உங்கள் கண்களுக்கு மேலும் வண்ணம் சேர்க்க விரும்புகிறீர்களா? அதற்கு எளிமையான ஐமேக்கப்பே போதுமானது!

தினசரி உங்கள் பீப்பர்களை மாற்றியமைக்க ஐஷேடோவைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நமக்கு பளபளப்பான கண்கள் பிடிக்கும் என்றாலும், ஐ மேக்கப்பை எப்படி செய்வது என்பதையும், தினசரி அணியும் உடைகளுக்கேற்ப பேசிக் ஐஷேடோவை கச்சிதமாக எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம், ஏனென்றால் நமது மேக்கப் மென்மையாக இருக்க வேண்டும், முகத்தில் அடிக்கும்படி இருக்கக்கூடாது. விரைவாக ஐ மேக்கப் செய்வதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உதவுவதற்காக இதோ ஒரு கையேடு…

ஐஷேடோவை எப்படி கச்சிதமாகப் பூசுவது என்பதை அறிய, முதலில் உங்களிடம் சரியான கருவிகள் இருக்க வேண்டும். இதில் சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த பேலெட்டுகளில் ஒன்றான லாக்மே 9டு5 ஐ க்வார்டெட், உங்கள் கண்களுக்கு கீற்று போன்ற பளபளப்பை அளிக்கும். உங்கள் கண்களுக்கு கோல்தாட்டின் ஆழமான, அடர்த்தியான மற்றும் நீடித்து நிலைக்கும் மையிடுவதற்கு, உங்களுக்கு பழுப்பு அல்லது கருப்பு நிற லாக்மே ஐகானிக் காஜல் தேவை. மேலும், மஸ்காராவின் பூச்சு இல்லாமல் ஒப்பனை முழுமையடையாது என்பதால், நீங்கள் லாக்மே அப்சல்யூட் ஃப்ளட்டர் சீக்ரெட்ஸ் டிராமாடிக் ஐஸ் மஸ்காராவையும் பயன்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் செய்த பின்னர், ஐஷேடோவை கச்சிதமாகப் பூசுவது மிகவும் சுலபம். இந்தத் தோற்றத்தைப் எப்படிப் பெறுவது:
how to apply eyeshadow 600x400

படிநிலை 1

பேலட்டில் உள்ள பழுப்பு நிற ஐஷேடோவை கண் இமையில் பூசுங்கள். ஆனால் அதைப் பூசுவதற்கு முன்பு அதை உங்கள் பிரஷில் எடுத்து, அதிகப்படியானதை வழித்துவிட மறக்காதீர்கள், இப்படிச் செய்வதால் உங்களுக்கு சரியான அளவில் நிறம் கிடைக்கும், அதோடு பார்ப்பதற்கு அதீதமாகவும் தோன்றாது.


படிநிலை 2

அதே பேலட்டிலிருந்து சாம்பெய்ன் நிறத்தை எடுத்து கண் இமைக்குக் கீழே பூசுங்கள்.


படிநிலை 3

ஒரு கலக்கும் பிரஷ்ஷை எடுத்து, இரண்டு நிறங்களையும் கண்ணுக்குக் கீழுள்ள பள்ளத்தில் ஒன்றாக்குங்கள்.


படிநிலை 4

பழுப்பு நிற காஜலை மேல் மற்றும் கீழ் லேஷ்-லைன் மற்றும் வாட்டர்லைனில் பயன்படுத்துங்கள், ஆனால் முழு இரவுக் கொண்டாட்டத்திற்குச் செல்லும்போது தவிர அதை உள்வரை வரைய வேண்டாம்.


படிநிலை 5

உங்கள் கண்களில் சிறிதளவு ஈர்ப்பைச் சேர்ப்பதற்கு லைனரை உங்கள் விரல் நுனிகளால் கொஞ்சம் பரப்பிவிடுங்கள்.


படிநிலை 6

தோற்றத்தை முழுமையாக்க, மேல் ஐலேஷ்களுக்கும், கீழுள்ளவற்றுக்கும் மஸ்காராவை தாராளமாகப் பூசி அவற்றை நீளமாக்குங்கள்.

இந்தப் படிநிலைகள் மூலம் நீங்கள் பேசிக் ஐ-ஷேடோ பூசும் நுட்பத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ளலாம். இதில் சூழ்நிலைகளைப் பொறுத்தும், அணியும் உடையைப் பொறுத்தும் பல நிறங்களைப் பயன்படுத்தலாம், இதுவே உங்கள் ஐ-ஷேடோவைப் பயன்படுத்தி ஸ்மோக்கியான கண்களைப் பெறுவதற்கான உங்கள் பயணத்தின் முதல் மற்றும் மிக முக்கியமான படிநிலை.