மாதவிடாய் காலத்தின் போது சருமத்தை வெடிப்பு ஏற்படாமலும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி

Written by Kayal Thanigasalam23rd Nov 2021
மாதவிடாய் காலத்தின் போது சருமத்தை வெடிப்பு ஏற்படாமலும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி

மாதவிடாய் காலம் மிகவும் மோசமானது என்பதை பெண்களாகிய நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம் என்று நினைக்கிறேன். மேலும் இந்தக் காலத்தில் உங்களுக்கு இரத்தப்போக்கு, வீக்கம் அல்லது அழுத்தமான, கட்டுப்படுத்த இயலாத மனநிலை போன்றப் பிரச்னைகளை எதிர்கொள்வது மட்டுமல்ல; அனைத்துப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இல்லாவிட்டாலும் இந்த மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் அனுபவிக்கும்,'பீரியட் ஸ்கின்' பிரச்னையால் மாதவிடாய்க்கு முன்பும், பின்பும் அல்லது மாதவிடாய் காலத்தின் போதும் பருக்கள், ஹார்மோன் முகப்பரு, பொலிவற்றத் தன்மை மற்றும் எண்ணெய்த் தன்மை ஆகியவற்றால் பெண்கள் மிகவும் 7ளாகிறார்கள். நமது சருமம் ஹார்மோன்களினால் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது போல் நாம் உணர்ந்தாலும், உண்மையில் மாதவிடாய் கால சருமப் பிரச்சனைகளை சமாளிக்க சில எளிய வழிமுறைகளைப் கடைபிடித்தால் போதுமானது. அவற்றை நாங்கள் பட்டியலிடுகிறோம், நீங்கள் குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.

 

01. நீரேற்றத்துடன் இருங்கள்

05. உடற்பயிற்சி செய்யவும்

நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். எந்த மாதமாக இருந்தாலும் உங்கள் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான சருமப் பராமரிப்பு ஆலோசனையாகும், ஆனால் மாதவிடாய் காலத்தில் இது மிகமிக முக்கியமானதாகும். இது சருமத்திற்கு ஆரோக்கியமான பொலிவைத் பராமரிக்க உதவுவது மட்டுமல்லாமல், இது தண்ணீர் கோர்த்துக்கொள்வதைக் குறைத்து, வீக்கம் ஏற்படாமலும் தடுக்கும். உங்கள் தசைப்பிடிப்பு ஏற்படாமலிருக்கவும் உதவும்.

 

02. ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள்

05. உடற்பயிற்சி செய்யவும்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுவதற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்று, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக உங்கள் காய்கறிகள் மற்றும் பழங்களில் உண்ண வேண்டும். சர்க்கரை இல்லாமல் உண்பது மிகவும் கடினமானது என்றும், அப்படி சர்க்கரையைத் தவிர்த்து சாப்பிடச் சொல்வது நமக்கு மிகுந்த ஆத்திரத்தை பொங்கி எழச் செய்யும், ஆனால் மாதவிடாய் காலத்தில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத் தவிர்த்துவிட்டு, கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ணுவதனால், அவை சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். 

 

03. சாலிசிலிக் அமில க்ளீன்ஸர்களை பயன்படுத்தவும்

05. உடற்பயிற்சி செய்யவும்

மாதவிடாய் காலத்தின் போது உங்கள் சருமம் மிகவும் எண்ணெய்ப் பசை அல்லது அதிகமான முகப்பருக்கள் தோன்றுவதை நீங்கள் கவனித்தீர்களென்றால், சாலிசிலிக் ஆசிட் க்ளீன்சரை பயன்படுத்த வேண்டிய நேரம் இது. சாலிசிலிக் அமிலம் உங்கள் சருமத்தில் படியும் அதிகப்படியான எண்ணெயை அகற்றுவதோடு, சரும வெடிப்புகளைத் தடுக்கவும் உதவுகிறது. ஒரு விஷயத்தை உங்கள் தினசரி சருமப் பராமரிப்பு வழக்கத்தில் இணைத்துக்கொள்ளுங்கள் அல்லது வழக்கமாக பயன்படுத்தும் க்ளீன்ஸருக்கு பதிலாக மாதவிடாய் காலத்தின் ஒரு வாரத்திற்கு முன்பு க்ளீன்சரை மாற்றவும். உங்கள் சருமத்திலுள்ள அனைத்து அசுத்தங்களையும் சுத்தப்படுத்த Dermalogica Breakout Clearing Foaming Wash ஐ நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதில் சாலிசிலிக் அமிலம், தேயிலை மர எண்ணெய், லாவெண்டர் மற்றும் ஆரஞ்சு பழத் தோல் ஆகியவை உள்ளன. ஆகையால் இவை வெடிப்புகளை அகற்றுதல், சருமத்தை மென்மையாக்குதல் மற்றும் புத்துயிர் பெறச் செய்தல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்கின்றன.

 

04. சன்ஸ்கிரீனைப் போட்டுக் கொள்ளவும்

05. உடற்பயிற்சி செய்யவும்

மாதவிடாய் என்பது வேடிக்கையான விஷயமல்ல. மாதவிடாய் காலத்தில் உங்களுடைய சருமம் சூரியக் கதிர்களால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும். இதை எதிர்த்துப் போராட, நீங்கள் உள்ளேயிருந்தாலும் சரி, வெளியேயிருந்தாலும் சரி, புற ஊதாக் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க, சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்காக Lakmé Sun Expert Tinted Sunscreen 50+++ SPF. நாங்கள் பரிந்துரை செய்கிறோம். மேலும் பரந்த-நிறமாலை பாதுகாப்பை அளிப்பது மட்டுமல்லாமல் உங்கள் சருமத்தை மென்மையாகவும், சீராகவும் வைத்திருப்பதற்கு கண்ணியமான பாதுகாப்பையும் கொடுக்கிறது.

 

05. உடற்பயிற்சி செய்யவும்

05. உடற்பயிற்சி செய்யவும்

நீங்கள் மாதவிடாய் காலத்தில் நாள் முழுவதும் படுக்கையில் படுத்துக் கொண்டு, நெட்ஃபிக்ஸ்-மராத்தான் பார்த்துக் கொண்டேயிருப்பீர்கள் எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் சரும நிறத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இது உதவாது என்று குறை கூறுவதில் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். நடைப்பயிற்சி உட்பட உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பாக இருத்தல் போன்றவை செயல்பாடுகள் உங்கள் சருமத்தை மாதவிடாய் காலம் முழுவதும் ஆரோக்கியமான வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதனால் தசைப்பிடிப்புகளால் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளை குறைய உதவுகிறது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
691 views

Shop This Story

Looking for something else