வைட்டமின் Cயினால் சருமத்திற்கு பல நன்மைகள் உண்டு என்றும், வயதைக் குறைத்துக் காண்பிப்பதற்கு அதை வாங்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்மையில். வைட்டமின் Cயை உள்ளடக்கிய சீரம் என்ன செய்ய முடியாது? பிரகாசமாக்குதல், நீர்ச்சத்தை அதிகரிப்பது முதல் அதிகளவு நிறமாறுதல் மற்றும் வயது முதிர்ச்சி போன்ற அறிகுறிகளை எதிர்கொள்வது வரை பலவிதமான நன்மைகளை நம்முடைய சருமத்திற்கு இந்த மூலப்பொருள் அளிப்பதைக் கண்டு நாம் நிம்மதிப் *பெருமூச்சு விட்டோம்*. எங்களுக்குத் தெரியும், நாம் சமீபத்தில் ஒரு வகையான வைட்டமின் சி சீரம் குறித்து தடுமாற்றம் அடைந்தோம், அதைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம். Lakmé 9to5 Vitamin C+ Facial Serumன் மீது நமக்குள்ள பிடிப்பை உடனே நிறுத்த முடியாது. இந்த மென்மையான சீரம் பொலிவின்மை, சரும முதிர்ச்சி, சூரிய வெப்பத் தாக்கம், மாசினால் ஏற்படும் சருமத்தைப் பாதிப்புகள், மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ் போன்ற சருமப் பிரச்னைகளை எதிர்த்துத் தடுத்து நிறுத்தக்கூடிய உயர்ந்த சக்தியுடைய வைட்டமின் Cயுடன், சூப்பர்ஃபுட் காக்கடு பிளம்மை ஆதாரமாகக் கொண்டுள்ளது இந்த மென்மையான சீரம். இது ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளது. மேலும் ஆரஞ்சு பழத்தை விட 100 மடங்கு வைட்டமின் C சக்தியை உள்ளடக்கியுள்ளது. இது கையடக்கமானதாகும். அட, இதை விட சிறப்பானதுக் கிடைக்குமா?

 

இன்று, வைட்டமின் சி சீரம்களை நாம் பரிந்துரைக்கிறோம். நாங்கள் ஏன் பின்வரும் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்று பரிந்துரைக்கிறோம் என்பதை இப்போதுப் பார்ப்போம்

 

01. சருமத்தின் முன்கூட்டிய முதிர்ச்சியை எதிர்க்கும் ஹீரோ

சருமத்தின் முன்கூட்டிய முதிர்ச்சியை எதிர்க்கும் ஹீரோ

வைட்டமின் சி ஒரு ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் என்பதால், இது ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்புகளிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இத்தகைய ரேடிக்கல்ஸ் செல்லுலார் சேதத்தை ஏற்படுத்தும், அதுமட்டுமல்லாமல் இறுதியில், சருமத்தில் வரிகள், சுருக்கங்கள், பொலிவின்மை மற்றும் தொய்வு போன்ற வயதான அறிகுறிகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

 

02. கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது

கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது

இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிற ஒரு மூலப்பொருளானதால், சருமத்தின் வயது முதிர்வை குறைக்கும் சக்தி இதில் உள்ளது. உங்கள் சருமத்தின் நெகிழும் தன்மை மற்றும் உறுதியை பராமரிக்கவும் இந்த கொலாஜன் உதவுகிறது. மேலும், சுருக்கங்கள், கோடுகள், சருமத் தளர்ச்சி, கருவளையம், வயது முதிர்வினால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் கடினமான தன்மையை வெளிப்படாமல் தடுப்பது போன்ற செயல்களுக்கு கொலாஜன் தான் பொறுப்பு. மேலும் உங்கள் சரும தோற்றத்தை இவை அனைத்தும் பளபளப்பாக இருப்பதற்கு வழிவகுக்கிறது.

 

03. பக்கவிளைவுகள் சிறிதும் இல்லாதது

பக்கவிளைவுகள் சிறிதும் இல்லாதது

வைட்டமின் சியைப் பற்றி மக்களுக்கு எந்தவித பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தாத ஒரு மூலப்பொருள் ஆகும். இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும், இது பலவகையான சருமங்களுக்கு ஏற்றதான வகையில் அமைந்துள்ளது. இது உதிர்தல், சிவத்தல் மற்றும் வறட்சியடைதல் போன்ற பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது, ஆனால் இந்தப் பிரச்னைகளெல்லாம் பெரும்பாலும் மென்மையான/மிக மென்மையான சருமத்தை உடையவர்களை மட்டும் தான் அதிகம் பாதிக்கின்றன. இது ரெட்டினோல், ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம், மற்றும் எஸ்பிஎஃப் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் போன்ற வேறு சில செயல்களையும் இது நிறைவேற்றும் தன்மை இதில் உள்ளதால், இந்த பொருட்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் செயல்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

 

04. வீக்கத்தை எதிர்க்கக் கூடிய தன்மைகள்

வீக்கத்தை எதிர்க்கக் கூடிய தன்மைகள்

இது ஒரு ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்டாக இருப்பதால், இது சருமத்தில் வீக்கம் மற்றும் சிவத்தல் போன்ற ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் வீக்கத்தை எதிர்க்கும் ஒரு நல்ல ஏஜென்டாக செயல்பட முடியும், மேலும் காயங்களை மிகவும் திறம்யுடன் குணப்படுத்துகிறது . இன்ஃப்ளமேட்டரி டெர்மடோஸ்கள் எனப்படும் சருமம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் தோற்றமளிக்கும். இது தழும்புகளை மறைக்கவும் உதவுகிறது என்றும் கூறப்படுகிறது.

 

05. ஹைப்பர் பிக்மென்டேஷனை எதிர்க்கிறது

ஹைப்பர் பிக்மென்டேஷனை எதிர்க்கிறது

மெலனின் நம் சருமம் முழுவதும் சமஅளவில் நிறைந்துள்ளது. சருமத்தின் சில பகுதிகளில், மெலனின் அதிகளவு செறிவுள்ளதால், நம் முகத்தின் மற்ற பகுதிகளை விட அந்த பகுதி மட்டும் மிகவும் கருமையாக தோற்றமளிக்கும். இது ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. மெலனின் அதிகளவு உற்பத்தியை வைட்டமின் சி தடுத்து, ஹைப்பர் பிக்மென்டேஷனைச் சமாளிக்கிறது. இது காலப்போக்கில் ஒரு சீரான சரும நிறம் தோன்றுவதற்கான வழியை ஏற்படுத்துகிறது..