தொடை அரிப்பை எப்படி எளிதாக தடுக்கலாம்

Written by Kayal Thanigasalam17th Dec 2021
 தொடை அரிப்பை எப்படி எளிதாக தடுக்கலாம்

மெலிதான லெகிங்ஸில் ஓடும் பயிற்சி அல்லது ஷாட்ஸ் போன்ற உங்களுக்கு விருப்பமான ஆடையை அணிந்து கொண்டிருக்கும் போது நீங்கள் எப்போதாவது சிவத்தல், தடிப்புகள் அல்லது எரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டதுண்டா? இந்த மாதிரியான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டிருந்தால், தொடை அரிப்பு என்ற எரிச்சலான விஷயங்களைப் பற்றி உங்களுக்கு புதிதாக சொல்ல வேண்டியதில்லை. இருதொடைகளின் உட்புறத் தோல்கள் ஒன்றோடொன்று உராயும் போது எரிச்சல்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக சருமத்தில் சொறி, அரிப்பு அல்லது கொப்பளங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடை அரிப்பு என்பது பொதுவானது என்றாலும், அதைத் தடுப்பதற்கான வழிகளும் உள்ளன. அதற்காக உங்களுக்கு உதவுவதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். உங்கள் உட்புறத் தொடைகளில் அரிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காக, உங்களுக்கு எளிய உதவிக்குறிப்புகளை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்.

 

உங்கள் ஆடைகளை சரியாக தேர்வு செய்யவும்

உங்கள் உட்புறத் தொடைகளில் வாஸ்லைன் அல்லது முகப்பவுடரை பூசிக் கொள்ளவும்

சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதே. தொடையின் உட்புறத் தோலில் ஏற்படும் அரிப்பைத் தடுப்பதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது பாலியஸ்டர் அல்லது ஸ்பான்டெக்ஸ் கலந்த ஆடைகளை அணிய முயற்சிக்கவும். இது உங்கள் இரு தொடைகளும் ஒன்றோடொன்று உராய்வதைத் தவிர்த்து அரிப்பைக் கட்டுப்படுத்துகிறது. எளிதான அசைவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் மற்றும் மிக முக்கியமாக, வியர்வையால் உங்கள் ஆடைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் யோசனையே உங்கள் தொடைகளுக்கு இடையே ஏற்படும் உராய்வைக் குறைப்பதற்குத் தான். சுற்றித் திரியும் போது, ​​உங்கள் தொடைகளுக்கு காற்றோட்டம் கிடைக்கவும் மற்றும் தளர்வான ஆடைகளுக்கு மாறவும்.

 

உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளப் பகுதியையும் சுத்தமாக வைத்திருங்கள்

உங்கள் உட்புறத் தொடைகளில் வாஸ்லைன் அல்லது முகப்பவுடரை பூசிக் கொள்ளவும்

தவறாமல் தினசரி குளிப்பது, சுத்தமான உள்ளாடைகள் மற்றும் ஆடைகளை அணிந்துகொள்வதன் மூலம் அரிப்பைத் தவிர்க்க உதவும். சுகாதாரமற்று இருப்பத உங்கள் உட்புற தொடையை சுற்றி வியர்வை மற்றும் அழுக்கு சேர்வதற்கு வாய்ப்புள்ளது. அதன் விளைவாக இந்த பகுதிகள் உராய்வு மற்றும் அரிப்பு சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே, உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளப் பகுதியையும் நீங்கள் நன்றாக சுத்தம் வைத்துக் கொள்வதோடு, உங்கள் தொடைகளும் நன்றாக கழுவ வேண்டும் என்பதை நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

உங்கள் சருமத்தை உலர்ந்திருக்கும்படி வைத்திருக்கவும்

உங்கள் உட்புறத் தொடைகளில் வாஸ்லைன் அல்லது முகப்பவுடரை பூசிக் கொள்ளவும்

தொடை அரிப்புக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று உங்கள் தொடைகளுக்கு இடையே சேரும் வியர்வையாகும். எனவே முடிந்தவரை உங்கள் உடலில் வியர்வைகளை தங்க விடாமல் உலர்ந்து இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் ஷார்ட்ஸ், ஆடைகள் மற்றும் பாவாடைகளை அணிந்திருக்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், உடற்பயிற்சியில் ஈடுபடும்போது சற்று தளர்வான ஆடைகளை அணியுங்கள். உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் ஆடைகளை மாற்றிக் கொள்ள ஒரு மாற்று ஆடையை எடுத்துச் செல்வது மிகவும் சிறந்ததாகும். இம்மாதிரி சின்னச்சின்ன விஷயஙகளை செய்வதன்மூலம் அரிப்பைத் தவிர்க்க பெரிதும் உதவும்

 

எப்போதும் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

உங்கள் உட்புறத் தொடைகளில் வாஸ்லைன் அல்லது முகப்பவுடரை பூசிக் கொள்ளவும்

ஆம், நீர்ச்சத்துடன் சருமத்தை வைத்திருப்பது தொடை அரிப்பைக் குறைக்க உதவும்! உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும், உங்கள் வியர்வையிலிருந்து வெளிப்படும் உப்பின் அளவையும் குறைக்க உதவுகிறது. இதை இப்படிப் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் தொடைகளைச் சுற்றிச் சேரும் உங்கள் வியர்வை உலர்ந்தவுடன் எஞ்சியிருக்கும் உப்பு, அரிப்பை அதிகமாக்கும். எனவே, உங்கள் வியர்வையிலிருந்து வெளிப்படும் உப்பின் அளவைக் குறைப்பதற்கு சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்திருங்கள்.

 

உங்கள் உட்புறத் தொடைகளில் வாஸ்லைன் அல்லது முகப்பவுடரை பூசிக் கொள்ளவும்

உங்கள் உட்புறத் தொடைகளில் வாஸ்லைன் அல்லது முகப்பவுடரை பூசிக் கொள்ளவும்

இது மிகவும் சுலபமானதாகும். நீங்கள் உடற்பயிற்சி செய்ய செல்வதற்கு முன்போ அல்லது செய்ய தொடங்குவதற்கு முன்போ, உங்கள் தொடைகளின் உட்புறத் தோலில் சிறிது முகப்பவுடரை பூசிக் கொள்ளலாம் அல்லது Vaseline Original Pure Skin Jelly யை ஒரு முறை தடவிக் கொள்ளலாம். இது உங்கள் தொடைகளின் உட்புறத் தோலில் ஒன்றோடொன்று உராய்வு ஏற்படாமலும் அல்லது எரிச்சலை தடுப்பதற்கும், மேலும் மிருதுவாகவும் இருப்பதை உறுதி செய்யும். ரொம்ப ஈஸி!

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
2625 views

Shop This Story

Looking for something else