உண்மையில் முடி உதிர்தலுக்கு மனஅழுத்தம் காரணமா? இதைப் பற்றிய உண்மைகளைச் சொல்கிறார் ஒரு நிபுணர்

Written by Kayal Thanigasalam10th Mar 2021
உண்மையில் முடி உதிர்தலுக்கு மனஅழுத்தம் காரணமா? இதைப் பற்றிய உண்மைகளைச் சொல்கிறார் ஒரு நிபுணர்

இயற்கையாகவே ஒரு நாளைக்கு 100 மயிரிழைகள் உதிர்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில், இயற்கையாக உதிர்ந்த முடிகளின் இடங்களில் ஒவ்வொரு 2-3 மாதங்களுக்குள் புதிய முடிகள் வளர்ந்துவிடும். இருப்பினும், திடீரென்று நிறைய முடி உதிர்வதாக நீங்கள் உணர்ந்தாலோ அல்லது வழுக்கை விழுவதை கவனித்தாலோ, அது மனஅழுத்தத்தின் காரணமாக முடிவதற்கான உதிர்வதற்கான அறிகுறிகளாகும்.

முடி உதிர்தலுக்கு மனஅழுத்தம் ஏன் , எப்படி காரணமாக அமைகின்றது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள, ஆம்புரோசியா ஏஸ்தெடிக்ஸின் Dr.நிகேதா ஸோனாவன் (@drniketaofficial) என்ற சரும நிபுணரிடம் பேசினோம். இந்த தலைப்பைப் பற்றிய சிறந்த நுட்பமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

 

பி.பி: முடி உதிர்தலுக்கு மனஅழுத்தம் காரணமாகுமா?

பி.பி: மனஅழுத்தம் சம்பந்தமாக முடி உதிர்தலில் எத்தனை வகைகள் உள்ளன ?

Dr.நிகேதா: ஆம், முடி உதிர்தலுக்கு மனஅழுத்தம் நிச்சயமான காரணமாகும். உடல், மனம், உணர்வு ரீதியாக ஏற்படும் அனைத்து வகையான மனஅழுத்தங்களும் முடி உதிர்தலுக்கு காரணமாகின்றன. உதாரணமாக, டைஃபாய்டு. மலேரியா, அல்லது ஏதாவது உடல் நல குறைவு போன்றவற்றிலிருந்து சமீபத்தில் மீண்டு வந்த எவரோ ஒருவருக்கு இத்தகைய விஷயங்களால் ஏற்படும் மனஅழுத்தமே முடி உதிர்தலுக்கு காரணமாகின்றன.

பி.பி: மனஅழுத்தம் எவ்வளவு விரைவாக முடி உதிரச் செய்கிறது?

Dr.நிகேதா: மனஅழுத்தம் சம்பந்தமாக ஏற்படும் முடி உதிர்தல், உடனடியாக தொடங்காது. ஒரு மனிதன் ஒரு மனஅழுத்தத்திற்கு ஆட்பட்டு 2-3 மாதங்களுக்கு பிறகே முடிகள் உதிரத் தொடங்கும். இது அனஜென், கேடஜென் மற்றும் டெலோஜென் ஆகிய நமது முடி வளர்ச்சி சுழற்சியே இதன் பின்ன்ணியில் உள்ள காரணமாகும். அனஜென் என்பது வளர்ச்சி கட்டம்; நம்முடைய உச்சந்தலையில் இந்த அனஜென்னின் வளர்ச்சி 90 சதவீதமாக உள்ளது. ஒய்வெடுக்கும் கட்டத்தில், டெலோஜென் கட்டம் 10 சதவீதம் முடி வளர்ச்சியையேக் கொண்டுள்ளது. ஓய்வு காலமான சுமார் 4 மாதங்களுக்குப் பின், முடிகள் உதிர்ந்து மீண்டும் புதிய முடிகள் வளரத் தொடங்கிவிடும். திடீரென்று ஏற்படும் மன அழுத்தம் காரணமாக சுமார் 30-40 சதவிகித முடிகள் டெலோஜென் கட்டத்திற்குள் செல்கிறது, அங்கு அவை சுமார் 2-3 மாதங்கள் ஓய்வில் இருக்கும். இந்த ஓய்வு கட்டத்தின் இறுதியில், மனஅழுத்தத்தின் விளைவாக டெலோஜெனுக்குள் சென்ற முடிகள் உதிரத் தொடங்கும். சுமார் ஆறு மாதங்கள் வரை உதிர்ந்து கொண்டிருக்கும் முடிகள், அதற்குள் பாதியளவு முடிகள் உதிர்ந்திருக்கும். இத்தகைய மனஅழுத்தம் சம்பந்தமாக முடிஉதிரும் செயல்பாட்டை டெலோஜென் எஃப்ளூவியம் என்று அழைக்கப்படுகிறது.

