சிறந்த இரவு நேர பராமரிப்பு உங்கள் சரும நலனுக்கு மிகவும் அவசியமானது. இரவு நேரத்தில், சருமம் பராமரித்தல் மற்றும் புத்துயிர் பெறுதல் ஆகியவற்றுக்கு இயற்கையாக உள்ளாகிறது. நீங்கள் வழக்கமான பயன்படுத்தும் இரவு நேர கிரீமை பயன்படுத்தலாம் என்றாலும், இதை நீங்களே கூட உருவாக்கி கொள்ளலாம் என வழி காட்டுகிறோம்.
 

ஆலிவ் ஆயில் நைட் கிரீம்

ஆலிவ் ஆயில் நைட் கிரீம்

ஆலிவ் ஆயில் உங்கள் சருமத்தில் அத்தியாவசிய எண்ணெய்களை தங்கச்செய்கிறது. இதனுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெயும் சேர்த்துக்கொள்ளுங்கள். இரண்டு எண்ணெய்களுமே உங்கள் ஆரோக்கியம் மற்றும் சருமத்திற்கு நன்மை தரக்கூடியவை. ஆலிவ் ஆயிலில் அதிகம் இருக்கும் வைட்டமின் ஈ சருமத்தை காத்து, அதை பராமரிக்கிறது.

அரை கோப்பை எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பீவேக்ஸ், 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் எடுத்துக்கொண்டு ஒரு சாஸ்பேனில் கலந்து சூடாக்கவும். எல்லாம் நன்றாக கலந்து பிறகு வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும். இதைக் குளிர வைத்து பின்னர் பயன்படுத்தவும். ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்தலாம். 
 

 

கிரீன் டீ - ஆலோவேரா கிரீம்

கிரீன் டீ - ஆலோவேரா கிரீம்

கிரீன் டீ மிகச்சிறந்த ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஆலோவேரா புண் போன்ற பாதிப்பை குணமாக்க கூடியது. இந்த நைட் கிரீம் சுற்றுச்சூழல் மாசால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யக்கூடியது.
கிரீன் டீ சாறு, பன்னீர், வேரா ஜெல் மற்றும் பீவேக்ஸ் ஆகிய ஒவ்வொன்றையும் ஒரு டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

கிரீன் டீ மற்றும் பீவேக்சை ஒன்றாக கொதிக்க வைக்கவும். அது ஆறிய பிறகு, பன்னீர், வேரா ஜெல்லை கலக்கவும். இதை காற்று புகாமல் பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தவும். 

 

பால் கிரீம்

பால் கிரீம்

பாலில் அதிகம் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்திற்கு ஊட்டச்சத்து அளித்து, மாய்ஸ்சரைஸ் செய்கிறது. மில்க் கிரீம், பன்னீர், ஆலிவ் ஆயில், கிளிசரின் ஆகியவற்றை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இதை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால் சில நாட்களிலேயே நல்ல பலனை உணரலாம்.