ஆலிவ் ஆயில் அளிக்கும் எண்ணற்ற மருத்துவ பலன்களுக்காக அது நம்முடைய சமையலறையில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறது. உங்கள் சாலெட் மீது பரவச்செய்து மேலும் சுவை கூட்ட அது உதவுகிறது என்பதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் ஆலிவ் ஆயிலை உங்கள் முகத்திற்கும் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆலிவ் ஆயிலை முக அழகிற்காக பயன்படுத்தும் வழக்கம் வரலாற்று நாயகி கிளியோபாட்ராவில் இருந்து துவங்குகிறது. ஆகச்சிறந்த அழகிகளில் ஒருவரான கிளியோபாத்ரா, தனது அழகு சாதனை முறைகளில் ஆலிவ் ஆயிலை பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆலிவ் ஆயிலியின் அழகு சாதன பலனை உணர்த்த வரலாற்று குறிப்பு மட்டும் அல்ல, இதனால் முகத்திற்கு ஏற்படக்கூடிய நலன்கள் குறித்து அறிவியலும் அநேக ஆதாரங்களை அளிக்கிறது.
வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகு சாதனங்கள் பலன் குறித்து உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை எனில், ஆலில் ஆயில் குறித்து நாங்கள் சொல்வதை கேட்டுக்கொள்ளுங்கள். ஆலிவ் ஆயிலை முக அழகிற்காக பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாதது என்று சொல்லலாம். உடல் நலத்தில் அக்கரை கொண்டவர்கள் ஆலிவ் ஆயில் இல்லாத உணவை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்பது போல, உங்களைப்போன்ற அழகு நலத்தில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த அற்புத எண்ணையை அழகு சாதன பயன்பாட்டில் சேர்த்துக்கொள்ள தவறக்கூடாது.
ஆலிவ் ஆயில் திரவ தங்கம் என்றும் அழைக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா? இது ஆண்டிஆக்சிடெண்ட் நிறைந்திருப்பதால், சருமத்தின் அழுக்கு, மாசு மற்றும் யுவி கதிர்கள் உள்ளிட்ட பிரிரேடிகள்களில் இருந்து காக்கிறது. மேலும் சூப்பர் மாய்ஸ்சரைசிங் அளிப்பதோடு முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழித்து பருக்களையும் இது குறைக்க உதவுகிறது.
ஆலிவ் ஆயிலை எந்த வகையில் எல்லாம் நீங்கள் முக அழகிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்...
- உங்கள் லிப் ஸ்கிரப்பின் ஒரு அங்கமாக..
- மேக்கப் ரிமூவராக
- மாய்ஸ்சரைசராக ...
- வரோதிக தன்மைக்கு எதிரான மருந்து
- இயற்கையான ஹைலட்டராக...
உங்கள் லிப் ஸ்கிரப்பின் ஒரு அங்கமாக..

மென்மையாகவும், கதுப்பான தன்மையுடம் இருக்கும் உதடுகளை பெற நாம் எல்லோருமே விருப்பம் கொண்டுள்ளோம். வெடிப்புகள் கொண்ட உலர்ந்த உதடுகள் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்பதோடு, உங்கள் தன்னம்பிக்கையையும் பாதிக்கும். நம்முடைய உதடுகளில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது, நுட்பமானது என்பதால் எளிதாக பாதிப்புக்கு உள்ளாக கூடியது. லிப் பாமை மட்டுமே பயன்படுத்துவது உங்கள் உதடுகளில் ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக சரி செய்து விடாது. ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?
எனவே தான் உங்கள் உதடு நலன் பராமரிப்பு வழக்கத்தில் லிப் ஸ்கிரப்பை பயன்படுத்துவது முக்கியமாகிறது. இதை நீங்கள் தவற விடுவதற்கில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் கவனம் செலுத்தவில்லை எனில், லிப் ஸ்கிரப் செயல்முறை உங்கள் சருமத்தை பெரிய அளவில் பாதிக்கலாம். ஆனால் ஆலிவ் ஆயுல் லிப் ஸ்கிரப்பை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் லிப் ஸ்கிரப்பை மிகவும் பாதுக்காப்பாக மேற்கொள்ளலாம்.
நீங்களே ஆலிவ் ஆயில் லிப் ஸ்கிரப்பை தயார் செய்து கொள்வது வீட்டிலேயே மென்மையான உதடுகளை பெறுவதற்கான செலவு குறைந்த வழியாகும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், ஆலிவ் ஆயில், தேன் மற்றும் நாட்டு சர்க்கரையை ஒரு கோப்பையில் நன்றாக கலந்து கொள்வது தான். இந்த கலவையை உதடுகள் மீது மெல்ல பூசிக்கொண்டு, பின்னர் மென்மைய வட்ட வடிவில் 3 முதல் 4 நிமிடங்கள் தேய்த்துக்கொள்ளவும். இதமான துணியால் துடைத்துக்கொள்ளவும். இதை தொடர்ந்து மாய்ஸ்சரைசிங் லிப் பாம் பயன்படுத்தினால் மிகவும் மென்மையான உதடுகளை பெற முடியும்.
மேக்கப் ரிமூவராக

