அற்புத தாவரமான கற்றாழை, ( ஆலோ வேரா) சரும நல உலகிற்கு புதிதல்ல. இந்த அற்புத தாவரம் தரக்கூடிய அழகு சாதன பலன்களை நாம் அண்மை காலத்தில் தான் தெரிந்து கொண்டவையாக இருந்தாலு, உண்மையில் இது அழகு சாதன உலகில் நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது.
இப்போது, கற்றாழைக்குள் இருக்கும் வழவழப்பான ஜெல் அல்லது சாறு உங்கள் சரும நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கூடிய அநேக நற்குணங்களை கொண்டிருப்பதை அனைவரும் அறிந்திருந்தாலும், இது பற்றி இன்னும் நுணுக்கமாக பார்க்கலாம். எண்ணெய் பசை சருமம், உலர் சருமம், எளிதில் பாதிக்கப்படும் தன்மை கொண்ட சருமம் என எல்லா வகை சருமங்களிலும் இது மாயத்தை நிகழ்த்தி அப்பழுக்கில்லாத சருமம் பெற உதவுகிறது. உங்கள் வீட்டுத்தோட்டத்தில் கூட இந்த செடி இருந்து இவற்றை கொண்டு சரும நலனை எப்படி பாதுகாப்பு என்பதை நீங்கள் அறியாமல் இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம், உங்களுக்கு உதவும் குறிப்புகளை நாங்கள் அளிக்கிறோம்.
கற்றாழை அளிக்கும் அருமையான அழகு நல பலன்களை தெரிந்து கொள்ளுங்கள். அப்பழுக்கில்லாத அழகிய சருமம் பெற கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அழகு சாதன பராமரிப்பில் கற்றாழையை ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறியவும், வீட்டிலேயே இதை பயன்படுத்தி பேஸ் மாஸ்க் போன்றவற்றை உண்டாக்கி அற்புதமான சரும நல பலன்களை பெறுவது எப்படி என அறியவும் மேலே படியுங்கள்....
- மாய்ஸ்சரைஸ் செய்து, உலக சருமத்தை சீராக்குகிறது
- பாதிக்கப்பட்ட சருமத்திற்கு இதம் தருகிறது
- வயோதிக தன்மையை தடுக்கிறது
- பருக்களை அகற்றி, பாதிப்பை குறைக்கிறது
- கரு வளையங்களை அகற்றுகிறது
- கற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்
- செடியில் இருந்து இயற்கை கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள்
- நீங்களே செய்யக்கூடிய ஆலோவேரா பேஸ் மாஸ்க்
- உலர் சருமத்திற்கான கற்றாழை
- வழக்கமான / பாதிப்புக்குள்ளாகும் சருமத்திற்கு கற்றாழை
- கற்றாழை கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தவும்
மாய்ஸ்சரைஸ் செய்து, உலக சருமத்தை சீராக்குகிறது

காற்றாழை இயற்கையான மாயஸ்சரைசயாக கருதப்படுவது உங்களுக்குத் தெரியுமா? அது நீர்த்தன்மை அளிக்கும் குணத்தை பெற்றுள்ளது. சருமத்தில் அழகாக ஊடுருவுகிறது. எண்ணெய்பசை மிக்க சருமம், மற்றும் பருக்களால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு கற்றாழை அருமையான மாய்ஸ்சரைசராக இருக்கிறது. அதன் லேசான தன்மை மற்றும் 99 சதவீத தண்ணீர் தன்மையே இதற்கு காரணம்.
பாதிக்கப்பட்ட சருமத்திற்கு இதம் தருகிறது

கற்றாழை சாற்றுக்கு குளிர்ச்சி தரும் ஆற்றல் இருப்பதால், சூரிய ஒளி, புண், சிவப்பு தன்மை, எரிச்சல் போன்ற பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு இதம் அளிக்கிறது. எனவே எளிதில் பாதிக்கும் தன்மை உடைய சருமத்திற்கு ஏற்ற பொருளாக அமைகிறது. மேலும் இதன் பூஞ்சை எதிர்ப்பு தன்,ஐ கோடைக்காலங்களில் உண்டாகும் கட்டி மற்றும் வெப்ப காயங்களை ஆற்றுகிறது. எனவே தான் கற்றாழை உங்கள் சரும நலத்திற்கான முக்கிய பொருளாக அமைகிறது.
வயோதிக தன்மையை தடுக்கிறது

