தூசு, மாசுபாடு, ஈட் ஸ்டைலிங் சாதனங்கள் மற்றும் தினசரி ஏற்படும் பாதிப்புகள் – இந்த அனைத்து பிரச்னைகளையும் கூந்தல் கடந்து செல்கிறது. அதன் விளைவாக, உங்கள் ப்ரஷ்ஷில் முடி சிக்கும், தோள்பட்டையில் வெள்ளை பொடுகுகள் தென்படும், பொலிவற்ற மற்றும் மெலிந்த முடிகள் போன்றவற்றால் நாம் தொடரந்து வேதனைப்பட வேண்டுமா? நம் தலைமுடிக்கு நாம் கொடுக்கும் தொல்லைகளின் பிரதிபலனாக, அதை பராமரிக்க நல்ல கவனிப்பும் ஊட்டமும் தேவைப்படுகிறது, இதற்கு சரியான தயாரிப்புகளை பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியமாக்க முடியும்.
நம்முடைய அழகு சாதனப் பெட்டிக்குள் ஷாம்புக்கள் வைத்திருக்க வேண்டியதும் மிகவும் அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான தலைமுடி பராமரிப்பு பொருட்களாகும். அலமாரியில் இருந்து ஏதாவது ஒரு ஷாம்புவை எடுத்து உங்கள் தலைமுடியில் பயன்படுத்துவதனால் அது உங்களை மேலும் பல தொல்லைகளை உருவாக்கும். அதனால்தான் நீங்கள் ஷாம்புக்களை தேர்ந்தெடுக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
உங்களின் எல்லாவித தலைமுடி பிரச்னைகளுக்கும், ஒவ்வொரு கூந்தலுக்குமேற்ற வகையிலான சிறந்த ஷாம்புக்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். பொடுகு முதல் முடி உதிர்தல் வரையிலான அனைத்தையும் இத்தகைய ஷாம்புக்கள் சமாளிக்கும். வேண்டுமானால் பரிசோதித்துப் பாருங்கள்.
- 01. தலைமுடி உதிர்தல் – ட்ரஸ்மீஸ் ஹேர் ஃபால் டிஃபென்ஸ் ஷாம்பு
- 02. பொடுகு - டோவ் டேன்ட்ரஃப் க்ளீன் & ஃபரஷ் ஷாம்பு
- 03. தலைமுடியின் நிறம் மாற்றம் – ட்ரஸ்ஸெம் ப்ரோ ப்ரொடக்ட் சல்பேட் ஃப்ரீ ஷாம்பு
- 04. சுருட்டை முடி – லவ் ப்யூட்டி & ப்ளானட் நேச்சுரல் ஆர்கன் ஆயில் லாவெண்டர் ஆன்ட்டி-ஃப்ரிஸ் ஷாம்பு
- 05. தலைமுடி – டோவ் இன்டென்ஸ் ரிப்பேர் ஷாம்பு ஃபார் டேமேஜ்ட் ஹேர்
- 06. மெலிந்த மற்றும் தட்டையான தலைமுடி – லவ் ப்யூட்டி ப்ளானட் நேச்சுரல் கோகோநட் வாட்டர் மிமோஸா வால்யூம் ஷாம்பு
01. தலைமுடி உதிர்தல் – ட்ரஸ்மீஸ் ஹேர் ஃபால் டிஃபென்ஸ் ஷாம்பு

உங்கள் தலையணை, குளிக்கும் போது நீர் செல்லும் வடிகால் மற்றும் நீங்கள் செல்லும் எல்லா இடங்களிலும் முடிஉதிர்வதை காணும் போது கவலையாக இருக்கிறது கவலை வேண்டாம். முடிஉதிர்தலை தடுக்க TRESemmé Hair Fall Defense Shampoo. க்கு மாறி, அதைப் பயன்படுத்தத் தொடங்குவதன் மூலம் முடிஉதிர்தலை தடுக்க வேண்டிய நேரமாகும். இந்த ஷாம்பு கெரட்டின் புரதங்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுவதால், ஒரு முறை பயன்படுத்தியவுடனேயே இது தலைமுடியை பலப்படுத்துவதுடன், 97% வரை முடி உதிர்தலை தடுக்கவும் உதவி செய்கிறது. இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதற்கும், தலைமுடியிலிருக்கும் சிக்குகளை எளிதில் நீக்கவும் உதவி புரிகிறது. அதுமட்டுமன்றி தலைமுடியை சீப்பினால் சீவும்போது கொட்டும் முடிஉதிர்தலையும் குறைக்க உதவுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கியபின், தலைமுடி உதிர்வது குறைந்து, உங்கள் தலைமுடி வலுவாகவும், நீளமாகவும் இருப்பதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
02. பொடுகு - டோவ் டேன்ட்ரஃப் க்ளீன் & ஃபரஷ் ஷாம்பு

