சுருக்கம், நச்சுத்தன்மை, மாஸ்யரைஸ், சோரியாஸிஸ், எக்ஸிமா, வறண்ட சருமம், ஆன்டிஆக்ஸிடென்ட் நம் புலன்களுக்கு லாவெண்டரின் இனிமையான மற்றும் அமைதியான வாசனை ஒரு விருந்தாக அமையும். இந்த அழகிய மலரின் மணம் மிகவும் ரம்மியாக இருப்பதால், இது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதாக கூறப்படுகிறது. மேலும் நீண்ட நேரத்திற்கு பிறகு ஏற்படும் உங்கள் மனச்சோர்வையும் நீக்கி புத்துணர்ச்சியை தர உதவுகிறது. ஆனால், ஆரோமாதெரபிக்கு தேவையான அத்தியாவசியமான எண்ணெயாக இருக்க்க்கூடிய லாவெண்டர் உங்கள் சருமத்திற்கும் மிக உகந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா! ஆம் அது தான் உண்மை! லாவெண்டரின் 5 சருமப்பராமரிப்பு பலன்களை பட்டயிலிட்டுள்ளோம்.
- 01. சருமத்திற்கு மென்மையையும், அமைதியையும் தருகிறது
- 02. முகப்பருக்களினால் ஏற்படும் பிளவுகளை தடுக்க உதவுகிறது
- 03. சருமத்திற்கு பொலிவைத் தர உதவுகிறது
- 04. சுருக்கங்களை ஆரம்பத்திலேயே தடுக்கிறது.
- 05. நச்சுத்தன்மையை நீக்கி, சருமத்திற்கு நிவாரணத்தை தர உதவுகிறது
01. சருமத்திற்கு மென்மையையும், அமைதியையும் தருகிறது

லாவெண்டர் ஒரு தொற்றுஎதிர்ப்பு பொருளாகும். இது எரிச்சல், சிவப்படைதல், அரிப்பு போன்ற பாதிப்புகளை குறைப்பதோடு, தொற்றுகளுக்கு சிகிச்சையையும் அளிக்கிறது, சோரியாஸிஸ், எக்ஸிமா அல்லது வறண்ட சருமம் ஆகியவற்றுக்கு நிவாரணத்தை தருவதற்கு கடவுள் வழங்கிய வரப்பிரசாதமாகும். போன்ற மாஸ்யரைஸருடன் செறிவூட்டப்பட்ட லாவெண்டர் சிவப்படைதல் மற்றும் எரிச்சலை ஆரம்பக்கட்டத்திலேயே தடுப்பதற்காக பெரிதும் உதவி புரிகின்றது. உடலில் ஒட்டாத மாஸ்யரைஸருடன் செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல இயற்கையான லாவெண்டர் உங்கள் சருமத்திற்கு மென்மையையும், மாஸ்யரைஸரை மீண்டும் பெறவும், மேலும், 24 மணி நேரம் வரை சருமத்தை புத்துணர்வுடனும், ஹைட்ரேட்டுடனும் வைத்திருக்க உதவும். Vaseline Lavender Moisturizing Gel
02. முகப்பருக்களினால் ஏற்படும் பிளவுகளை தடுக்க உதவுகிறது

இது மிகவும் தீவிரத் தன்மையையுடைய இந்த மிக அத்தியாவசமான எண்ணெய் உங்கள் சருமத்தை முகப்பருக்களை எதிர்த்தும், முகப்பருக்களினால் ஏற்படும் பிளவுகளை தடுத்து நிவாரணமும் அளிக்க உதவுகிறது. லாவெண்டர் எண்ணெய் உங்கள் சருமத் துவாரங்களில் அழுக்குகள் அடைபடாமலும், சருமத்தின் எரிச்சலைக் குறைத்தும் மேலும் முகப்பருக்கள் உருவாவதற்கு காரணமான பாக்டீரியாக்களையும் கொல்ல உதவுகிறது. தேங்காய் எண்ணெய் அல்லது ஆர்கன் எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெய்களுடன் லாவெண்டர் எண்ணெயையும் கலந்து முகப்பருக்களின் மீது பயன்படுத்துவது மிகச் சிறந்த வழியாகும். இரண்டு எண்ணெய்களையும் நன்றாக கலந்து, ஒரு காட்டன் உருண்டையால் நன்கு சுத்தம் செய்யப்பட்ட சருமத்தின் மீது இந்தக் கலவையை தடவ வேண்டும். தொடர்ந்து இதை உபயோகப்படுத்திக் கொண்டு வரும்போது உங்கள் முகப்பருக்கள் மறைந்து வருவதை நீங்கள் பார்க்கலாம்.
03. சருமத்திற்கு பொலிவைத் தர உதவுகிறது

இந்த மிகையான நிறம் மாற்றம், கரும்புள்ளிகள் மற்றும் சரும பொலிவின்மை போன்றவை உங்களுக்கும் மிகுந்த மனஅழுத்த்த்தை தருகிறதா கவலை வேண்டாம், உங்கள் சருமத்திற்கு நல்லது செய்வதற்கு லாவெண்டரை அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது. லாவெண்டரிலுள்ள எரிச்சலை குணப்படுத்தும் சக்தி உள்ளதால், நிறமாற்றத்தையும் மற்றும் கரும்புள்ளிகளை குறைக்க இது உதவுகிறது. அது மட்டுமல்லாமல், இது வடுக்கள் மற்றும் சிவப்படைதலைக் குறைப்பதற்கு உதவுவதையும் நீங்கள் உணரலாம்.
04. சுருக்கங்களை ஆரம்பத்திலேயே தடுக்கிறது.

ஆக்ஸிஜனிலுள்ள மூலக்கூறுகளுடன் சில தேவையற்ற எண்ணற்ற எலக்ட்ரான்கள் (அதாவது ஃப்ரீ ரேடிகள்ஸ்) முகத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதன் விளைவாக, முகத்தில் சுருக்கங்களும், மெல்லிய வரிகளும் உருவாவதற்கு முக்கிய காரணமாகும். ஃப்ரீ ரேடிகள்ஸினால் ஏற்படும பாதிப்பை எதிர்த்து போராடி சருமத்தை லாவெண்டர் எண்ணெய் பாதுக்காக்கிறது. இந்த மந்தகாச லாவெண்டர் எண்ணெய்யுடன் ஆன்டிஆக்ஸிடென்ட்டும் கலக்கப்பட்டுள்ளது. லாவெண்டர் எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, சுருக்கங்கள் மற்றும் மெல்லிய வரிகள் மீது தடவிக் கொண்டே வாருங்கள். பிறகு குறைந்த காலத்திற்குள் அவை மறைந்து விடுவதை காணலாம்.
05. நச்சுத்தன்மையை நீக்கி, சருமத்திற்கு நிவாரணத்தை தர உதவுகிறது

உங்கள் மனதிற்கும், உடலுக்கும் அமைதியை இந்த லாவெண்டர் எண்ணெய்யின் வாசனை தருகிறது என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த முக்கியத்துமான எண்ணெய் உங்கள் சருமத்தின் மீது மிக நன்றாக வேலை செய்யும். நீங்கள் குளிக்கும் நீரில் லாவெண்டர் எண்ணெய்யின் சிலத் துளிகளை சேர்ந்து குளிக்கும் போது உங்கள் தசைகளுக்கு ஆசுவாசத்தை அளிப்பதுடன், சருமத்திலிருந்து நச்சுத்தன்மையையும் நீக்க உதவுகிறது.
Written by Kayal Thanigasalam on 12th Sep 2021