வேஸ்லின் பெட்ரோலியம் ஜெல்லி இல்லாத அழகு சாதன அலமாரி இருக்காது. ஏதாவது ஒரு கட்டத்தில் அதை நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள். குறிப்பாக குளிர் மாதங்களில். Vaseline Original Pure Skin Jellyயை விட முடியவில்லை என்பதற்கு வேறு காரணம் உண்டு. வறண்ட, வெடிப்புகள் கொண்ட சருமத்தை குணப்படுத்துவது மட்டுமே அதன் வேலை அல்ல. மேக்கப் ரிமூவ் செய்வதற்கும் க்ளாஸ் தோற்றம் கொண்ட கண் இமைகள் கிடைப்பதற்கும் வேஸ்லின் ஒரிஜினல் ப்யூர் ஸ்கின் ஜெல்லி அவசியம். உங்களின் அன்றாட மாய்ஸ்சுரைசஸ் லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய வேஸ்லின் ஒரிஜினல் ப்யூர் ஸ்கின் ஜெல்லி பற்றிய அறிமுகம் இதோ…

 

01. மேக்கப் ரிமூவ் செய்வதற்கு

vaseline

பயணம் செய்யும் போது அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்ல விரும்ப மாட்டீர்கள் தானே. அதோடு, லிக்விட் மேக்கப் ரிமூவர் சிந்தி பையை நாசமாக்குவதை விரும்ப மாட்டீர்கள். வேஸ்லின் பெட்ரோலியம் ஜெல்லி எடுத்துச் செல்வது அதற்கு நல்ல தீர்வு. மிருதுவான மேக்கப் ரிமூவர் என்பதோடு வேஸ்லின் பெட்ரோலியம் ஜெல்ல நல்ல மாய்ஸ்சுரைஸரும்கூட. அதைச் செய்வது ரொம்ப சிம்பிள். முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துவிட்டு சுத்தமான காட்டன் பேட் மூலம் துடைத்துவிட வேண்டும். இதோ, சுத்தமான மேக்கப் இல்லாத முகம் ரெடி.

 

02. லேஷ் கண்டினஷனர் இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். தினமும் மஸ்காரா பயன்படுத்தினால் கண் இமை வறண்டு போகும். மிகக் குறைவான அளவில் வேஸ்லின் பெட்ரோலியம் ஒரிஜினல் ஸ்கின் ஜெல்லி எடுத்து பயன்படுத்தினால் கண் இமைகள் சரியான ஷேப் கொண்டிருக்கும். இது நல்ல கண்டிஷனராகவும் இருக்கும். நாள் முழுவதும்.

vaseline

இதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். தினமும் மஸ்காரா பயன்படுத்தினால் கண் இமை வறண்டு போகும். மிகக் குறைவான அளவில் வேஸ்லின் பெட்ரோலியம் ஒரிஜினல் ஸ்கின் ஜெல்லி எடுத்து பயன்படுத்தினால் கண் இமைகள் சரியான ஷேப் கொண்டிருக்கும். இது நல்ல கண்டிஷனராகவும் இருக்கும். நாள் முழுவதும்.

 

03. இயற்கையான ஹைலைட்டர்

vaseline

நேச்சரலான ஃபினிஷ் வேண்டும், ஓவர் பளபளப்பு வேண்டாம் என்பதுதான் உங்கள் விருப்பமா. பல ஹைலைட்டர்கள் இதற்கு உதவாது. கவலை வேண்டாம். முகத்தின் ஹைலைட் பாயிண்ட் பகுதிகளில் கொஞ்சம் வேஸ்லின் பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் போதும். முன் நெற்றி, மூக்கு என எல்லா பகுதிகளிலும் தடவினால் மின்னல் வேகத்தில் ஜொலிக்கும் முகம் தயார்.

 

04. க்ளாஸ் தோற்றம் கொண்ட கண் இமைகள்

vaseline

Image courtesy: @coolgirlswearmugler

க்ளாஸ் தோற்றம் கொண்ட கண் இமைகள்தான் இப்போதைய டிரென்ட். ஆனால் அதற்காக இன்னொரு பொருளில் செலவு செய்ய வேண்டியதில்லை. நம்பகமான வேஸ்லின் போதுமானது. கண் இமைகள் மீது லேசாக அப்ளை செய்தால் போதும், ஃபிரெஷ்ஷாக இருக்கும். மேக்கப் தேவையே இல்லை. அல்லது உங்களது ஃபேவரைட் ஐ ஷேடோவுடன் இதை மிக்ஸ் செய்யலாம்.

 

05. நெயில் பாலிஷ் கறைகளைத் தவிர்ப்பதற்கு

vaseline

வீட்டிலேயே மேனிக்யூர் செய்யும் போது சருமத்தின் மீதும் நெயில் பாலிஷ் பட்டுவிடும். நகத்தை சுற்றி இருக்கும் ஸ்கின் மீது வேஸ்லின் அப்ளை செய்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம். நகத்தைச் சுற்றி இருக்கும் சருமத்தின் மீது இதை அப்ளை செய்துவிட்டு, மேனிக்யூர் காய்ந்த பிறகு துடைத்து எடுத்துவிட்டால் அற்புதமான ஃபினிஷ் ரெடி.