ஆரோக்கியமான, மென்மையான, பொலிவான சருமத்தை விரும்பினால், ஒவ்வொரு நாளும் படுத்து தூங்குவதற்கு முன் உங்கள் மேக்கப்பை சுத்தம் செய்தும் கொள்வது மிகவும் அவசியமாகும். நாள் முழுவதும் மேக்கப்புடன் இருந்த நிலையில், உங்கள் சருமத்தை மூச்சுவிட அனுமதிப்பதே நல்லது. மஸ்கராரவுடன் தூங்குவது உங்கள் கண் இமைகளை கடினமாக்கி, அதை எளிதில் பாதிப்புக்குள்ளாக வைக்கிறது. மேலும் துளைகளை அடித்துக்கொண்டு வயோதின அறிகுறிகளை மேலும் விரைவாக்குகிறது.
எனினும் மேக்கப்பை அகற்றும் போது உங்கள் சருமம் மீது நீங்கள் கடினமாக நடந்து கொள்ள வேண்டியதில்லை என்பதும் முக்கியம். தொடர்ந்து இழுப்பது உங்கள் சருமத்தை பாதித்து முன்னதாகவே நுண் கோடு சுருக்கங்களை உண்டாக்கலாம். மேக்கப்பை அகற்றும் போது, தீவிரமாக தேய்ப்பது மற்றும் கடினமாக இழுப்பதை தவிர்க்க, ஆலிய் ஆயிலை தூய்மை படுத்தும் பொருளாக நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் உள்ளங்கையில் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை தடவிக்கொண்டு அதை முகம் முழுவதும் தடவிக்கொள்ளவும். இதற்காக பஞ்சையும் நீங்கள் பயன்படுத்தலாம். முகம் எண்ணெயில் ஊற மூன்று நிமிடங்கள் அனுமதிக்கவும். இதமான நீரில் முகத்தை கழுவி, மென்மையாக துடைத்துக்கொள்ளவும். இன்னும் மேக்கப் இருப்பதாக தோன்றினால் மீண்டும் ஒரு முறை ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி இவ்வாறு செய்து கொள்ளலாம்.
கண் மேக்கப்பை மென்மையாக அகற்றவும் ஆலிவ் ஆயில் உதவுகிறது. ஆலிவ் ஆயிலில் இரண்டு பஞ்சு துண்டுகளை நனைத்துவிட்டு அவற்றை கண்கள் மீது வைத்துக்கொள்ளவும். சில நிமிடங்களில், வாட்டர்புரூப் மஸ்காரா மற்றும் ஐலைனரை கரைக்கிறது என்பதை நீங்கள் உணரலாம். அதை அப்படியே துடைத்து எடுத்துவிடலாம். கண் மேக்கப்பை அகற்ற ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதன் சிறப்பு என்னவெனில் இது மிகவும் பாதுகாப்பானதாகும் என்பது தான்.
மாய்ஸ்சரைசராக ...

