அனைத்து பெண்களுமே நீளமான, அடர்த்தியான தலைமுடியை தான் விரும்புகின்றனர். எனினும் வெயில், எண்ணெய் பற்றாக்குறை மற்றும் இதர காரணிகள் அதில் குறுக்கிட்டு உங்கள் முடியை சேதப்படுத்தி விடுகிறது, இதனால் முடி நீளமாக வளர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது. உங்கள் முடி வேகமாக வளரச் செய்வதற்கான முறைகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால், இந்த உத்திகளில் சிலவற்றை முயற்சித்துப் பாருங்களேன் ......
 

உங்கள் முடியை பிரஷ் கொண்டு நன்றாக வாரவும்

உங்கள் முடியை பிரஷ் கொண்டு நன்றாக வாரவும்

பிரஷ் கொண்டு வாருவது எளிதானதாக தோன்றலாம், ஆனால் அதனை சரியாக செய்வதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது.

பிரஷ் கொண்டு வாருவது போன்ற ஒரு எளிய செயல் உங்கள் கேசத்துக்கு உதவுகிறது. தலையின் மேல்தோல் பகுதியில் இருந்து உங்கள் முடியை இதமாக வார, ஒரு போர் பிரஷ் பயன்படுத்தவும். இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இறந்த செல்களை அகற்றுகிறது மற்றும் முடியின் வேர்க்கால்களுக்கு பிராணவாயு சென்றடைவதையும் அனுமதிக்கிறது. இதன் விளைவு? நீளமான முடி கிடைக்கிறது.

 

முடியை சரியாக அலசவும்

முடியை சரியாக அலசவும்

நீங்கள் குளிப்பதில் கடைசி கட்டம் தான் உண்மையிலேயே மிகவும் முக்கியமானது. நீங்கள் தலைக்கு குளித்து முடித்தப்பிறகு, மீண்டும் ஒரு தடவை ஷவரை திருகி, குளிர்ந்த தண்ணீர் உங்கள் முடியில் விழச் செய்யுங்கள். இது உங்கள் முடிக்குள் ஈரப்பதத்தை பாதுகாப்பதால், முடி உலர்ந்து போய் சேதமடைவதில்லை.

 

சரியான பொருட்களை பயன்படுத்தவும்

சரியான பொருட்களை பயன்படுத்தவும்

உங்கள் கேசத்தை எப்படி வேகமாக வளரச் செய்வது என நீங்கள் எப்போதும் சிந்திப்பவராக இருந்தால், அதற்கான விடை சரியான பொருட்களை தேர்வு செய்வதில் அடங்கியுள்ளது.

நீண்ட தலைமுடிக்கு சரியான பொருளை தேர்வு செய்யவும். நாங்கள் ஸன்ஸில்க் லாங் அண்ட் ஹெல்த்தி குரோத் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் விரும்புகிறோம், இதில் முடி பிளவுபட்டு முறிவதை குறைக்க உதவும் பயோடின் அடங்கியுள்ளது.

 

சரியான முறையில் சாப்பிடுங்கள்

சரியான முறையில் சாப்பிடுங்கள்

விட்டமின்கள் உடலுக்கு மிகவும் முக்கியமானவை, ஆனால் அவை உங்கள் கேசத்துக்கும் மிக நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? பயோட்டின் போன்ற விட்டமின்கள் மற்றும் விட்டமின் பி ஆகியவை ஆன்டி&ஆக்ஸிடன்ட் நிறைந்தவை, இவை புதிய முடியின் ஆரோக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே இப்போது தொடங்கி, உங்கள் உணவுமுறையில் முட்டைகள், கொட்டைகள், பால் மற்றும் ஷெல்பிஷ் போன்றவற்றை சேர்த்து விட்டமின்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

 

ஒரு மசாஜ் செய்யவும்

ஒரு மசாஜ் செய்யவும்

ஒரு நீண்ட நாள் வேலை பளுவுக்கு பிறகு தலைக்கு மசாஜ் செய்துக் கொள்வது மிக நன்றாக உணரச் செய்யும். தலையின் மேல் தோலில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க விளக்கெண்ணெய் உடன் உங்கள் முடிக்கு மசாஜ் செய்யவும்.