உங்கள் முகத்திற்கு ஏற்றது சோப்பா அல்லது பேஸ் வாஷா?

Written by Sanjana Gupta31st Aug 2018
உங்கள் முகத்திற்கு ஏற்றது சோப்பா அல்லது பேஸ் வாஷா?
உங்கள் சருமத்தை நன்றாக பராமரிக்க, தொடர் கவனம் தேவை. மாசு , சுற்றுச்சூழல் கேடு அல்லது சூரிய ஒளியால் சருமம் எளிதாக பாதிக்கப்படலாம். வானிலை எப்படி இருந்தாலும் வெளியே செல்லும் போது, எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கீரினைப் பயன்படுத்தவும். பேசியல் செய்து கொள்வது செலவு மிக்கதாகவும், நேரம் எடுப்பதாகவும் அமையலாம். அடிக்கடி பேசியல் செய்து கொள்ள தேவை இல்லாத வகையில், உங்கள் சருமத்தை நீங்களே பராமரித்துக்கொள்ள நாங்கள் உதவுகிறோம். முதல் விஷயம், முகத்தில் சோப்பு பயன்படுத்தினால் அதை நிறுத்துங்கள். சரும நலம் பேஸ் வாஷுடன் துவங்குகிறது. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டில் எது சிறந்தது என யோசித்திருக்கிறோம்.
 

முகத்திற்கு சோப்பு சரியா?

பேஸ் வாஷ் பலன் தருமா?

உடலின் மற்ற பகுதிகளில் உள்ள சருமத்துடன் ஒப்பிடும் போது, உங்கள் முகத்தில் உள்ள சருமம் மிகவும் மென்மையானது. சருமத்தின் தடிமன் மாறுபடக்கூடியது. முகத்தில் உள்ள சருமம் மென்மையானது என்பதால் அதற்கேற்ற முறையில் பராமரிக்க வேண்டும். குறிப்பாக கண்களைச்சுற்றியுள்ள சருமம் மிகவும் மென்மையானவை. எனவே, உங்கள் சருமத்தின் மீது மென்மையாக இருக்கும் பொருட்களையே பயன்படுத்த வேண்டும். 
 
முகத்தில் உள்ள சருமத்தில் நிறைய நுண் துளைகள் உள்ளன. இவற்றைச் சரியாக கவனிக்காவிட்டால், பரு, கோடுகள் போன்ற பாதிப்புக்கு சருமம் உள்ளாகும். உங்கள் முகத்தில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய், சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து தற்காக்கிறது. இதற்கு மாறாக,சோப்பு பயன்படுத்தும்போது, அழுக்குடன் சருமத்தின் இயற்கையான எண்ணெயும் வெளியேற்றப்படுகிறது. சோப்பு கட்டி, சருமத்தின் இயல்பான பி எச் அளவு சமநிலையை பாதித்து, அதை உலர வைக்கிறது. உங்கள் சருமம் இயல்பாக அமிலத்தன்மை கொண்டது. அதன் பி எச் அளவு 4 முதல் 5.5 ஆக இருக்க வேண்டும். ஆனால், வழக்கமான சோப்பு கட்டி ஆல்கலைன் தன்மை கொண்டது. எனவே, முகத்தில் பயன்படுத்தக்கூடாது. சோப்பின் ஆல்கலைன் தன்மை, சருமத்தை உலர வைத்து, மென்மையான முக சருமத்தின் ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. சோப்பு பயன்பாடு எரிச்சல் போன்ற பாதிப்பையும் உண்டாக்கி, சருமத்தை மேலும் பாதிக்கும்.

 

பேஸ் வாஷ் பலன் தருமா?

பேஸ் வாஷ் பலன் தருமா?

பேஸ் வாஷ் நல்ல பலன் தரும். நல்ல பேஷ்வாஷ், சருமத்தின் பிஎச் அளவை தக்க வைப்பதோடு, அழுக்கையும் வெளியேற்றுகிறது. மேலும் பேஸ் வாஷ் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெயை முகத்தில் இருந்து அகற்றுவதில்லை. உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல பேஸ் வாஷை தேர்வு செய்யவும்.

உங்கள் சருமம் எண்ணெய் பசை மிக்கது என்றால், எண்ணெய் பசை இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். அது கூடுதலான எண்ணெய் பசையை நீக்கி, சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

உங்கள் சருமம் உலர் சருமம் என்றால், சல்பேட் இல்லாத பேஸ் வாஷை தேர்வு செய்யலாம். இது சருமம் உலர்வதை தடுத்து, ஈரப்பத தன்மையையும் எப்போதும் அளிக்கிறது.மிகவும் நுட்பமான சருமம் எனில். கமேடொஜெனிக் இல்லாத பேஸ் வாஷ் ஏற்றது. இது சருமத்தின் மீது மென்மையாக செயல்படும்.பேஸ் வாஷில் இன்னொரு சிறந்த விஷயம் என்னவெனில்

அவற்றை எங்கும் எளிதாக கையோடு எடுத்துச்செல்லலாம். எனவே, பேஷ் வாஷை தாராளமாக பயன்படுத்த பரிந்துரைக்கிறோம். நீங்கள் தயாரா!
 

Sanjana Gupta

Written by

Explore beauty trends, skincare tips, and haircare secrets with Sanjana Gupta for a naturally beautiful and confident look.

6684 views

Shop This Story

Looking for something else