கிளாசிக்கான சிவப்பு உதடுகள் எப்போதுமே ஸ்டைலானவை. இருந்தும், ஒரு சிலர் மட்டுமே முயற்சிக்கும் தோற்றம் அது. ஆனால் இந்த ஹை-வோல்டேஜ் நிறத்தை சரியாக அணிந்தால் அது நமது ஸ்கின் டோனை அட்டகாசமாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதை எப்படிச் செய்வது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்லும்போது, அதை அப்படியே பின்பற்றி உங்கள் தோற்றத்திற்கு வண்ணம் சேருங்கள்.

1

சிவப்பு லிப்ஸ்டிக்கை அணியும்போது, உங்கள் ஸ்கின் டோனுக்கு ஏற்ற ஷேடைத் தேர்வு செய்வது முக்கியமானது. சிவப்பான ஸ்கின் டோன் உள்ளவர்களுக்கு கேண்டி ஆப்பிள் சிவப்பு நன்றாகப் பொருந்தும். உங்கள் சருமத்தின் நிறத்திற்கு சிறிதளவு வண்ணம் சேர்க்க நீலநிற அண்டர்டோன் உள்ள ஷேடுகளைப் பயன்படுத்துங்கள். அழகு நிபுணரும், தொழிலதிபருமான இஷிகா தனேஜா கூறுவதைக் கேளுங்கள், “மீடியம் ஸ்கின் டோன்களுக்கு அழுத்தமான, பிரிக் ரெட் பொருத்தமாக இருக்கும். அடிக்கும் நிறத்தில் இருக்கும் என்று கவலைப்பட வேண்டாம்; செர்ரி ரெட்டை விட கொஞ்சம் அடர்த்தியான, ரிச்சான ஒரு ஷேடைத் தேர்ந்தெடுங்கள். சாக்லெட் நிற அழகிகள் பழுத்த மாதுளம் பழம் அல்லது பழுக்காத பிளம் பழத்தின் பர்ப்பிள் நிற சிவப்பைப் பயன்படுத்த வேண்டும். சரியான ஷேடைத் தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் உதட்டின் இயல்பான நிறமும் முக்கிய பங்கு வகிக்கிறது. “வெளிரிய உதடுகளுக்கு செர்ரி அல்லது தக்காளி நிறச் சிவப்பு பிரமாதமாக இருக்கும்; இயல்பிலேயே சிவப்பான உதடுகளுக்கு ரத்தச் சிவப்பு அல்லது கிரேன்பெர்ரி நிறத்தை முயற்சித்துப் பாருங்கள்; கருத்த உதடுகளுக்கு பிரிக் ரெட், மரூன் மற்றும் பர்கண்டி நிறங்கள் அட்டகாசமாக இருக்கும்” என்கிறார் இஷிகா.

2

ரிச் வைன் நிறம் முதல் பளபளப்பான பிங் நிறம் வரை, எங்களுக்குப் பிடித்த Lakmé ஷேட்களைத் தேர்ந்தெடுத்தோம். மேலே உள்ளவை: லாக்மே அப்சல்யூட் க்ளாஸ் அடிக்ட் இன் ரெட் டிலைட்; லாக்மே அப்சல்யூட் க்ளாஸ் ஸ்டைலிஸ்ட் இன் பெர்ரி செர்ரி; லாக்மே அப்சல்யூட் க்ரீமி லிப்கலர் இன் ரெட் கார்பெட்; லாக்மே அப்சல்யூட் மேட் லிப்கலர் இன் பிரிக்; லாக்மே 9டு5 மேட் லிப் கலர் இன் ரெட் கோட்.

3

உங்கள் உதடுகளில் இருக்கும் இறந்த தோலை அகற்றுவதற்கு ஒரு சுகர் ஸ்க்ரப்பையும், அதைத் தொடர்ந்து ஒரு மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்தி அவற்றை தயார் செய்யுங்கள். மென்மையான உதடுகளின் மீது பூசப்படும்போது உங்கள் லிப்ஸ்டிக் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சிவப்புநிற லிப்ஸ்டிக்குகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் அதே வேளையில், அவை அழியும்போது ரத்தம் வழிவதைப் போலவே இருக்கும். மேலும் நம்முடைய ஈரப்பதம் நிறைந்த காலநிலை காரணமாக அவற்றை அழியாமல் வைத்திருப்பதும் கடினம். நீண்ட நேரம் அழியாமல் இருக்கும் லிப்ஸ்டிக்குகளைத் தேர்ந்தெடுக்கும்படி நமக்கு இஷிகா அறிவுறுத்துகிறார். ”க்ரீமியான பூச்சுகள் சீக்கிரம் மங்கிவிடும். அவற்றைப் பயன்படுத்தினால், பூசிய பிறகு ஒரு டிஷ்யூ மூலம் அதைப் பரப்பிவிடுங்கள். மீண்டும் பூசிய பின்னர் உதடுகள் மேல் கொஞ்சம் பவுடரைப் பரப்பினால், லிப்ஸ்டிக் பல மணிநேரங்களுக்கு அழியாமல் இருக்கும். அதன் மேல் கொஞ்சம் க்ளாஸைப் பூசி மேக்கப்பை முடியுங்கள்” என்கிறார். லிப்ஸ்டிக் அழியாமல் இருப்பதற்கு மற்றொரு வழி, உங்கள் லிப்ஸ்டிக்குடன் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு லைனரை உங்கள் உதட்டுக் கோடுகளின் மேல் பூசுவது. லைனரைப் பூசுவதற்கு முன்னால் அதை ஐந்து நிமிடங்கள் ஃப்ரிஜ்ஜின் ஃப்ரீசரில் வைத்திருங்கள்.

4

சிவப்புநிற லிப்ஸ்டிக்கைப் பூசும்போது உங்கள் முகத்தின் மீதமுள்ள பகுதிகளை நியூட்ரலாக வைத்திருங்கள். “வெறும் ஃபவுண்டேஷனையும், கொஞ்சம் ப்ளஷையும், சிறிதளவு கருப்புநிற ஐலைனருடன், கொஞ்சம் மஸ்காராவையும் பயன்படுத்தினால் போதும்” என்கிறார் இஷிகா. மாலைநேர மேக்கப்பிற்கு மெல்லிய தங்கநிற ஐஷேடோவுடன் சிவப்புநிற லிப்ஸ்டிக் மிகச் சிறப்பாகப் பொருந்தும். முழு உதடுகள் உள்ள தோற்றத்தைப் பெற விரும்பினால், உங்கள் கீழ் உதட்டின் நடுவில் மட்டும் கொஞ்சம் க்ளாஸைப் பயன்படுத்துங்கள். நீலநிற அண்டர்டோன்களுடன் கூடிய சிவப்பு லிப்ஸ்டிக்குகள் உங்கள் பற்களை மேலும் வெண்மையாகக் காண்பிக்கும் அதே வேளையில் பிங்க்நிற அண்டர்டோன்கள் இதற்கு எதிர்மறையாகச் செயல்படும். மிகவும் அதிகமாக லிப்ஸ்டிக் அணியக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை உங்கள் பற்களில் உங்களால் பார்க்க முடிந்தால் தேவையை விட அதிகமாகப் பூசியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதிகப்படியானதை அகற்றுவதற்கு லிப்ஸ்டிக்கைப் பூசி முடித்தவுடன் உதடுகளுக்கிடையே ஒரு டிஷ்யூவைப் பயன்படுத்தித் துடையுங்கள்.