மூக்கைச் சுற்றி இருக்கும் சருமம் சொரசொரப்பாக இருப்பது பலருக்கும் இருக்கும் பாதிப்பு. அதெல்லாம் ஒரு பிரச்சனையாக கிடையாதுதான். ஆனால் அந்தப் பகுதியில் ஃபவுண்டேஷன் ப்ளென்ட் செய்யும் போதுதான் பிரச்சனையே தெரியும். சொரசொரப்பான, செதில் செதிலான சருமத்தில் அப்ளை செய்யும் ஃபவுண்டேஷன், கன்சீலர் பிசுபிசுப்பாக மாறிவிடும். இது தோற்றத்தைக் கெடுக்கும்.

சொரசொரப்பான சருமம் ஏன் ஏற்படுகிறது என்பதே உங்களுக்குப் புரியாது. அதற்கான நான்கு முக்கியமான காரணங்களை இங்கே பட்டியல் செய்திருக்கிறோம்.

 

01. ஆக்ஸிடேடிவ் பாதி்ப்பு

01. ஆக்ஸிடேடிவ் பாதி்ப்பு

சுற்றுச் சூழலில் உள்ள பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் படுவதுதான் சருமம் சொர சொரப்பாவதற்கு முக்கியமான காரணம். வானிலை மாற்றத்தாலோ, திடீரென வெப்ப நிலை மாறுவதாலோ ஏற்படும் சரும சொரசொரப்பு அதில் ஒன்று. இது மூக்கைச் சுற்றி இருக்கும் சருமத்தை வறண்டு போக வைக்கும். பிற பகுதி சருமம் பட்டுப் போல இருந்தாலும் மூக்கைச் சுற்றிய பகுதி மட்டும் சொரசொரப்பாக இருக்கும். தினமும் நல்ல தரமான சன்ஸ்கிரீன் அப்ளை செய்வது மூலம் இதைத் தவிர்க்கலாம்.

 

02. சளி, அலர்ஜி

02. சளி, அலர்ஜி

சளி அல்ல அலர்ஜியால் தும்மல் ஏற்பட்டால் மூக்கைச் சுற்றி இருக்கும் சருமம் உலர்வாகவே இருக்கும். இது அடிக்கடி மூக்கைச் சீந்துவதனாலோ, தொடுவதாலோ, சருமத்தின் மீது அழுத்தம் கொடுப்பதாலோ ஏற்படலாம். மிருதுவான டிஷ்யூ மூலம் மென்மையாக மூக்கை சுத்தம் செய்வது மூலம் இதைத் தவிர்க்கலாம்.

 

03. நீண்ட நேர ஹாட் ஷவர்

03. நீண்ட நேர ஹாட் ஷவர்

நீண்ட நேரம் ஹாட் ஷவரில் குளிப்பது நம் அனைவருக்குமே பிடித்தமானதுதான். முகத்தையும்கூட சூடான தண்ணீரில் காட்டுவோம். ஆனால் சூடான தண்ணீர், சருமத்தில் உள்ள நீர்ச் சத்தை எடுத்துவிடும். இதனால் சருமம் உலர்வாகவும் செதில் செதிலாகவும் மாறும். அதனால் முடிந்த வரை ஹாட் ஷவர் தவிர்க்கவும். தவிர்க்க முடியவில்லை என்றால் குறுகிய நேரத்தில் முடித்துவிடலாம். அல்லது முகத்தை சூடான தண்ணீரில் காட்டுவதைத் தவிர்க்கலாம்.

 

04. நீர்ச் சத்தின்மை

04. நீர்ச் சத்தின்மை

போதுமான அளவு மாய்சுரைஸர் பயன்படுத்திய பிறகும் மூக்கை சுற்றி இருக்கும் பகுதி ரொம்ப உலர்வாகவே இருக்கும். இது நீர்ச் சத்துக் குறைவால் ஏற்படலாம். தினமும் அதிக தண்ணீர் குடிப்பது மூலம் இதைத் தவிர்க்கலாம். இதனால் உடலின் உள்ளேயும் வெளியேயும் நீர்ச் சத்து அதிகமாகும்.