உங்கள் சருமத்திற்கு வயதாகும் போது, சருமம் அதன் எலாஸ்டிக் தன்மையை இழக்கிறது. எனவே வயோதிக தன்மை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் முகத்தில் தோன்றத்துவங்குகின்றன. இவற்றை எல்லாம் இயற்கையாக எதிர்கொள்ள கற்றாழை சாறு கைகொடுக்கிறது. முகத்தில் தோன்றும் நுண்கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்குவதோடு, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கச்செய்வது மற்றும் இறந்த செல்களை புதுப்பிதன் மூலம் இது வயோதக தன்மையையும் தடுக்கிறது.
பருக்களை அகற்றி, பாதிப்பை குறைக்கிறது

கற்றாழையின் கிருமி எதிர்ப்பு தன்மை மற்றும் புண்ணுக்கு எதிரான் அதன்மை காரணமாக, இது பருக்களை அகற்ற உதவுகிறது. பருக்கள் தோன்ற முக்கிய காரணமாக அமையும், கருமிகள் உருவாவதை இது தடுக்கிறது. மேலும் குணமாக்கும் தன்மையையும் இது விரைவாக்குகிறது. கொஞ்சம் கற்றாழையை பூசிக்கொள்வதன் மூலம், பருக்களை எளிதாக அகற்றலாம். அது மட்டும் அல்ல, பருக்களால் ஏற்படும் வடுக்கள் உள்ளிட்ட பாதிப்புகளையும் இது அகற்றுகிறது.
கரு வளையங்களை அகற்றுகிறது

தோற்றத்தை மங்கச்செய்யக்கூடிய கரு வளையங்கள் குறித்து எதுவும் செய்ய முடியாது என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். நல்ல செய்தி என்னவெனில் கற்றாழை மூலம் இதை சரி செய்து கொள்ளலாம் என்பது தான். கற்றாழையில் ஆண்டிஆக்சிடெண்ட் மற்றும் வைட்டமின் இ நிறைந்துள்ளதால், கண்களைச்சுற்றிய மங்கலான தோற்றத்தை எதிர்ப்பதோடு, இதன் குளிர்ச்சி தன்மை, கண்களைச்சுற்றிய உப்பசத்தையும் போக்கி இரட்டை பலன் அளிக்கிறது. இரவு நேரத்தில் கண்களை ச்சுற்றி கற்றாழை சாறு பூசிக்கொள்வது கண்களைச்சுற்றிய கரு வளையம் மற்றும் உப்பசம் நீங்க வழி செய்கிறது.
கற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்

உங்கள் சரும பிரச்சனைகள் அனைத்திருகுமான அருமருந்தாக கற்றாழை விளங்குவதை இப்போது புரிந்து கொண்டிருக்கலாம். இந்த அருமையான பொருளை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ளவும் ஆர்வம் ஏற்பட்டிருக்கும். கற்றாழையை பயன்படுத்தக்கூடிய மூன்று வழிகளை அறிந்து கொண்டு, அதை உங்கள் சரும நல முறையில் சேர்த்துக்கொண்டு, மாசு மருவில்லா பொலிவான சருமத்தை பெறுவது எப்படி என அறிந்து கொள்ளுங்கள்.
செடியில் இருந்து இயற்கை கற்றாழையை எடுத்துக்கொள்ளுங்கள்

கற்றாழை இலை இன்றை கத்திரித்து, அதன் முள்களை நீக்கிவிட்டு அதன் சாற்றுப்பகுதியை முகத்தின் பக்கவாட்டில் பூசிக்கொள்ளவும். செடியில் இருந்து கத்தியை கொண்டும் கொஞ்சம் சாற்றை அகற்றி பயன்படுத்தலாம். இரண்டு இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு போதுமானது. தேவை எனில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம். இதில் கொஞ்சம் பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் இரவு படுக்கச்செல்லும் முன் தடவிக்கொள்ளவும். இரவு அப்படியே விட்டு விட்டு காலை எழுந்ததும் கழுவிக்கொள்ளவும்.
நீங்களே செய்யக்கூடிய ஆலோவேரா பேஸ் மாஸ்க்

