செக்ஸியான, மென்மையான, பிரமிக்க வைக்கும் சிவப்பு உதடுகளைப் போன்ற மேஜிக் வேறெதுவுமில்லை. சிவப்பான உதடுகள் ஒரு டல்லான நாளைப் பிரகாசமாக்கி, உங்கள் ஒப்பனையை மேலும் ஒரு படி உயர்த்திவிடும். இரவு நேரத்தில் மட்டும்தான் சிவப்பு லிப்ஸ்டிக்கை போட வேண்டும் என்று பெரிய கட்டுக்கதை உலாவுகிறது, ஆனால் அதை நீங்கள் கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ செல்லும்போதும், பலவிதமான உடைகளுக்குப் பொருத்தமாகவும் பூசலாம். பல முறை முயற்சித்தும் சிவப்பு லிப்ஸ்டிக்கை கச்சிதமாக பூச முடியவில்லையா? கவலையை விடுங்கள், கச்சிதமான சிவந்த உதடுகளை எப்படிப் பெறுவதென்று நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கிறோம்.

கச்சிதமான சிவப்பு ஷேடைப் பெறுவதற்கான நல்ல வழி லாக்மே அப்சல்யூட் ஸ்கல்ப்ட் ஸ்டுடியோ மேட் லிப்ஸ்டிக் இன் ரெட் ரஷ். இது ஒரு மேட் லிப்ஸ்டிக்காக இருந்தாலும், இதன் மூலம் பளபளப்பான உதட்டழகையும் பெற முடியும். இருந்தாலும் லிப்ஸ்டிக்கைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர், பிரகாசமான, கச்சிதமான உதட்டழகைப் பெறுவதற்கு உங்களுக்கு லாக்மே 9டு5 லிப் லைனர் இன் ரெட் அலர்ட் போன்ற ஒரு லிப் லைனர் தேவை. இந்தத் தோற்றத்தை எப்படிப் பெறுவது:
how to get perfect red lips 600x400 images

படிநிலை 1

உதட்டு வளைவின் சந்திப்புகளில் லைனர் மூலம் உதடுகளில் கோடு வரையுங்கள். இதைத் தொடர்ந்து, மேல் மற்றும் கீழ் உதடுகளின் வெளிப்புறத்தில் தொடர்ந்து கோடு வரையுங்கள்.


படிநிலை 2

உங்கள் பிரஷில் சிறிதளவு லிப்ஸ்டிக்கைப் பூசி, தேர்ந்தெடுத்த நிறத்தைக் கொண்டு உங்கள் உதடுகளை நிரப்புங்கள்.


படிநிலை 3

உங்கள் உதடுகளில் பூசிய மேக்கப்பை முழுமையாக்க உதவும் ஒரு உதவிக்குறிப்பு இதோ: லைனரும், லிப்ஸ்டிக் பூச்சும் முழுமை பெற்ற பிறகு சிறிதளவு காம்பேக்ட் பவுடரை அதன் மீது பூசுங்கள். இதைச் செய்ய, ஒரு டிஷ்யூவை எடுத்து, உங்கள் உதடுகளின் மேல் சிறிதளவு பவுடரைப் பூசுங்கள். இதைத் தொடர்ந்து உங்கள் உதடுகளுக்கு கச்சிதமான பூச்சை வழங்க லிப் கலரை எடுத்து, இறுதியாக ஒரு முறை உதடுகளுக்கு மேலே தேயுங்கள்

இப்போது நீங்கள் பயப்படாமல் பூசிக் கொள்ளக்கூடிய சிவப்புப் பளபளப்பு உங்களுக்குக் கிடைத்துவிட்டது. இதை அலுவலகத்திற்குச் செல்லும்போது வழக்கமான உடைகளுடன் அல்லது ஒரு ஜாக்கெட்டை அணிந்து செல்லும்போது பூசிச் செல்லுங்கள், 9-5 அலுவலக விளையாட்டை எப்படி ஜெயிக்கிறீர்கள் என்று பாருங்கள். இல்லையென்றால், உங்கள் எல்பிடி உங்களுக்கு உதவ எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்கும்.