தலைமுடி உதிர்தலையும், தலைமுடி உடைதலையும் எப்படி தடுக்கலாம் என்பதுப் பற்றி ஒரு நிபுணரின் வழிகாட்டி

Written by Kayal ThanigasalamNov 30, 2023
தலைமுடி உதிர்தலையும், தலைமுடி உடைதலையும் எப்படி தடுக்கலாம் என்பதுப் பற்றி ஒரு நிபுணரின் வழிகாட்டி

உங்களுக்கு முடி உதிர்தல், முடி மெலிதாகுதல், மற்றும் முடி உடைதல் போன்றவைகளினால் பாதிக்கப்பட்டவரெனில், அதனால் ஏற்படும் மனஅழுத்தம் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. மனஅழுத்தத்திற்காக நீங்கள் உபயோகப்படுத்தும் முடிப் பாதுகாப்பு பொருட்கள், மோசமான வாழ்க்கை முறை, மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவைகளினால்தான் அனைத்துப் பிரச்னைகளுமே ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 50-100 மயிரிழைகள் உதிர்வது என்பது முற்றிலும் இயல்பானதுதான் என்றாலும், அதற்குமேல் முடி உதிரும் போது தான் உண்மையான பிரச்னைகளே ஆரம்பிக்கின்றது அல்லது எந்தளவிற்கு முடி உதிர்கிறதோ அதே அளவிற்கு மீண்டும் வளராமல் போகும்.

உங்களுடைய மூளை எதிர்மறையான சூழ்நிலைகளைப் பற்றி சிந்திக்கத் துவங்குவதற்கு முன் நாங்கள் சொல்வதை கேளுங்கள். முடி உதிர்வதை தடுப்பதற்காக எங்களுடைய தொடர்பிலிருக்கும் சரும மருத்துவர் Dr.ரஷ்மி ரெட்டியின் அறிவுரையை கேட்டுத் தெரிந்து கொண்டோம். தலைமுடி உதிர்தல், மெலிதாகுதல், முடி உடைதல் ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் பற்றி Dr. ரஷ்மி ரெட்டியின் மேலானக் கருத்துக்களைப் பற்றி படிக்கவும். அத்துடன் பொதுவான பலவித பிரச்னைகள் மற்றும் சாத்தியமான சிகிச்சைகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது துவங்கலாம்...

 

தலைமுடி உதிர்தல், மெலிதாகுதல், முடி உடைதல் ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகள்

முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவைகள்

முதலில் தலைமுடி உதிர்தல், மெலிதாகுதல், முடி உடைதல் ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகளை கண்டறிந்தால்தான், இப்படிப்பட்ட சரும பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும். பிரச்னைகளை நீங்கள் கண்டறிந்து கொண்டு விட்டால், பிறகு அதை மிகவும் சுலபமாக எதிர்கொள்ள முடியும். “உங்கள் தலைமுடியின் அடிவேரிலிருந்து தலைமுடி உதிர்வதே முடி உதிர்தல் என்பதாகும்.

தினமும் ஒரு சில தலைமுடி உதிர்ந்தால் அதற்குப் பெயர் முடி உதிர்தலாகும். அதுவே உங்களுக்கு நிறைய தலைமுடி உதிர்ந்தால், அதற்குப் பெயர் முடிக் கொட்டுதல் என்று பெயர்,” என்று அவர் விளக்குகின்றார். “மறுபுறத்தில், தலைமுடி உடைதல் என்றால் உங்கள் முடி எங்கிருந்து வேண்டுமானாலும் உடையலாம். மேலும் அது வேரை விட அதன் அமைப்புடனே மிகவும் தொடர்புடை.தாக இருக்கும். ஹைட்ரேஷன் குறைபாடு மற்றும் புறத்தோலின்

ஆரோக்கியமின்மை போன்றவை முடி உடைதலுக்கான முக்கிய காரணம். உங்களுடைய ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளும் முறை, கொழுப்புச்சத்து அமிலங்களின் குறைபாடு மற்றும் புரோட்டீன்கள் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அல்லது சுருட்டை முடி உள்ளவர்களுக்கு இந்த முடி உடைதல் பிரச்னை ஏற்படுகின்றது,”என்று கூறுகிறார் Dr.ஷெட்டி. முடி உடைதலை எதிர்கொள்ளவது மிகவும் சுலபமானது. கொழுப்புச்சத்து அமிலங்கள், ஹேர் ஆயில், மற்றும் ஹைட்ரேட்டிங் சிகிச்சைகள் முதலியவற்றை ஈரப்பதத்தை தரக்கூடிய உங்களின் வழக்கமான சருமப் பராமரிப்பில் சேர்த்துக் கொள்வதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்.

