அதை வடிகட்டி தலையில் தடவி கூந்தலையும்,உச்சந்தலையையும் நன்றாக மசாஜ் செய்யவும்.  
 

 

கருஞ்சீரகம் + ஆலிவ்/தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் + ஆலிவ் ஆயில்

பாட்டிகள் அதிகம் பயன்படுத்தும் இன்னொரு இயற்கை பொருள் கருஞ்சீரகம். இவற்றில் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் மாங்கனீசு, துத்தநகம், இரும்பு பொட்டாஷியம், பேட்டி ஆசிட்ஸ் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை கூந்த்த பிரச்சனைகளை போக்க வல்லவை. உங்கள் கூந்தல் எண்ணெயுடன் கருஞ்சீரகம் சேரும் போது, முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, தலைமுடி நிலையையும் சீராக்குகிறது. இதை பயன்படுத்தும் வழிமுறை:

எப்படி:
ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை நன்றாக பொடியாக்கி கொள்ளவும். ஒரு பாட்டிலில் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு அதில் இந்த விதைகளை சேர்க்கவும். 2 அல்லது 3 நாள் கழித்து பயன்படுத்த துவங்கலாம். ஒவ்வொரு முறையும் இந்த எண்ணெயின் கொஞ்சம் எடுத்து சூடாக்கி, தலை முடியில் தடவி மசாஜ் செய்யவும்.  
 

 

கற்பூரம் + விளக்கெண்ணெய் + ஆலிவ் எண்ணெய்

நெல்லிக்காய் + ஆலிவ் ஆயில்

கற்பூரம் சருமம் மற்றும் கூந்தலுக்கு நலன் பயக்கும் தன்மை கொண்டதால் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பாட்டியின் குறிப்புகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் தன்மை அதிகம் கொண்டிருப்பதால் கற்பூரம் மயிர்கால்களை வலுவாக்கி, உலர் முடியை பொலிவாக்கி, அடர்த்தியையும் அளிக்கிறது. தலைமுடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனைக்கும் தீர்வாகிறது.  

எப்படி:
கற்பூர எண்ணெய்,விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயிலை சமமாக கலந்து தலைமுடி மீது தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பயன்படுத்தும் முன் சூடாக்கி கொண்டால் தலைமுடியில் நன்றாக் ஊடுருவும்.  
 

 

வேம்பு + பாதாம் எண்ணெய்

நெல்லிக்காய் + ஆலிவ் ஆயில்

பொடுகு தான் உங்கள் முக்கிய கூந்தல் பிரச்சனையாக இருக்க வேண்டும். பாட்டிகளிடம் இதற்கும் வைத்தியம் இருக்கிறது.  வேப்பிலை, ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் பேட்டி ஆசிட் நிறைந்திருப்பதோடு , புண் மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் ஆற்றலும் பெற்றது. இந்த மருத்துவ குணங்கள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக்கி, பொடுகையும் நீக்குகிறது.

எப்படி:
இரண்டு நாள் கொஞ்சம் வேப்பிலையை காய வைக்கவும். வேப்பிலை சேர்த்து 100 மிலி பாதாம் எண்ணெயை காய வைக்கவும். ஒரு வார காலம் இது ஊறட்டும். இடைப்பட்ட காலத்தில் இது பச்சையாக மாறியிருக்கும். அதன் பிறகு வடிகட்டி பயன்படுத்தவும்.  
 

 

நெல்லிக்காய் + ஆலிவ் ஆயில்

நெல்லிக்காய் + ஆலிவ் ஆயில்

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் அடர்த்தியான கருமையான கூந்தல் விரும்புகிறவர்களுக்கான அருமையான பொருளாகும்.

எப்படி:
கொஞ்சம் உலர் நெல்லிகாய் எடுத்து, ஆலிவ் ஆயிலில் காய்ச்சவும். ஒரு வார காலம் இப்படியே இருக்கட்டும். கண்ணாடி பாட்டிலில் வைத்து வாரம் இரு முறை பயன்படுத்தவும்.
 

Team BB

Written by

8488 views

Shop This Story

Looking for something else