உங்கள் கூந்தலில் தொடர்ந்து அரிப்பு ஏற்படுவதும் மற்றும் சங்கடத்தை ஏற்படும் உங்கள் தோள்பட்டையிலுள்ள வெள்ளை பொடுகுகளும் இருந்தால், நீங்கள் Dove Dandruff Clean & Fresh Shampoo வை நீங்கள் பயன்படுத்துவதற்காக எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான பொடுகு ஷாம்புகளை பயன்படுத்திய பிற்கு உங்கள் தலைமுடியை எந்தளவுக்கு வறட்சியடையச் செய்கின்றன என்பது பற்றி உங்களுக்கு தெரியாது. கவலைப்பட வேண்டாம். இந்த ஷாம்பு அப்படி செய்யாது. ஏனெனில், ஒரு தனித்துவமான மைக்ரோ மாஸ்யர் சீரம் மூலம் தயாரிக்கப்படுவதால், இது உங்கள் தலைமுடியை மாஸ்யரைஸிங் செய்யும் அதேநேரத்தில் பொடுகை நீக்குகிறது. இந்த ஷாம்பு குளிர்ச்சியை தருவதால், இது அரிப்பு காரணமாக ஏற்படும் வீக்கத்தைத் தணிக்க மிகவும் அவசியம்.
03. தலைமுடியின் நிறம் மாற்றம் – ட்ரஸ்ஸெம் ப்ரோ ப்ரொடக்ட் சல்பேட் ஃப்ரீ ஷாம்பு

ஹைர்டைக்களில் அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற இரசாயனங்கள் சேர்க்கப்படுவதனால், உங்கள் தலைமுடியை சொரசொரப்பாக்கும் மற்றும் சேதத்தை உண்டாக்கும். அதனால், உங்கள் தலைமுடிக்கு பொலிவும், ஊட்டச்சத்தும் கிடைப்பதற்கு அதன்மீது மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். உங்கள் கூந்தலின் நிறம் மாற்றத்திற்கான சிகிச்சைக்கு TRESemmé Pro Protect Sulphate Free Shampoo மிகவும் ஏற்றதாக இருக்கும். இது முடி நிறத்தை மாற்றக்கூடிய சல்பேட்டும், பாராபென்னும் இதில் சேர்க்கப்படவில்லை.
இது உங்கள் முடியை மென்மையாக சுத்தம் செய்யக்கூடிய இந்த ஷாம்புக்கள், மொராக்கோ ஆர்கன் எண்ணெயுடன் வருகிறது. இது உங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டத்தை அளிப்பதுடன், அவற்றிற்கு நீண்ட புத்துணர்ச்சியையும், பொலிவையும் தருகிறது.
04. சுருட்டை முடி – லவ் ப்யூட்டி & ப்ளானட் நேச்சுரல் ஆர்கன் ஆயில் லாவெண்டர் ஆன்ட்டி-ஃப்ரிஸ் ஷாம்பு

