நம்பமுடியாத போட்டியாளர்களைக் கொண்டதுதான் இந்த அழகியல் உலகம். இவை இது சருமத்தின் மென்மை மற்றும் பொலிவைப் பற்றிய நமது கனவுகளை நனவாக்குகின்றது. தற்போது நியாசினமைடு இந்த மிகக் குறுகிய காலகட்டத்திற்குள், ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யும் ஒரு சருமப்பராமரிப்பு மூலப்பொருளாகும். அது சரி தான், தற்போது ஏன் என்று நீங்கள் யோசிக்கலாம். இதன் சூப்பர்பவரைப் பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். நியாசினமைடு, வைட்டமின் B3 இன் ஒரு வடிவமாகும். இது உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கக் கூடிய முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்.

அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்ற ஒரு வலிமை மிக்க மூலப்பொருளாகும். இது சருமத்தை பிரகாசமாக்குதல், கொலாஜன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஈரப்பதத்தின் அளவைக் கட்டுப்படுத்த வலுவான கொழுப்புச் சுவர்களை உருவாக்குதல் போன்ற பல வேலைகளை திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு செய்கிறது. அடிக்கடி வெடிப்பு ஏற்படுதல், முன்கூட்டிய சரும முதிர்ச்சி மற்றும் பொலிவற்றத் தன்மை போன்ற உங்கள் சரும பிரச்சனைகளுக்கும், வேறு சில உறுதிப்படுத்தப்பட்ட அனைத்துப் பாதிப்புகளையும் இந்த நியாசினமைடு குணப்படுத்தும். சருமத்திற்கு பிரகாசம் மற்றும் பொலிவையும் பெற்றுத் தரக்கூடிய நியாசினமைட்டின் ஐந்து நன்மைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்

01. சருமத்தை பிரகாசமாக்குகிறது

 

01. சருமத்தை பிரகாசமாக்குகிறது

01. சருமத்தை பிரகாசமாக்குகிறது

சருமப் பராமரிப்பு உலகில் பல வேலைகளை செய்யும் ஒரே என்று நியாசினமைடு அழைக்கப்படுகிறது. சருமத்தை பளபளப்பாக்கும் பண்புகளையுடைய, மிகவும் விரும்பத்தக்க இந்த நியாசினமைடு ஒரு நன்றி தெரிவிக்க வேண்டிய மூலப்பொருளாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது மற்றும் பொலிவை இழக்கச் செய்யும் சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது சரும நிற மாற்றத்திற்கு காரணமான என்சைம், மெலனின், சரும செல்களுக்கு மாற்றுவது போன்றவற்றை தடுத்து நிறுத்துகிறது. அதனால், உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். இதை விரும்புவதற்கு வேறு காரணம் வேண்டுமா என்ன?

பிபீ தேர்வுகள் : Lakmé Absolute Perfect Radiance Brightening Facial Foam

 

03. முன்கூட்டிய சரும முதிர்ச்சியை தடுக்கிறது

03. முன்கூட்டிய சரும முதிர்ச்சியை தடுக்கிறது

முன்கூட்டிய சரும முதிர்ச்சியை நியாசினமைடு தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்க பல்வேறு வழிகளில் தீவிரமாக செயலாற்றுகிறது. அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் நன்மைகள், சருமத்தை பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை சமாளிக்கின்றன மற்றும் கொலாஜன் ஃபைபர்களின் சக இணைப்பான புரோட்டீன் கிளைசேஷனால் சருமத்திலுள்ள கொலாஜன் மேலும் கடினமாவதை தடுக்கிறது. எனவே, நீங்கள் கொலாஜன் அளவை மேம்படுத்தவும், முன்கூட்டிய சுருக்கங்கள், சருமத்தின் மீது மெல்லிய வரிகள் மற்றும் சருமம் சோர்வடைதல் போன்றவற்றை குணப்படுத்துவதற்கு நியாசினமைடை நம்பலாம். இந்த மூலப்பொருள் ஒரு சன்ஸ்கிரீனுடன் இணையும் போது, சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களுக்கு எதிரான பாதுகாப்பை இரட்டிப்பாக்கும்.