எண்ணெய் பசை/ கலைவயான தன்மை கொண்ட சருமத்திற்கு: எண்ணெய் பசை மிக்க சருமம் எனில், உங்கள் சருமத்தில் இருந்து கூடுதல் எண்ணெயை, பருக்களை அகற்ற உதவும் கற்றாழை மாஸ்க் இது. ஒரு கோப்பையில் கற்றாழை சாற்றை எடுத்துக்கொள்ளவும். அதில் 10 முதல் 12 சொட்டு டீ டிரி ஆயில் விடவும். இதை நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவு படுக்கச் செல்லும் முன், முகத்தில் பூசிக்கொண்டு, காலையில் கழுவிக்கொள்ளவும். வாரம் ஒரு முறை இவ்வாறு பயன்படுத்தவும்.
உலர் சருமத்திற்கான கற்றாழை

உலர் சருமத்திற்கு: உலர் மற்றும் மங்கலான சருமத்தை மென்மையான சருமமாக மாற்ற, கற்றாழை, தேன் மற்றும் வெள்ளரி கொண்ட பேஸ் மாஸ்கை தயார் செய்யவும். இந்த மூன்று பொருட்களுமே நீர்த்தன்மை அளிக்க கூடியவை. இவற்றை பயன்படுத்தும் போது, சருமம் மென்மையாகி பொலிவு பெறுகிறது. ஒரு வெள்ளரி, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் கொஞ்சம் கற்றாழையை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை பூசிக்கொண்டு 20 நிமிடம் விட்டு பின்னர் கழுவிக்கொள்ளவும்.
வழக்கமான / பாதிப்புக்குள்ளாகும் சருமத்திற்கு கற்றாழை

கற்றாழை மற்றும் வாழைப்பழம் மாய்ஸ்சரைசிங் தன்மை மற்றும் பளபள வைக்கும் பேஸ் மாஸ்க். இது எல்லா வகையான சருமத்திற்கும் குறிப்பாக, வழக்கமான, எளிதில் பாதிக்கும் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இது சருமத்தை எரிச்சலில் இருந்து விடுவித்து, சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை மேம்படுத்துகிறது. ஒரு கோப்பையை வாழைப்பழத்தை மேஷ் செய்து, 2 ஸ்பூன் கற்றாழை மற்றும் சில தொட்டு பன்னீர் விடவும். இதை நன்றாக கலந்து, முகத்தில் பூசிக்கொள்ளவும். உலர்ந்த பிறகு கழுவிக்கொள்ள வும்.
கற்றாழை கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தவும்

உங்கள் சரும நல பராமரிப்பில் கற்றாழையை பயன்படுத்த மற்றொரு வழி, கற்றாழையை மூலப்பொருட்களில் ஒன்றாக கொண்ட அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதாகும். கற்றாழை நலன் கொண்ட, லீவர் ஆயுஷ் ஆலோ வேரா ஆயில் கிளியர் பேஸ் வாஷ் கொண்டு உங்கள் முகத்தை கழுவிக்கொள்ளவும். உங்கள் சருமத்தை சுற்றுச்சூழல் மாசில் இருந்து காக்கும் அதே நேரத்தில், சருமத்திற்கு கற்றாழை மாய்ஸ்சரைசிங் தன்மை அளிக்கும், லாக்மே 9 டூ 5 நேச்சுரலே லாஓ வேரா அக்வா ஜெல் சாதனத்தை பயன்படுத்துங்கள். கற்றாழையின் நற்குணங்கள் மற்றும் நாள் முழுவதும் யுவி கதிர்களில் இருந்து எஸ்.பி.எப் 20 பாதுகாப்பு அளித்து சருமத்தை நீர்த்தன்மையுடன் வைத்திருக்கும் லாக்மே 9டூ5 நேச்சுரேலே டே கிரீம் எஸ்பிஎப் 20 சாதனத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். உலர் மற்றும் கோடுகள் கொண்ட உதடுகளூக்கு வாசெலின் ஆலோ வேரா லிப் பாம் பயன்படுத்தவும். வெளியே பருவநிலை எப்படி இருந்தாலும் உதடுகளை மென்மையாக வைத்திருக்க இது உதவுகிறது.
நீங்கள் மிகுந்த அவசரத்தில் இருந்தால், உங்கள் சரும நல பராமரிப்பில் கற்றாழையை சேர்த்துக்கொள்வதற்கான வீடியோ வழிகாட்டியும் இருக்கிறது.
Written by Team BB on 26th Apr 2019