உங்கள் தலைமுடி சுருட்டையாக மாறுவதற்கு அதிக ஈரப்பதம், தொடர்ந்து ஈட் ஸ்டைலிங் சாதனங்களை பயன்படுத்துவது, அடிக்கடி தலைக்கு குளித்தல், முடிகளின் முனைகளில் பிளவு, முதலிய பல காரணங்கள் உண்டு. அதனால்தான் Love Beauty & Planet Natural Argan Oil & Lavender Anti-Frizz Shampoo. வை உங்கள் கைவசம் எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது கையால் நசுக்கி பிழிந்தெடுக்கப்பட்ட ஆர்கான் எண்ணெயால் ஆனது. இது உங்களுக்கு மென்மையான மற்றும் சுருட்டையில்லாத கூந்தலை அளிக்கும். கூடுதலாக, பிரெஞ்சு லாவெண்டரிலிருந்து குறிப்பிட்ட நெறிமுறையுடன் பிரித்தெடுக்கப்பட்ட இந்த எண்ணெயின் வாசனை உங்கள் கூந்தலுக்கு அமைதியான சூழலை ஏற்படுத்தும். இதன் சிறப்பே என்னவென்றால் இது ஒரு சைவ பிராண்ட் ஆகும். இது கொடுமையற்ற, பாராபென் இல்லாத, சாயம் சேர்க்கப்படாத மற்றும் சிலிகான் இல்லாத ஒரு தயாரிப்பாகும். இந்த தயாரிப்புகள் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டில் வருவதால் உங்கள் கூந்தல் மற்றும் உலகமும் உங்கள் கைகளில் பாதுகாப்பாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
05. தலைமுடி – டோவ் இன்டென்ஸ் ரிப்பேர் ஷாம்பு ஃபார் டேமேஜ்ட் ஹேர்

ஈட் ஸ்டைலிங் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, மன அழுத்தம், அதிகப்படியான அடிக்கடித் தலைக்குக் குளிப்பது போன்ற செயல்கள் தலைமுடிக்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தும். இப்படி மோசமான நிலையிலுள்ள உங்கள் தலைமுடியை சீராக்க Dove Intense Repair Shampoo For Damaged Hair போன்ற ஷாம்புவை எப்போதும் உங்கள் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் தலைமுடிக்கு நல்ல ஊட்டமளிக்கக் கூடிய செறிவூட்டப்பட்ட நார்ச்சத்துக்கள் மற்றும் கால் பங்கு மாஸ்யரைஸிங் பால் நிறைந்த இந்த ஷாம்பு, சேதமடைந்த உங்கள் முடிக்கு ஒரு ஆழமான சிகிச்சையளித்து, உங்கள் முடியை மிருதுவாகவும் மென்மையாகவும் மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற உதவி செய்கிறது. இந்த ஷாம்பூவில் பாராபென்ஸ் அல்லது ஹேர்டைகள் சேர்க்கப்படாததால், உங்களுடைய சேதமடைந்த கூந்தலுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது என்பதால்தான் இதை நாங்கள் விரும்புகின்றோம்.
06. மெலிந்த மற்றும் தட்டையான தலைமுடி – லவ் ப்யூட்டி ப்ளானட் நேச்சுரல் கோகோநட் வாட்டர் மிமோஸா வால்யூம் ஷாம்பு

உச்சந்தலையில் அதிகப்படியான சீபம் சுரப்பதினால் உங்கள் முடியை எடைக் கூடி முன்பக்கம் சாயும் போது, அது மெலிந்த மற்றும் உயிரோட்டமில்லாத தோற்றமாக மாற்றிவிடும் என்பது உங்களுக்குத் தெரியாது. மேலும், மோசமான ஷாம்புவைப் பயன்படுத்தும் போது உங்கள் தலைமுடியின் அனைத்து இயற்கை எண்ணெய்ச் சத்துக்களை அகற்றி விடும். அதோடு அந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உங்கள் செபாசியஸ் சுரப்பிகள் அதிகமான எண்ணெய்யை உற்பத்தி செய்யும். இந்த மோசமான சுழலில் விழுவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை. அதனால், Love Beauty & Planet’s Natural Coconut Water & Mimosa Volume Shampoo வை எப்போதும் உங்களிடம் வைத்திருக்க வேண்டும்.
தாவர அடிப்படைக் கொண்ட க்ளீன்சர்கள் மற்றும் இயற்கையான தேங்காய் நீரால் தயாரிக்கப்பட்ட இந்த ஷாம்பு போதுமான ஹைட்ரேஷனை அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய மெலிந்து மற்றும் உயிரற்றக் கூந்தலுக்கு புத்துணர்ச்சியையும், உயிர்ப்பையும் அளிக்கிறது. கூடுதலாக, இதில் மொரோக்கன் மிமோசாக்கள் இருப்பதால், உங்கள் தலைமுடியை நீண்ட நேரத்திற்கு மலரின் வாசனையுடன் வைத்திருக்கும்.
Written by Kayal Thanigasalam on 16th Sep 2021