பெரும்பாலான நகர்புற மக்களை வாட்டும் கூந்தல் பிரச்சனை எதுவென கேட்டால், முன்கூட்டியே நரை முடி தோன்றுவது எனக்கூறலாம். நரை முடியின் தோற்றம் பெரும்பாலான பெண்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும் விஷயம் என்பதால் இது வரவேற்க தக்கது அல்ல. ஒரு சிலர் நரைமுடியுன் தோற்றத்தை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் இதை மிகவும் கடினமாக உணர்கின்றனர்.
நரைமுடி தோற்றத்தை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நீங்கள் இன்னமும் பெறவில்லை எனில் கவலை வேண்டாம். உதவி அருகாமையிலேயே இருக்கிறது. உங்கள் சமயலறையில் பாருங்கள் போதுமானது. ஏனெனில், உங்கள் நரைத்த முடி பிரச்சனைக்கு தீர்வாக கூடிய இயற்கை சிகிச்சை அம்சங்களை கொண்ட பொருட்கள் அங்கேயே உள்ளன.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சைக்கு அற்புதமான கூந்தல் நலன் பண்புகளை கொண்டிருக்கின்றன என்பதில் எந்த வியப்பும் இல்லை. உச்சந்தலையை மாய்ஸ்சரைஸ் செய்வதோடு, வயோதிகத்திற்கு எதிரான தன்மையையும் இவை கொண்டுள்ளன. எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெய் உங்கள் கூந்தலை கருப்பாக மாற்றாது என்றாலும், உங்கள் மயிர்கால்களில் பிக்மெண்ட்களை காப்பதன் மூலம் முன்கூட்டியே நரை ஏற்படுவதை இவை தாமதமாக்குகின்றன.
இது எங்கள் குறிப்பு: தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தடவிக்கொள்ளவும். 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்த மிதமான ஷாம்பு கொண்டு அலசவும்.
பிளாக் காபி

தலைமுடியை கருப்பாக்குவதற்கான நிரந்தர தேர்வு இல்லை என்றாலும் கூட, காபியில் உள்ள வலுவான பிக்மெண்ட்கள், நரை முடிகளை மறைப்பதில் உதவுகிறது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இது உங்கள் கூந்தலை பழுப்பு வண்ணமாக்கி, நரைஒ முடி எல்லாவறையும் மறைத்து விடும்.
இது எங்கள் குறிப்பு: நன்கு அடர்த்தியான காபியை தயார் செய்து, ஆறிய பின், அதை உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஊற்றிக்கொள்ளவும்.20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிக்கொள்ளவும்.
பீர்க்கன்காய் தரும் பலன்

பீர்க்கன்காய் எனும் எளிய காய்கறி, நரை முடி பிரச்சனையை எதிர்கொள்ள திறம்பட வழிகாட்டும் காய்கறியாகும். இது உச்சந்தலையில் பிக்மெண்டை தக்கவைத்து, நரை முடி தோன்றுவதை இயற்கையாக மாற்றுகிறது.
இது எங்கள் குறிப்பு: ஒரு பீர்க்கன் காயை வேக வைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கொஞ்சம் சேர்த்து கூந்தல் முழுவதும் தடவிக்கொள்ளவும்.
வெங்காய சாறு

வெங்காய சாறு நிகரில்லாத கூந்தல் நற் பயன்களை கொண்டிருக்கிறது. தலைமுடியை வேரில் இருந்து கருப்பாக்க உதவும் கேட்டலைஸ் எனும் என்சைமை கொண்டுள்ளது. மேலும், இது பயோடிம், தாமிரம், மாங்கனிசு, வைட்டமின் சி, பாஸ்பரஸ், சல்பர், வைட்டமின் பி1 மற்றும் பி6 ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை தலைமுடி கருப்பாக உதவுகின்றன.
இது எங்கள் குறிப்பு: வெங்காயத்தில் இருந்து சாறு எடுத்து அதை, கூந்தலில் குறிப்பாக வேர்ப்பகுதியில் தடவிக்கொள்ளவும். இதை அப்படியே 40 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நன்றாக அலசிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கு

உங்கள் நரை முடி பிரச்சனைக்கு மிகவும் எளிதான வீட்டு வைத்தியமாக உருளைக்கிழங்கு அமைகிறது. இந்த கிழங்கு, பிக்மெண்ட்டை சேர்த்து நரை முடி மறைய உதவுகிறது. நரை முடியை மறைக்க இது எளிய வழியாகும்.
இது எங்கள் குறிப்பு: உருளைக்கிழங்கை நன்றாக வேக வைக்கவும். இதை சாறாக்கி, கூந்தல் மற்றும் உச்சந்தலையில் பூசிக்கொள்ளவும். பின்னர் தண்ணீரில் அலசிக்கொள்ளவும்.
Written by Team BB on 11th May 2019