உங்களுக்குத்தெரியுமா? கரி முகமூடி தான் அழகு சாதன உலகில் இப்போது பரபரப்பாக பேசுப்படுகிறது. இந்த முகமூடி சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, மென்மையான மற்றும் பொலிவான தோற்றத்தையும் தருகிறது. உங்கள் அழகு சாதன பழக்கத்தில் இதையும் சேர்த்துக்கொள்வதற்கான காரணங்களை பார்க்கலாம்: 
 
 
 

கரி முகமூடியால் என்ன பலன்?

கரி முகமூடியால் என்ன பலன்?

உங்கள் சரும கவலைக்கான முக்கிய காரணமாக சுற்றுச்சூழல் மாசு அமைகிறது. தூசுகள் சரும துளைகளில் அடைத்துக்கொண்டு அதன் பொலிவை மங்கலாக்குகிறது. கரி, இந்த தூசுகளை அகற்றி, உங்கள் சருமத்தை முழுவதுமாக சுத்தமாக்குகிறது. இந்த முகமூடி, சருமத்தின் எண்ணெய் பசை பகுதியையும் கட்டுப்படுத்தி, கரும்புள்ளி மற்றும் பருக்களையும் தடுக்கிறது. 

கரி முகமூடி எப்படி செயல்படுகிறது? 

சருமத்தில் செயல்படும் கரி, கிருமிகள், நச்சுகள், தூசு மற்றும் எண்ணெய் பசையை அகற்றுகிறது. தோல் போல உரிக்க கூடிய முகமூடி என்றால், இது சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் செயல்பட்டு, இறந்த செல்களை உதிரச்செய்கிறது. இதன் விளைவாக சருமம் தெளிவாக, சுத்தமாக ஆகிறது. இதன் பலன்கள் வருமாறு:

 

கரி முகமூடி பலன்கள்

கரி முகமூடி பலன்கள்

#1 உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது
கரி முகமூடி சருமத்தில் படிந்திருக்கும் தூசு மற்றும் மாசுக்களை அகற்றுகிறது. முகமூடியை கழுவும் போது, சருமம் எத்தனை பொலிவாக இருக்கிறது என்பதை உணரலாம். உங்கள் சருமம் உடனடி பொலிவு பெற இந்த முகமூடியை பயன்படுத்தலாம்.

#2 இறந்த செல்கள் அகற்றம்
சருமத்தை பொலிவாக்குவதோடு, கரி முகமூடி, அதன் கரடுமுரடான தன்மை காரணமாக சருமத்தை எக்ஸ்போலியேட் செய்கிறது. இறந்த செல்களை அகற்றி, சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது.  

#3 எண்ணெய் பசை இல்லை
கரி முகமூடி சருமத்தின் எண்ணெய் பசையையும் சமன் செய்கிறது. பருக்கள் பாதிப்பு கொண்ட எண்ணெய் பசை சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது. வழக்கத்தைவிட எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் கோடை காலங்களில் இது மிகவும் பயன் தரக்கூடியது.  
 

 

கரி முகமூடி வழிகாட்டி

கரி முகமூடி வழிகாட்டி

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு ஸ்பூன் கரித்தூள், ஒரு ஸ்பூன் பெண்டோனைட் களிமண், கொஞ்சம் சோடா உப்பு, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக குழைப்பது தான். கொஞ்சம் கெட்டியாக இருப்பது நல்லது. தூய்மையான பிரெஷ் கொண்டு இதை முகத்தில் பூசிக்கொண்டு பத்து நிமிடம் இருக்கவும். அதன் பிறகு முகத்தை கழுவிக்கொண்டு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். நல்ல பலன் கிடைக்க வாரம் ஒரு முறை இதை பின்பற்றவும்.
-