ஜிம்மில் பயிற்சி செய்வதன் மூலமாகவோ அல்லது யோகா ஆர்வலராகவோ இருப்பதன் மூலமாகவோ ஒர்க்அவுட் செய்யலாம். இருப்பினும், தினமும் காலையில் கண்ணாடியில் நீங்கள் காணும் முகத்திற்காக போதுமான கவனம் செலுத்துகிறீர்களா? ஒரு சில முக பாவனைப் பயிற்சிகள் உங்களுக்கு மென்மையான மற்றும் இளமையான முகத்தை தரும். உங்கள் முதுமைக்கான கிரீம்களைப் பயன்படுத்துவது அவசியம் என்றாலும், கோமாளி முகங்களை உருவாக்குவதும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும். 2 நிமிடங்களுக்குள் நீங்கள் செய்யக்கூடிய சில எளிதான முக பாவனைப் பயிற்சிகள் இங்கே!
- உடற்பயிற்சி 1: உயிரெழுத்துக்களின் உந்து சக்தி
- உடற்பயிற்சி 2: மீன் வாயைப்போல் உருவாக்கவும்
- உடற்பயிற்சி 3: வாயை மூடவும்!
- உடற்பயிற்சி 4: பக்கர் அப்!
உடற்பயிற்சி 1: உயிரெழுத்துக்களின் உந்து சக்தி

பெயர்களைக் குறிப்பிடுவது போல உயிரெழுத்துக்களின் உந்து சக்தியை ஒரு உடற்பயிற்சியின் வடிவத்தில் பயன்படுத்தலாம். இது கழுத்துப் பகுதியை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உங்கள் வாயின் ஓரங்களை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, இந்தப் பயிற்சியை, ஆழ்ந்த மூச்சு எடுப்பதன் மூலம் தொடங்கவும். ‘A, E, I, O, U’’ என்ற அனைத்து உயிரெழுத்துக்களை( வவ்வல்ஸ்) சொல்லும்போது புன்னகைத்து சிரிக்கவும்
செயல்முறையை 2 நிமிடங்களுக்கு மூன்று முறை செய்யவும்.
உடற்பயிற்சி 2: மீன் வாயைப்போல் உருவாக்கவும்

இந்த முக உடற்பயிற்சி உங்கள் முகத்தின் மேல் பகுதியைக் குறைத்து, கீழ் பகுதியைக் குவித்து பயிற்சி செய்ய வேண்டும். இதை உங்கள் குழந்தைகள் பார்த்தால் சிரித்து மகிழ்வார்கள். உங்கள் மேல் மற்றும் கீழ் பற்களுக்கு இடையில் உங்கள் கன்னங்களில் குழிவிழவேண்டும்.
இந்த நிலையை 10 விநாடிகள் வைத்திருந்து
விடுவிக்கவும்.செயல்முறை 2 நிமிடங்களில் 15 முறை செய்யவும்.
உடற்பயிற்சி 3: வாயை மூடவும்!

உங்கள் வாயை மூடி வைத்திருப்பதை உள்ளடக்கியது மற்றும் உதடுகளைச் சுற்றியுள்ள சருமத்தைத் பாதுகாக்க உதவுகிறது.
உங்கள் வாயை மூடி, உதடுகளை இறுக்கமாக மூடவும்.இந்த நிலையில் புன்னகைக்க முயற்சிக்கவும். முடிந்தவரை பரவலாக உங்கள் வாயை நீட்டவும். இந்த முகம் பாவனை யோகாவை 20 விநாடிகள் வைத்திருங்கள், பின்னர் தசைகளை தளர்த்தவும். 2 நிமிடங்களில் -10 முறை செய்யவும்.
உடற்பயிற்சி 4: பக்கர் அப்!

உறுதியான உதடுகளுக்காகவும், வாயைச் சுற்றியுள்ள சுருக்கங்களை அகற்றுவதற்காகவும், இந்தப் பயிற்சி உதவும். மேலே செல்லுங்கள்!
தோழிகளை அழைக்கும் போது ஒரு தீவிர பவுட் அல்லது வாத்து முகத்தை உருவாக்கவும்.
இந்த யோகாவை 30 விநாடிகள் வைத்திருங்கள்
இரண்டு நிமிடங்களில் நான்கு முறை செய்யவும்.
Written by Kayal Thanigasalam on 24th Jul 2020