உங்கள் சரும நலனுக்காக தினந்தோறும் நீங்கள் செலவிடுவது 2 நிமிடமாக இருந்தாலும் சரி, 10 நிமிடங்களாக இருந்தாலும் சரி, உங்கள் இலக்கு என்பது பிரச்சனை இல்லாத, இளமையான, பொலிவு மிக்க சருமத்தை பெறுவதுதான். எந்த சரும நல பழக்கமும், உங்கள் சருமத்தின் மீது சீரான பயனை அளிக்க வேண்டும். உங்கள் சரும நலன் செயல்திறன் பெற உங்களுக்கு விலை உயர்ந்த சிகிச்சை அல்லது அழகு சாதனங்கள் தேவையில்லை. நுண்கோடுகள், சுருக்கங்கள் போன்ற சரும் பிரச்சனைகள் சமாளிக்க உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம் வாசலின் பெட்ரோலியம் ஜெல்லி தான்.
- வாசலினை மிகச்சிறந்த சரும நல சாதனமாக்க, அதில் அப்படி என்ன இருக்கிறது?
- நைட் கிரீம்
- பாதிப்பை ஏற்படுத்துவதில்லை
- மிகச்சிறந்த கண்களுக்கு கீழான கிரீம்
- மேக்கப்பை மென்மையாக அகற்றுகிறது.
- உலர் சருமம் சீராவது
வாசலினை மிகச்சிறந்த சரும நல சாதனமாக்க, அதில் அப்படி என்ன இருக்கிறது?

வாசலின் தாது எண்ணெய்கள் மற்றும் மெழுகால் செய்யப்படுபவதால் அதற்கு ஜெல்லி போன்ற தன்மை இருக்கிறது. உங்கள் சருமத்தில் தண்ணீர் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்கும் அளவுக்கு அதன் தன்மை அமைந்துள்ளது.
வாசலின் உங்கள் சருமத்திற்கு எப்படி பலன் தருகிறது?
நைட் கிரீம்

அது சிறந்த நைட் கிரீமாக செயல்படுகிறது. நீங்கள் இரவு தூங்கச்செல்லும் முன், சரியான அளவு தடவிக்கொள்வது. இது, தண்ணீர், ஈரப்பதத்தை தக்க வைத்து, இரவில் அவை வெளியேறி, சருமம் உலராமல் தடுக்கிறது.
பாதிப்பை ஏற்படுத்துவதில்லை

இது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனத்தெரியுமா? அதாவது பருக்களை உண்டாக்குவதோ அல்லது அதன் வளர்ச்சிக்கு உதவுவது இல்லை. இது துளைகளை அடைத்துக்கொண்டு தேவையில்லாத சரும பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை. எனினும் பரு பாதிக்கும் தன்மை இருந்தால் வாசலினை தவிர்ப்பது நல்லது.
மிகச்சிறந்த கண்களுக்கு கீழான கிரீம்

உங்கள் கண்கள் கீழ் பகுதியில் இதை தடவிக்கொண்டால், கண்களைச்சுற்றியுள்ள பகுதி பொலிவுடன் திகழும் வகையில் கண் விழிக்கலாம்.
மேக்கப்பை மென்மையாக அகற்றுகிறது.

நல்ல புகை தன்மை கொண்ட கண்களை பெற விருப்பமா? ஆனால் நாள் முடிவில் அதை அகற்றுவதை விரும்பவில்லையா? உங்கள் கண் மேக்கப் மீது வாசலின் கொண்டு மசாஜ் செய்து, அதை இளக வைத்து அதன் பிறகு கிளின்சர் கொண்டு மேக்கப் மிச்சத்தை அகற்றலாம். வாசலின் மென்மையான செயல்திறன் வாய்ந்தது.
உலர் சருமம் சீராவது

உங்களுக்கு உலர் சருமம் இருந்து, அதனால் பாதிப்பு ஏற்படும்போது, வாசலின் பலன் தரும். இது சருமத்தை இதமாக்கி, சிராக்குகிறது. ஈரப்பதம் அளித்து அதை சருமத்தில் தக்க வைத்து, உலர் தன்மையை சரியாக்குகிறது.
Written by Team BB on Mar 10, 2019