குட்டை தலைமுடி மிகவும் நாகரீகமானதாக இருக்கலாம், ஆனாலும் ஒவ்வொரு பெண்ணுமே நீளமான, ஆரோக்கியமான முடி இருப்பதையே எப்போதும் கனவு காண்கின்றனர். நீளமான முடியை எப்படி அடைவது என்று நீங்கள் யோசித்தால், இதோ சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன ....
 

உங்கள் தலையின் மேல்தோலில் பிரஷ் கொண்டு அழுத்தவும்

உங்கள் தலையின் மேல்தோலில் பிரஷ் கொண்டு அழுத்தவும்

நீளமான, மயங்கச் செய்யும் தலைமுடியை அடைவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, தலையின் மேல்தோலை அழுந்த தேய்ப்பதாகும். இந்த தெரபியில், உங்கள் தலையின் மேல்தோலை மசாஜ் செய்வதற்கு நீங்கள் ஒரு பேட்டில் பிரஷ் பயன்படுத்துகிறீர்கள். இந்த செயலாக்கம் ரத்த ஓட்டத்தை தூண்டி விடுவதால், அதன் மூலம் உங்கள் தலையின் மேல்தோலில் இருக்கும் ஊட்டங்கள் அனைத்தும் சீராக விநியோகிக்கப்பட்டு முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

 

சரியான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது

சரியான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துவது

உங்கள் தலைமுடி நீளமாக வளரவும், வலுவாக இருக்கவும் ஏதுவாக அதனை சரியான பொருள் கொண்டு நீங்கள் கேசத்தை அலசுவது முக்கியமாகும். நாங்கள் சிறிது காலமாகவே ஸன்ஸில்க் லாங் அண்ட் ஹெல்த்தி க்ரோத் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி வருகிறோம் மற்றும் இதன் முடிவுகள் பிரமிப்பூட்டுகிறது. இந்த வகை பயோடின் நிறைந்தவையாக இருப்பதால், அது முடி பிளவுபடுவதை குறைத்து முடிகள் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்வதை உறுதி செய்கின்றன.

 

குளிர்ந்த நீரால் அலசுவது

குளிர்ந்த நீரால் அலசுவது

நீங்கள் குளித்து முடித்து வெளியேறுவதற்கு முன்பு, உங்கள் தலைமுடியை குளிர்ந்த தண்ணீரால் அலச வேண்டும். ஏன் தெரியுமா? ஈரப்பதம் இழப்பையும் மற்றும் உஷ்ணத்தால் உங்கள் முடிக்கு உண்டாகும் சேதத்தையும் குளிர்ந்த தண்ணீர் தடுத்து விடுகிறது. இதனை செய்ய வெறும் ஒரு சில விநாடிகளே எடுக்கும், ஆனாலும் குளித்து முடிப்பதற்கு சற்று முன்பு இதனை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.