நல்ல கூந்தலுக்கு விரோதியாக விளங்கும் அம்சங்கள் பல இருக்கின்றன. வியர்வை முதல், ஈரப்பதம், வெப்ப சாதனங்கள் என பலவும் தலைமுடியில் தாக்கம் செலுத்தி அதன் மென்மையை பாதித்து சொரசொரப்பாக்கலாம். இதை சீராக்க உங்களிடம் பிரத்யேக வழிகள் இருக்கலம் என்றாலும், கூந்தலை பட்டு போல மென்மையாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய வழிமுறைகள் உள்ளன.
 

மயோனைஸ்!

மயோனைஸ்!

ஆம், சரி தான் மயோனைஸ் உங்களுக்கு கூந்தலுக்கான அருமையான பொருளாகும். தலைமுடிக்கு மிகவும் தேவையான பளபளப்பு மற்றும், உறுதியையும் அது தருகிறது. இந்த பூச்சை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!
 
என்ன தேவை
4 ஸ்பூன் மயோனைஸ்
2 ஸ்பூன் பாதாம் எண்ணெய்
1 முட்டை (உங்கள் மயோனைஸில் முட்டை இல்லை எனில்)

வழிமுறை:

  • எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து குழைவாக்கி கொள்ளவும்.
  • தலைமுடியில் இதைத் தாராளமாக தடவவும்.
  • கூந்தலில் டவலால் சுற்றி, 15-25 நிமிடம் வைத்திருக்கவும்.
  • ஷாம்பு போட்டு அலசவும்.
 

எலுமிச்சை, தேன்

எலுமிச்சை, தேன்

தேன் தலைமுடியில் ஈரப்பதத்தை சீராக்கி, தக்க வைத்துக்கொள்வதோடு, மயிர்கால்களை வலுவாக்கி, தலைமுடி ஆரோக்கியமாக வளர வழி செய்கிறது. எலுமிச்சை கூந்தலுக்கான மிகச்சிறந்த கிருமிநாசினி. உச்சந்தலையைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இதை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பூசிக்கொண்டால் கூந்தலுக்கு நல்ல பலன் தரும். 

என்ன தேவை
1 ஸ்பூன் தேன்
1 ஸ்பூன் எலுமிச்சை
4 ஸ்பூன் ஆலிவ் ஆயில்

வழிமுறை:

  • எல்லா பொருட்களையும் சேர்த்து கலவையாக்கி கொள்ளவும்.
  • இதை கூந்தலின் மீது தடவி 30 நிமிடம் அப்படியே இருக்கவும்.  .
  • இதமான நீரில் ஷாம்பு கொண்டு அலசவும்.
 

யோகர்ட் மற்றும் கருஞ்சீரகம்

யோகர்ட் மற்றும் கருஞ்சீரகம்

உங்கள் தலைமுடி மென்மையாக இல்லாமல் சொரசொரப்புடன் இருந்தால் யோகர்ட் தான் சிறந்த நண்பன். இது தலைமுடிக்கு ஈரப்பதத்தை கொண்டு வந்து ஊட்டச்சத்து அளிக்கிறது. யோகர்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் கூந்தலை சீராக்குகிறது. கருஞ்சீரகம் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.  இதை வாரம் ஒரு முறை பூசி வந்தால் நல்ல பலன் காணலாம்.  


என்ன தேவை
1 கோப்பை யோகர்ட்
2 ஸ்பூன் கருஞ்சீரகம்


வழிமுறை:

  • கருஞ்சீரக விதையை பொடியாக்கி யோகர்ட் சேர்த்துக்கொள்ளவும்.  
  • இதை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் நன்றாக தடவவும். 30 நிமிடம் அப்படியே இருக்கட்டும். இதனால் நல்ல பலன் உண்டாகும்.  
  • ஷாம்புவால் அலசி அதன் பிறகு நல்ல கண்டிஷனர் பயன்படுத்தவும்.