உங்களுக்கு மிகவும் உலர சருமம் எனில், நீங்கல் ஆலிவ் ஆயிலின் மாய்ஸ்சரைசிங் தன்மையை அதிக அளவில் பலன் பெறலாம். இதில் முதன்மையான ஃபேட்டி ஆசிட்கள் இருப்பதால் ஆலிவ் ஆயில் இயற்கையான மாய்ஸ்சரைசாக சிறப்பாக செயல்படுகிறது. ஃபேட்டி ஆசிட்கள் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை தக்க வைத்து, சருமம் மென்மையாக, மிருதுவாக, பளபளப்பாக இருக்க உதவுகிறது. மேலும் இதன் அற்புதமான மாய்ஸ்சரைசிங் தன்மை காரணமாக, ஆலிவ் ஆயில் சருமத்தை நீர்த்தன்மையுடன் இருக்க வைத்து அது, குளிர் காலங்களில் உலர் தன்மை பெறுவதை தடுக்கிறது.
உங்கள் சருமம் ஆண்டு முழுவதும் பனித்தன்மையோடு இருப்பதை விரும்புகிறீர்கள? ஆலிவ் ஆயிலை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தவும். உலர் சருமத்தை எதிர்கொள்ள இது ஒன்று மட்டுமே போதுமானது. முகம் முழுவதும், ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டு மேக்கப்பிற்கான அடித்தளமாக அமைத்து உங்கள் மேக்கப் செயல்முறையை துவக்கவும். இது நாள் முழுவதும் சரும உலர்த்தன்மை மற்றும் பாதிப்புகளை போக்க உதவுகிறது.
வரோதிக தன்மைக்கு எதிரான மருந்து

வயோதிக தன்மைக்கு எதிராக நீங்கள் அதிகம் செய்ய முடியாவிட்டாலும், உங்கள் சருமத்தை நீங்கள் பலவிதங்களில் பராமரித்து அதன் இளமை பொலிவை இயன்றவரை தக்க வைத்துக்கொள்ள முடியும். முகத்தில் தொடர்ச்சியாக ஆலிவ் ஆயிலை தடவிக்கொள்வது, வயோதிக தன்மை பெறுவதில் இருந்து உங்கள் சருமத்தை காக்கிறது. ஆலிவ் ஆயில் ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருப்பதால், முகத்தின் கொலாஜனை மேம்படுத்து, மென்மையுடனும், பொலிவுடனும் வைத்திருக்க உதவுகிறது.
உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழிவுக்கொண்டு மென்மையாக துடைத்துக்கொள்ளவும். அடுத்ததாக, உங்கள் கைவிரல்களில் கொஞ்சம் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொண்டு, முகம் மற்றும் கழுத்தில் தடவிக்கொள்ளவும். சில நிமிடங்களுக்கு ஆலிவ் ஆயிலை வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். தினமும் படுக்கச்செல்லும் முன் இவ்வாறு செய்வது, சுருக்கங்கள் மற்றும் நுண்கோடுகள் தோன்றுவதை குறைத்து, முன்கூட்டியே வயோதிக தன்மை தோன்றுவதை தடுக்கிறது.
இயற்கையான ஹைலட்டராக...

ஹைலைட் செய்வது மற்றும் காண்டூர் செய்வது நேரக் பிடிப்பது என நீங்கள் நினைத்தால் ஆலிவ் ஆயில் உங்களுக்கு கைகொடுக்கும். ஹைலைட் செய்ய தேவையான செயல்முறைக்கு போதுமான நேரம் இல்லாத நாட்களில், ஆலிவ் ஆயிலை நீங்கள் நாடலாம். ஆலிவ் ஆயிலை ஹைலைட்டராக பயன்படுத்துவதன் சிறப்பான அம்சம் அது மிகவும் பாதுகாப்பானது என்பது ஆகும்.
ஆலிவ் ஆயில் இயற்கையான ஹைலைட்டராக அருமையாக செயல்படுகிறது. இயற்கையான பொலிவை பெற கொஞ்சம் ஆலிவ் ஆயிலை உங்கள் பவுண்டேஷனில் சேர்த்து பூசிக்கொண்டால் அருமையான இதமான தோற்றத்தை பெற முடியும். மேலும், உங்கள் முகத்தின் எடுப்பான பகுதிகளில் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டு முக அழகை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்.
Written by Team BB on 28th Apr 2019