இதை கற்பனை செய்து பாருங்கள்- நீங்கள் முக்கிய நிகழ்ச்சிக்காக செல்ல இருக்கிறீர்கள். நன்றாக வளர்த்து வந்த நகம் உடைந்து விட்டதை கவனிக்கிறீர்கள். விரக்தியாக இருக்கும் அல்லவா?

எளிதில் உடையக்கூடிய நகங்கள் கொஞ்சம் வேதனையானதுதான். நாம் இதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும். உடைந்த நகங்கள் உங்களை கைகளின் தோற்றத்தை பாதிக்கும், அவை சரியாக பராமரிக்கப்படாதது போல் தோன்றச்செய்யும். நீங்கள் செயற்கை நகம் அல்லது ஜெல் நக சிகிச்சையை நாடலாம் என்றாலும், வீட்டிலேயே இதற்கு தீர்வு காணலாம் எனும் போது ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?  

உங்கள் நகத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சில வழிகள்...

  • #1 எலுமிச்சை சாறு
  • #2 வைட்டன்மின் இ எண்ணெய்
  • #3 தேங்காய் எண்ணெய்
  • #4 கடல் உப்பு
 

#1 எலுமிச்சை சாறு

#1 எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு, உங்கள் நகத்தை பராமரித்து, அவற்றை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எலுமிச்சை சாறு நிறைந்த கோப்பையில் உங்கள் கைகளை 5-10 நிமிடங்கள் வைத்திருக்கவும். சேதமடைந்த நகங்களை சீராக்க மற்றும் நகங்கள் மீதான மஞ்சள் கரையை இது போக்குகிறது. மூன்று நாளுக்கு ஒரு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

#2 வைட்டமின் இ எண்ணெய்

#2 வைட்டமின் இ எண்ணெய்

நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்காவிட்டால், வைட்டமின் இ எண்ணெய் உங்கள் நகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் நகங்களுக்கு ஊட்டச்சதாக அமைந்து அவற்றை வலுவாக்குகிறது. நகம் மற்றும் நக கணுவை ஆரோக்கியமாக வைத்திருக்க, தினமும் 5-20 நிமிடம் வைட்டமின் இ எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்யவும்.  

 

#3 தேங்காய் எண்ணெய்

#3 தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் உலர் மற்றும் உடைந்து விடக்கூடிய நகங்களுக்கு மிகவும் ஏற்றது. சிறந்த மாய்ஸ்சரைசிங் தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய், உலர் மற்றும் உடைந்துவிடக்கூடிய நகங்களை பராமரித்து, ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. தேங்காய் எண்ணெய் நகங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும் என்றால், மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.  

 

#4 கடல் உப்பு

#4 கடல் உப்பு

உங்கள் கை விரல்களை கடல் உப்பு மற்றும் தண்ணீரில் வைத்திருப்பது, பலவீனமான மற்றும் உடையக்கூடிய நகங்களை பராமரிக்க உதவும். நகங்களை பராமரிப்பதோடு, நக கணுக்களையும் மென்மையாக வைத்திருக்க உதவும். ஒரு கோப்பை சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யவும்.

ஒளிப்படம் உதவி: பிண்டிரெஸ்ட்