கண் மை பூசுவது பெரிய வேலையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அழியாத கண் மை பூச்சுடைய கண்களைப் பெறுவதற்கு, பலவிதமாக கண் மை பூசும் வழிகள் தெரிந்திருக்க வேண்டும். கண் மை பூசும் கலைக்கு நிச்சயமாக திறமை தேவை, அது எப்போதும் கைகொடுக்கும்! எனவே பெண்களே, அந்த செக்ஸியான கண்களை உலகிற்குப் பறைசாற்றுவதற்கான கண் மேக்கப் வழிகாட்டி இதோ; நாள் முழுவதும் அழிந்துபோகாமல், உங்கள் கண்கள் கருப்பாகவும், அழகாகவும் திகழ்வதற்கான எளிமையான, விரைவான வழி!

தினந்தோறும் அல்லது அவ்வப்போது, வாட்டர்-லைன் மற்றும் கண்ணின் கீழ் பகுதியில் கண் மையை எப்படிப் பூசுவது என்பதைக் கற்பதற்கான சிறந்த வழி, லாக்மே ஐகானிக் காஜல் அல்லது அப்சல்யூட் கோல் அல்டிமே காஜலைப் பெறுவதுதான். எப்போதும் அழகான கண் மேக்கப்பைச் செய்வதற்கான டிப்ஸ் இதோ…
இந்தத் தோற்றத்தை எப்படிப் பெறுவது:
how to apply kajal 600x400

படிநிலை 1

கண் இமையின் நடுவிலிருந்து கண் மையைப் பூசத் தொடங்கி, இருபுறங்களிலும் வெளி நோக்கி பூசிச் செல்லுங்கள்.


படிநிலை 2

அது முடிந்தவுடன், அதே கண் மையைப் பயன்படுத்தி வாட்டர் லைனின் நீளத்திற்கு மேல் இமையின் மேல் பூசுங்கள், மேலும் நீங்கள் வழக்கமாக வரையும் கருப்புக் கோட்டையும் வரையுங்கள்.


படிநிலை 3

உங்கள் கண் மைக்கு சிறிது வண்ணம் சேர்க்க, குறிப்பாக அது இரவுநேர மேக்கப்பாக இருந்தால் மற்றும் அதே பழைய கருப்பு மற்றும் பழுப்பு வண்ணங்களைச் சேர்க்க விரும்பாவிட்டால், உங்கள் கீழ் இமையில் ஒரு நிறத்தை சிறிதளவு சேருங்கள். ஐகானிக் ரேஞ்சில் ஒரு பச்சை வண்ண கோலைத் தேர்ந்தெடுத்து, அதை உங்கள் கண் இமைக்கு சற்று கீழே வெளி முனைகளில் பூசுங்கள். அதோடு, உங்கள் கண் மேக்கப்பிற்கு செக்ஸியான மென்மையைச் சேர்க்க, பூசிய கலர் கண் மையை வெளியிலிருந்து உள்ளாக உங்கள் விரல் மூலம் கொஞ்சம் அழியுங்கள். இப்போது உங்களுடைய அழகான கண்களுக்கு வண்ணம் சேர்க்கும் கண் மையை கச்சிதமாகப் பூசிவிட்டீர்கள்.

சிறிய குறிப்புதவி மூலம் கண் மையை எப்படிப் பூசுவது என்பதும், வண்ண கோல் பென்சில்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் இப்போது உங்களுக்குத் தெரிந்துவிட்டது. இது மிகவும் முக்கியம், ஏனென்றால் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு மிக எளிமையான மேக்கப் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.