ஆரோக்கியமான பொலிவு மிக்க சருமத்திற்கான மந்திரமாக சொல்லப்படும், தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்லப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா? சரி, பரபரப்பான நாளுக்கு மத்தியில் ஒரு முழு கிளாஸ் தண்ணீர் குடிப்பதே பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால், நீர்த்தன்மை மிக்க உடல் பொலிவு மிக்க சருமத்திற்கு மிகவும் முக்கியமாகும். எனவே நீங்கள் போதுமான தண்ணீர் குடித்து, அப்பழக்கில்லாத பொலிவு மிக்க சருமம் பெறுவதற்கான சுவை மிக்க பானங்களை பரிந்துரைக்கிறோம்:

·          இளநீர்

·          கிரீன் டீ

·          வெள்ளரி சாறு

·          தக்காளி சாறு

·          எலுமிச்சை சாறு

 

இளநீர்

இளநீர்

உங்கள் தினத்தை இளநீர் குடித்து துவக்கவும். இது உங்கள் உஷ்ணமாகும் உடலுக்கு நீர்த்தன்மை அளிக்கிறது. கோடைக்காலங்கள் விரும்பி நாடப்படுவது. இது சருமத்திற்கும் மிகவும் ஏற்றது ஆகும். வைட்டனின் சி, மாவுச்சத்து, சோடியம் மற்றும் பொட்டாஷியம் போன்ற எலக்ட்ரோலைட்கள் கொண்ட இது உங்கள் சருமத்தை இளமையாக, பொலிவாக வைத்திருக்க உதவுகிறது. இது பருக்களை தடுத்து, வயோதிக அறிகுறிகளையும் தடுக்கிறது.

 

கிரீன் டீ

கிரீன் டீ

காபி இதமளித்தாலும், உங்கள் சருமத்திற்கான தோழன் இல்லை என்பதால், உங்கள் தினத்தை கிரீன் டீயுடன் நிறைவு செய்யவும். உங்களுக்கு தேவையான நேரங்களில் கிரீன் டீ பருகவும். இந்த பானம், வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் இ கொண்டுள்ளது. இது கொலாஜன் அளவை தக்க வைத்து, ஆழமான நீர்த்தன்மை அளிக்கிறது. இதனால் சருமம் உறுதியாகி மென்மையாகவும் விளங்குகிறது.

 

வெள்ளரி சாறு

வெள்ளரி சாறு

இந்த புத்துணர்ச்சி அளிக்கும் பானம், ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்தது. இது சருமத்தை இதமாக்கி, புத்துணர்ச்சி மற்றும் பொலிவு பெற வைக்கிறது. வெள்ளரி 98 சதவீதம் தண்ணீர் கொண்டது. எனவே, நீர்த்தன்மை அளிக்கும் குணம் கொண்டது. ஒரு கிளாஸ் வெள்ளரி சாற்றில் தாதுக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே சருமத்திற்கான மாய பானமாக விளங்குகிறது.

 

தக்காளி சாறு

தக்காளி சாறு

நட்சத்திரங்கள் அங்கீகரிக்கும் இந்த அழகு சாதன பானம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. டானிங் மற்றும் பிக்மென்டேஷனை சமாளிக்க இது உதவுகிறது. பருக்களை அகற்றி, துளைகளை சுருங்கச்செய்கிறது. செபம் சுரப்பத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்டிருப்பதால், சருமத்தில் கூடுதல் எண்ணெய் வழிவதையும் தடுக்கிறது.

 

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை தண்ணீர் பலவிதமான அழகு சாதன பலன்களை கொண்டிருக்கிறது. சரும நலனுக்கும் பலவிதங்களில் உதவுகிறது. காலையில் ஒரு கிளாஸ் எலுமிச்சை தண்ணீர் பருகுவது, இளமையான, பொலிவு மிக்க சருமத்தை உறுதி செய்கிறது. ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மை கொண்ட வைட்டமின் சி நிறைந்திருப்பதால், பருக்களை தடுக்கிறது. பலவிதமான சரும பிரச்சனைகளில் இருந்து காக்கிறது.