முகத்தில் பயன்படுத்தும் அழகுக் கலை பொருட்களை எக்ஸ்பர்ட்கள் மட்டுமே பயன்படுத்திய காலம் மாறிவிட்டது. இன்டர்நெட், யூ ட்யூட் டுட்டோரியல்களின் யுகத்தில் எல்லோரும் அத்தகைய கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அதன் பலன்கள், நல்ல அம்சங்கள் பற்றி குழம்புகிறீர்களா… உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஏற்ற அழகுக் கலை கருவியைத் தேர்ந்தெடுக்க உதவப் போகிறது இந்தக் கட்டுரை.
- முகத்தை பொலிவாக்க கு ஷா
- முகத்திற்கு பஃப் கொடுக்க ஜேட் ரோலர்
- முகப் பரு தழும்புகளை மறைக்க டெர்மா ப்ளானிங்
- சென்சிடிவ் சருமத்தில் எக்ஸ்ஃபாலியேட் செய்ய சிலிகான் ஸ்கிரப்
- நுண்ணிய கோடுகளை, சமமற்ற சரும நிறத்தைப் போக்க டெர்மா ரோலர்
முகத்தை பொலிவாக்க கு ஷா

பாரம்பரிய சீன சிகிச்சை முறைகளில் மிகவும் பாப்புலரானது இது. எல்லாம் இன்டர்நெட் செய்த வேலைதான். எல்லா பிரச்சனைக்கும் கு ஷா பயன்படுத்தும் போக்கு சீக்கிரமே பற்றிக்கொண்டது. கு ஷா என்றால் பிய்த்து எடுப்பது என்று பொருள். இது சருமத்தை டைட் ஆக மாற்ற உதவும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகமாக்கவும் உதவும். முகம் ஊதலாக இருப்பது, கண்ணைச் சுற்றிய கருப்பு வளையம் முதலியவற்றை சரி செய்ய கு ஷா உதவும்.
முகத்திற்கு பஃப் கொடுக்க ஜேட் ரோலர்

முகத்தில் பயன்படுத்துவதற்கான அழகுக் கலை கருவிகள் பற்றி தெரியாவிட்டால்கூட ஜேட் ரோலர் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சமூக ஊடகங்களில் அதைப் பற்றித்தான் பேச்சு. அந்த பெருமை எல்லாம் அதற்கு உரியதுதான். ஜேட் ரோலர் என்பது முகத்தில் பயன்படுத்தும் மசாஜ் ரோலர். இதிலுள்ள ஜேட் கற்கள் சருமத்தை மிருதுவாக்கும். முகம் ஊதிப் போவதைக் கட்டுப்படுத்தும். கீழிலிருந்து மேல் வாக்கில் ஜேட் ரோலர் பயன்படுத்தப்பட வேண்டும். கழுத்திலும் பயன்படுத்தலாம். அற்புதமான பலன்கள் தரக்கூடியது.
முகப் பரு தழும்புகளை மறைக்க டெர்மா ப்ளானிங்

வீட்டிலேயே செய்யக்கூடிய சரும ட்ரீட்மென்ட்தான் டெர்மா பிளானிங். சருமத்தின் மேல் பரப்பை ஒரு ரேஸர் கொண்டு நீக்க வேண்டும். சருமத்தில் தூசி படிய காரணமாக இருக்கும் சிறு முடி வளர்ச்சியை நீக்க இது உதவும். இதனால் சரும துவாரங்கள் பெரிதாகத் தெரியாமல் செய்யலாம். இதனால் சருமத்தின் நிறம் சமமானதாக இருக்கும். சருமத்தில் உள்ள தூசியின் படிமம் நீக்கப்படுவதால் அழகுக் கலை பொருட்களும் ஆழமாக ஊடுருவும். நல்லதுதானே.
சென்சிடிவ் சருமத்தில் எக்ஸ்ஃபாலியேட் செய்ய சிலிகான் ஸ்கிரப்

எக்ஸ்ஃபாலியேட் செய்து இறந்த செல்களை நீக்குவது அவசியமானது. ஆனால் சென்சிடிவ் சருமம் என்று வருவது இது சிக்கலானது. ஆனால் அதற்காக பயன்படுத்துவதற்கானது இந்த சிலிகான் ஸ்கிரப். பிரஷ் வடிவத்தில் வருவது இது. மற்ற எக்ஸ்ஃபாலியேட்டர் போல் அள்லாமல் இது சருமத்தின் மீது மென்மையாக வேலை செய்யும். இதனால் ரொம்ப அதிகமாக எக்ஸ்ஃபாலியேட் நடந்து, சருமம் வறண்டு போவது தடுக்கப்படும். சருமம் ஸ்மூத்தாக, க்ளியராக இருக்கும் என்பது இதன் நன்மை.
நுண்ணிய கோடுகளை, சமமற்ற சரும நிறத்தைப் போக்க டெர்மா ரோலர்

சிறு ஊசிகள் கொண்ட ரோலர். கேட்டால் பயமாக இருக்கிறதா… பயப்படத் தேவையில்லை. சருமத்தில் நல்ல பலன் கொடுக்கக்கூடியது டெர்மா ரோலர். இதன் மெல்லிய ஊசி சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. பயம் இருக்கும். ஆனால் பயப்படாதீர்கள். சருமத்தின் குணமாக்கும் சக்தியைத் தூண்டக்கூடியது இது. இதனால் கொலாஜன் உற்பத்தி அதிகமாகும். முகத்தில் உள்ள நுண்ணிய கோடுகள் மறைய இது உதவும். சருமத்தில் உள்ள சமமற்ற நிறத்தை சரிப்படுத்தவும் உதவும். சருமம் ஸ்மூத்தாக, பொலிவாகவும் இருக்கும்.
Written by Kayal Thanigasalam on 27th Oct 2021