உங்கள் செல்பேசி என்பது உங்கள் கைகளின் நீட்டிப்பு என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். செல்பேசிதான் உங்கள் வலதுகரம். காலையில் கண் விழித்ததும் முதலில் நீங்கள் தேடுவது உங்கள் பேசியைத்தான். அது மட்டும் அல்ல, தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை நாம் அலட்சியம் செய்தும் வருகிறோம். இந்த உண்மையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். அதனால் தான், உங்களுக்குப் பிடித்த செல்பேசி எப்படி உங்கள் சரும நலனை பாதிக்கிறது என சொல்ல இருக்கிறோம். உங்கள் மின்னணு சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீல கதிர்களின் தீங்கான தன்மைகள் குறித்தும், அது உங்கள் சருமத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 
 
அதிக ஆற்றல் கொண்ட கண்ணுக்கு புலனாகும் ஒளி என குறிப்பிடப்படும் நீல நிற கதிர்களை பொறுத்தவரை சூரியனிடம் இருந்து தான் அவை அதிகம் வெளிப்படுகின்றன. இருப்பினும், உங்கள் கம்ப்யூட்டர், செல்பேசி, படுக்கயறையில் இருக்கும் விளக்கு கூட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் குறிப்பாக இந்தத் திரைகளை நாம் முகத்திற்கு அருகிலேயே வைத்திருக்கிறோம். ஆனால், நீல நிற கதிர்கள் தான் உங்கள் சருமத்தின் நவீன எதிரி என உணர்த்த அழுத்தமான ஆதாரங்கள் இருக்கின்றன.
 
சருமத்திற்கு ஏன் தீங்கானது:
 
நீல நிற கதிர்கள், பிரி ரேடிகல்சை ஊக்குவிக்கின்றன. இவை சருமத்தை பாதிக்க கூடிய, அதிக அளவில் வினை புரியும் ஆற்றலைக் கொண்டவையாக இருக்கின்றன. பிரி ரேடிகல்ஸ் கொலாஜன் மற்றும் இலாஸ்டின் அமைப்புகள் மீது சேதம் உண்டாக்கி, சுருக்கங்கள் மற்றும் தளர்வுக்கு உள்ளாக்குகிறது. சில வல்லுனர்கள் இதை, யு.வி.ஏ மற்றும் யு.வி.பி கதிர்கள் பாதிப்புக்கு நிகரானது என்கின்றனர். இது முதுமை தன்மையை விரைவாக்கி, தீவிர பிக்மென்டேஷனை ஏற்படுத்துகிறது.
 
நீல நிற கதிர்கள் தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோனான மெலாடோனின் சுரப்பின் மீது தாக்கம் செலுத்தி, நீங்கள் களைப்படையவில்லை என தோன்றச்செய்து, உங்கள் சிர்காடியன் ரிதமை பாதிக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். புதிய தகவல் என்னவெனில், நீல நிற கதிர்கள் உங்கள் சரும செல்களின் சிர்காடின ரிதத்தையும் பாதிக்கிறது என்பது தான். வெளியே இருள் கவிழ்ந்துவிட்ட சூழலிலும் அது பகல் நேரம் என நினைத்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், சருமத்தின் பழுதுபார்க்கும் தன்மை பாதிப்புக்குள்ளாகிறது.
 

நீல ஒளியில் இருந்து சருமத்தை காக்க

நீல ஒளியில் இருந்து சருமத்தை காக்க

·உங்கள் செல்பேசிக்கு நீல நிற ஒளி கவசம் போடவும். இவை மிகவும் மலிவானது, எளிதாக கிடைக்கிறது.
·உங்கள் செல்பேசியில்  இரவு மோடுக்கு மாறுவதன் மூலம் நீல ஒளியில் இருந்து மஞ்சள் ஒளிக்கு மாறலாம். ஒரு கிளிக்கில் உங்கள் சருமத்தை காக்கலாம். 
·நீல ஒளியில் இருந்து சருமத்தை காக்கும் கீரிமை நாடவும்.

·நீல ஒளி தாக்கத்தை குறைக்க கண்ணாடி திரை மீது கோட்டிங் பயன்படுத்தவும். 

·இரவு நேரத்தில் கெட்ஜெட்களை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்தவும்.
 
உங்கள் சருமத்தைவிட கேட்ஜெட் திரைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்.