 

தலைமுடி உதிர்தலுக்கான காரணம்

முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவைகள்

தலைமுடி உதிர்தலுக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஹார்மோனல், ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் போன்றவைகள் பொதுவான காரணங்களாகும். “ஹார்மோன்களால் ஏற்படும் முடி உதிர்தலுக்கு, தைராய்டு ஹார்மோன், ஆண் ஹார்மோன், புரோலாக்டின் மற்றும் எஸ்ட்ராஜென் போன்றவற்றுடன் தொடர்புடையவையாக இருக்கலாம். இரும்புச்சத்து, காலசியம், மற்றும் வைட்டமின் D ஆகியவற்றின் குறைபாடுகளால், ஊட்டச்சத்து சம்பந்தமான முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம். உங்கள் தலைமுடியை இறுக்கமாகக் கட்டிக் கொள்ளுதல், பலவிதமான இரசாயன சிகிச்சைகளுக்கு உட்படுத்திக் கொள்ளுதல், ஒரு அழுக்கு தலைமுடி மற்றும் உச்சந்தலை வரையுள்ள மயிரிழைகளை திடீரென்று பிடித்து இழுத்தல் போன்றவற்றினால் உங்கள் வாழ்க்கை முறை சம்பந்தமான முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம்,” என்று Dr.ஷெட்டி விளக்குகிறார். கூடுதலாக, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் சரியான தூக்கமின்மை போன்றவை கூட முடி உதிர்தலுக்கு முக்கியமான காரணிகளாக அமையும். இதைத் தவிர, குறிப்பாக பெண்களுக்கு, கர்ப்பம்,

மாதவிடாய் மற்றும் முதுமை போன்றவையினாலும்கூட முடி உதிரலாம்.

 

தலைமுடி உதிர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும்.

முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவைகள்

சமநிலையான உணவுகள், தேவையான அளவு புரதம்,கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் நிறைந்தவைகளை உட்கொள்வதே முடி உதிர்வை தடுப்பதற்கு உண்மையில் மிகவும் முக்கியமானதாகும். “கூடுதலாக, சர்க்காடியன் ரிதம் என்ற உறக்கம்-விழிப்பு சுழற்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் ஒரு சரியான வாழ்க்கைமுறையை தொடர்ந்து செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஹார்மோன்கள் சமநிலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதில் இது மிகவும் முக்கியமானப் பங்கு வகிக்கின்றது. ஆனால், உங்களது ஜெட்-ஸெட்டிங் வாழ்க்கை முறையானால், நீங்கள் முழு அளவு சாப்பாட்டை உட்கொள்ளக் கூடாது. உங்களுடைய மருத்துவரை அணுகி இதற்கான சில ஊக்கமருந்துகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். உண்மையில் இது நீண்ட நாட்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்று Dr.ரஷ்மி விளக்குகிறார். ஆரோக்கியமான உணவுகளை உண்பது மட்டும் மிகவும் உதவியாக இருக்கும் என்று கூற முடியாது. உங்கள் தலைமுடியை நல்ல முறையில் பராமரித்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு எந்தளவுக்கு பிஸியான ஷெட்யூல் இருந்தாலும், வழக்கமான தலைமுடி பராமரிப்பு பின்பற்றுதல் மற்றும் உச்சந்தலையை மிகவும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது உங்களுடைய தலைமுடி உதிர்வை பெருமளவு குறைக்கும். “உங்களுடைய தலைமுடிக்கேற்றபடி அனைத்து விதமான பாதுகாப்பும் தரக்கூடிய சரியான ஹேர் கேர் தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். முடி உதிர்வுடன் கூடிய முகப்பரு, முடி உதிர்வுடன் கூடிய நிறமாற்றம் அல்லது குடல் பிரச்னையுடன் கூடிய முடி உதிர்வு போன்ற பிரச்னைகளை நீங்கள் கவனித்தவுடன், அவற்றை குணப்படுத்த முடியாத மிகவும் மோசமான நிலைக்கு செல்வதற்கு முன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடைய மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லதாகும்,” என்று அறிவுறுத்துகிறார்.

