ஐஸ் கட்டிகள், நீங்கள் பருகும் பானங்களை குளிர்ச்சி மிக்கதாக மாற்றுவதோடு, உங்கள் சருமத்திற்கு குளிர்ச்சி அளிக்கும் வகையிலும் செயல்படலாம். உங்கள் சருமத்திற்கு ஐஸ் கட்டிகளால் உண்டாகும் பலன்கள் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம்.ஆனால், அதிகம் அறியப்படாத இந்த வீட்டு வைத்தியத்தின் பலன்களை பார்க்கலாம்.
· 1. சூரிய ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு
· 2. கண்கள் பாதிப்பு
· 3. பருக்கள் குறைவு
· 4. தள்ளிப்போகும் வயோதிக தன்மை
· 5. சரும பொலிவு
- 1. சூரிய ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு
- 2. கண்களில் பாதிப்பு
- 3. பருக்கள் குறையும்
- 4. தாமதமாகும் வயோதிக தன்மை
- 5. சரும பொலிவு
1. சூரிய ஒளியின் பாதிப்பில் இருந்து பாதுகாப்பு

சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தை பாதுகாக்க ஐஸ்கட்டிகளை பயன்படுத்துமாறு பாட்டி உங்களிடம் எப்போதாவது கூறியிருக்கலாம். சிறந்த பலன் பெற வீட்டிலேயே நீங்கள் ஆலோவேரா பனிக்கட்டி தயார் செய்து கொள்ளலாம். இந்த எளிய வீட்டு வைத்தியத்திற்கு உங்களுக்கு கொஞ்சம் ஆலோவேரா ஜெல் மட்டும் தான் தேவை. ஆலோ வேரா இழை கிடைக்கவில்லை என்றால், நீங்கள் வெள்ளரியை கூட பயன்படுத்தலாம்.
2. கண்களில் பாதிப்பு

உங்கள் கண்களில் ஏற்பட்ட பாதிப்பை போக்க விரும்பினால், கொஞ்சம் ஐஸ் கட்டிகளை நாடலாம். பாதிக்கப்பட்ட கண்களுக்கு எந்த வகையான குளிர்ச்சியான பேக்கும் ஏற்றது. கிரீன் டீ மற்றும் பால் கொண்டும் இதை தயாரிக்கலாம். கொஞ்சம் கிரீன் டீ தயாரித்து, அதை ஐஸ் டிரேவில் வைத்து தேவையான போது பயன்படுத்தவும். பயன்படுத்திய பிறகு தூய்மையான டவலால் துவட்டிக்கொள்ளவும்.
3. பருக்கள் குறையும்

பருக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவும் ஐஸ்கட்டிகளை நாடலாம். இவை பருக்களின் துளையை குறைப்பதால் அவற்றின் பாதிப்பும் குறைகிறது. வீக்கத்தை தணித்து, சிவப்பாவதையும் போக்குகிறது. ஐஸ் கட்டிகளை முகத்தில் பயன்படுத்தும் முன், உங்கள் முகத்தை கழுவி துடைக்க மறக்க வேண்டாம். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை உணரலாம்.
4. தாமதமாகும் வயோதிக தன்மை

சருமத்தை நல்ல முறையில் பராமரித்து வருவது, வயோதிக அறிகுறிகளை தாமதமாக்கும். ரசாயனம் கொண்ட பொருட்களை நாடுவதற்கு பதில், வீட்டுவைத்தியத்தை நாடுவதை பரிந்துரைக்கிறோம். இவற்றில் மிகவும் செயல்திறன் வாய்ந்தது ஐஸ்கட்டிகளாகும். ஐஸ்கட்டிகள் உங்கள் சருமத்தை ஈரம் மிக்கதாக்கி, உறுதியாக்குகிறது. முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவி, டவலால் துடைத்துக்கொண்டு, முகத்தின் மீது ஐஸ்கட்டிகளை தடவவும். ஐஸ்கட்டிகளால் வட்ட வடிவில் மசாஜ் செய்யவும்.
5. சரும பொலிவு

உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க அல்லது மங்கலான சருமம் இருந்தால் கூட, ஐஸ்கட்டிகள் அதற்கு தீர்வாக அமையும். ஐஸ்கட்டிகள் சருமத்தின் எண்ணெய் பசை சுரப்பை கட்டுப்படுத்தி, அதை பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது. உங்கள் முகத்தை கழுவி, டவலால் துடைத்துவிட்டு ஐஸ்கட்டிகளை பயன்படுத்தவும். அதன் பிறகு உடனே கொஞ்சம் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தினால் மேலும் பலன் கிடைக்கும். மிண்ட் ஐஸ் கட்டிகளை கூட நீங்கள் பயன்படுத்தலாம்.
சுக்ருதி ரிஷிசிங்கானி
Written by Team BB on 19th Dec 2018