 

பி.பி: என்னுடைய முடி உதிர்தலுக்கு மனஅழுத்தும்தான் காரணம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

பி.பி: மனஅழுத்தம் சம்பந்தமாக முடி உதிர்தலில் எத்தனை வகைகள் உள்ளன ?

Dr.நிகேதா: சாதாரணமாக, மனஅழுத்தத்தினால் தான் முடிஉதிர்கிறது என்பதை கண்டறிய, ஒருவருடைய வரலாற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இதை சில பரிசோதனைகள் செய்து தெரிந்து கொள்ளலாம். இருப்பினும், உங்கள் வாழ்க்கையில் மனஅழுத்தம் ஏற்பட்டு, அதற்குப் பின் 2-3 மாதங்கள் கழித்து முடி உதிரத் தொடங்கினால், அது பெரும்பாலும் மனஅழுத்தமே காரணமாகும்.

பி.பி: சாதாரணமாக, எவ்வளவு முடி உதிரும்?

Dr.நிகேதா: சாதாரணமாக, 50-100 மயிரிழைகள் உதிரலாம், ஆனால், எவ்வளவு முடி உதிர்கிறது என்பதை நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதிர்ந்த வேர்க்கால்களிலிருந்து மீண்டும் புதிய முடிகள் வளரவில்லையெனில், அந்த நபர் முடி மெல்லியதாகுதல், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அனுபவிக்க நேரிடும்.

 

பி.பி: மனஅழுத்தம் சம்பந்தமாக முடி உதிர்தலில் எத்தனை வகைகள் உள்ளன ?

பி.பி: மனஅழுத்தம் சம்பந்தமாக முடி உதிர்தலில் எத்தனை வகைகள் உள்ளன ?

Dr.நிகேதா: நாம் கலந்துரையாடிய டெலோஜென் எஃப்ளூவியம் பொதுவாக காணப்படும் வகையாகும். இரண்டாவது வகை ஆலோபேசியா அரேட்டா என்பதாகும். இந்த வகையில், நாணய அளவு வடிவில் அந்த நபருக்கு முடிகள் உதிரும். அந்தப் பகுதி முழுக்க வழுக்கையாகிவிடும். ட்ரைக்கோட்டிலோமேனியா என்பது மூன்றாவது வகையாகும். இது முற்றிலும் உளவியல் மன அழுத்தம் காரணமாக ஏற்படும். ஒரு நபர் மிகவும் மனஅழுத்தத்துடன் இருக்கும்போது, அவர்கள் தங்கள் விரல்களுக்கு இடையில் தலைமுடியை சுழற்றி, அதை வெடுக்கென்று பிடுங்கி விடுவார்கள். பெரும்பாலும், அவர்கள் தலைமுடியை இழுக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவே மாட்டார்கள்.

பி.பி: மனஅழுத்தம் சம்பந்தமாக முடி உதிர்தலுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது?

Dr.நிகேதா: ஏற்கனவே டெலோஜென் சுழற்சியில் உதிர்ந்த தலைமுடியை திரும்பப் பெற முடியாது, மனஅழுத்தத்தை மிக மென்மையாக கையாள்வது, புரொட்டீன்ஸ் மற்றும் மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சி ஆகிய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும்போது, மேலும் முடி உதிராமல் தடுக்க முடியும். சம்பி போன்ற தலை மஸாஜ்களை தவிர்க்கவும்; தலைமுடி வேர்களில் எண்ணெய் தடவுவதற்கு பதிலாக காட்டன் பந்துகளை பயன்படுத்தலாம். மேலும் தலைமுடி சேதமடையாமலும், உடையாமலும் இருக்க, சிறிது காலத்திற்கு கெமிக்கல் தலைமுடி சிகிச்சையை செய்து கொள்ள வேண்டாம்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
1044 views

Shop This Story

Looking for something else