 

தலைமுடி உதிர்வுக்கான சிகிச்சைகள்

முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவைகள்

 

“மேலேக் குறிப்பிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளை செய்த பிறகும் கூட, முடி உதிர்வை பிரச்னையை தடுப்பதில் எந்தவிதமான முன்னேற்றமும் உங்களுக்கு தெரியவில்லையெனில், இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான சிகிச்சைகளைக் குறித்து உங்களுடைய மருத்துவரிடம் கலந்துபேச வேண்டிய தருணம் இது.  உங்களுடைய முடி உதிர்வின் நிலையைப் பொருத்து சிறந்த க்ரீம்கள், களிம்புகள், மற்றும் எடிபிள் மருந்துகள் முதலியவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.  மூன்றிலிருந்து ஒரு வருடம் வரை இந்த மருத்துவ சிகிச்சை செய்து வேண்டி வரலாம்,” என்று Dr.ரஷ்மி கூறுகிறார்.
முடி இழப்பு மற்றும் முடி உதிர்வுக்கும் சில பொதுவான ஊசி சிகிச்சை முறைகள் –

பிளேட்லெட்-ரிச் ப்ளாஸ்மா (PRP) –  சிவப்பணுவினுடைய வளர்ச்சிக்கான அம்சங்களை செயல்படுத்த நோயாளியின் சொந்த இரத்தத்தை மைய விலக்கு செய்து பிரித்து, உச்சந்தலையில் ஊசி மூலமாக செலுத்துவது.

மெஸோதெரபி -  இந்த சிகிச்சையில், ஒரு சில மருந்துகளின் கலவை, வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் வளர்ச்சி அம்சங்களை மெஸோடெர்ம் என்றழைக்கப்படும் சருமத்தின் ஒரு அடுக்குக்குக் கீழே ஊசி மூலம் செலுத்துவதாகும்.

ப்ரோஜெனிடர் செல் தெரபி – இந்த சிகிச்சை முறையில், சருமத் திசுக்கள் மற்றும் கொழுப்புத் திசுக்களிலிருந்து வளர்ச்சிக்கான அம்சங்களை பிரித்தெடுத்து, அவற்றை ஊசி மூலம் உச்சந்தலையில் செலுத்துவதாகும்.

இதைத் தவிர, உங்களுடைய முடி வளர்ச்சியை அதிகரிக்க லேசர் ஹேர் தெரபிகள் செய்து கொள்ளலாம்.
கூடுதலாக, ஹேர் ஆக்ஸிஜன் சிகிச்சை ஒரு மென்மையான மற்றும் பிரபலமான ஒன்றாகும்.  முடி வளர்ச்சிக்கு நன்மைத் தரக்கூடிய ஜெட் பொருட்களில் சுத்தமான உயரழுத்த ஆக்ஸிஜனை பயன்படுத்தி, உங்கள் உச்சந்தலைக்குள் செலுத்துவதாகும்.

 

 

முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவைகள்

முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுப்பதற்கு தவிர்க்க வேண்டியவைகள்

 

வீட்டிலேயே டெர்மோ ரோலர் தெரபிகளை செய்து கொள்வது
எண்ணெய் தடவிக் கொள்ளும்போது வீர்யமிக்க தலை மற்றும் தலைமுடி மஸாஜ் செய்து கொள்வது
அதிகமான் ஷாம்புக்களை பயன்படுத்துவதாலும் வறண்ட முடி மற்றும் முடி உடைதலுக்கும் வழிவகுக்கும்.
ஒரு முரட்டு டவலினால், உங்கள் மயிரிழைகளை பலம் கொண்டு துடைத்தல்

முடி உதிர்வுக்கான ஊக்கமருந்துகள்

முன்பே கூறியது போல, குறிப்பாக நீங்கள் உண்ணும் உணவிலிருந்து தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கவில்லையெனில், ஊக்கமருந்துகள் மூலம் உங்களுடைய முடி உதிர்தல், முடி இழப்பு மற்றும் முடி உடைதல் தடுப்பது நீண்ட காலமாகும்.  “ஊக்கமருந்துகள் என்று வரும்போது, உங்கள்  மல்டிவைட்டமின்கள், ஆண்டிஆக்ஸிடெண்ட்ஸ் தொகுப்பு முதல் ஆண்டி-இன்ஃப்ளமேட்டரி மற்றும் இரும்பு வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில் உங்கள் தலைமுடிக்கு இந்த ஊட்டச்சத்துகள் குறைபாடு உள்ளது,” என்று கூறுகிறார் Dr.ஷெட்டி

 

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
1274 views

Shop This Story

Looking for something else