பிபீ தேர்வுகள் : Lakmé Absolute Perfect Radiance Mineral Clay Mask

 

04. சரும நிறத்தை சீராக வைக்கிறது

04. சரும நிறத்தை சீராக வைக்கிறது

சருமத்தில் சீபம் ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதால், சருமத் துவாரங்கள் விரிவடைவது தடுக்கப்படுகிறது மற்றும் சருமத்திற்கு மென்மையான நிறத்தை அளிக்கும் நம்முடைய குறிக்கோளை அடைய உதவுகிறது. என்சைம்கள் மற்றும் கருமையாக்கும் நிறமிகளை சருமத்தின் மேற்பரப்பை அடைவதை இது தடுக்கிறது, இல்லையெனில் தேவையற்ற நிறமாற்றம் மற்றும் கரும்புள்ளிகளை தோன்றச் செய்யும். தற்போதுள்ள கரும்புள்ளிகளை மறைக்கச் செய்து, மென்மையான மற்றும் பிரகாசமான சருமத்தை வழங்குகிறது.

பிபீ தேர்வுகள் : akmé Absolute Perfect Radiance Skin Brightening Face Serum

 

05. வீக்கத்தைக் குறைகிறது.

05. வீக்கத்தைக் குறைகிறது.

அனைத்து வகையான சருமத்திற்கும் அழற்சி ஏற்படுவது மிகவும் சாதாரணமான சரும பிரச்சனைகளில் ஒன்றானது. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நியாசினமைடு மிகவும் சரியானது. சரும அழற்சியால் ஏற்படும் எரிச்சல், சிவத்தல் மற்றும் முகப்பரு ஆகியவற்றை வைட்டமின் பி 3 இன் இந்த வடிவம் குறைக்கும். இது சருமத்தின் கொழுப்புச் சுவர்களை வலுப்படுத்துவதால், இது ஈரப்பதம் மற்றும் ஹைட்ரேஷன் அளவையும் சரியான அளவில் தக்கவைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் மென்மையான உணர்வையும் இது அளிக்கிறது. எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துப் பார்க்கும்போது, மிருதுவான சரும வகைகளுக்கும் இந்த நியாசினமைடு மிகச் சிறந்த சருமப் பராமரிப்பு மூலப்பொருளாக அமைகிறது.

பிபீ தேர்வுகள் : Lakmé Absolute Perfect Radiance Skin Brightening Day Crème

 

நியாசினமைடைப் பற்றி பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள்

நியாசினமைடைப் பற்றி பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகள்

:

01. தினமும் நியாசினமைடு பயன்படுத்தலாமா?

ஆம், நியாசினமைட்டை வழக்கமாகப் பயன்படுத்துவதினால் பளபளப்பான மற்றும் உறுதியான சருமத்தை வெகு விரைவில் அடைய உதவும். சீரம் மற்றும் டே கிரீம்ஸ் வடிவில் மிக எளிதாகக் கிடைக்கிறது, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளது மற்றும் சூரிய வெப்பம், மாசுகள் மற்றும் ரசாயனங்கள் போன்ற அன்றாடம் சுற்றுச்சூழல் காரணிகளால் உங்கள் சருமத்தைப் பாதிக்கும் ஃப்ரீ ரேடிகல் சேதத்திலிருந்து இது தடுக்கிறது.

02. நியாசினமைடு அனைத்து சரும வகைகளுக்கும் பொருத்தமானதா?

ஆம், நியாசினமைடு அனைத்து சரும வகைகளுக்கும் பொருத்தமானது. இது சீபம் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் என்று வெகுவாக அறியப்பட்டதாகும், இது எண்ணெய் சருமத்திலுள்ள முகப்பரு வெடிப்புகளைத் மிகவும் திறம்பட தவிர்க்கிறது. இது சருமத்தின் கொழுப்புச் சுவர்களை மேம்படுத்துகிற்து, அழற்சி, சிவத்தல் மற்றும் வறண்ட மற்றும் மிருதுவான சருமத்தின் மீதுள்ள புள்ளிகள் போன்றவற்றைக் குறைக்கிறது மேலும், உங்கள் சருமத்திற்கு அழகான தோற்றத்தை அளிக்கப்பதற்கு சருமத்திற்கு ஆரோக்கியம் மற்றும் ஹைட்ரேட் செய்கிறது.

03. நியாசினமைடு உங்கள் சருமத்தை பிரகாசமாக்குகிறதா?

ஆம், சருமத்தை பளபளக்கச் செய்யும் சக்திவாய்ந்த்து இந்த நியாசினமைடு மூலப்பொருளாகும்.
என்சைம்கள் சருமத்தின் மேற்பரப்பை அடைவதை இது தடுக்கிறது. அதன் பயனாக நிறமாற்றத்தையும், கரும்புள்ளிகளை தோன்றுவதையும் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவதோடு, பிரகாசமான, பளபளக்கும் சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.