எண்ணெய் பசை மிக்க உச்சந்தலை, கோடைக்காலத்தில் உங்கள் கூந்தலின் மிகப்பெரிய எதிரியாகலாம். எண்ணெய் பசை மற்றும் வியர்வை ஒன்றாக சேரும் போது, உங்கள் கூந்தல் மீது பாதிப்பை உண்டாக்கி, அதை கடினமாக, மங்கலாக ஆக்கலாம். உச்சந்தலையில் கூடுதல் செபம் சுரப்பது, உங்கள் கூந்தலை எண்ணெய் பிசுபிசுப்பாக்கிவிடும். குறிப்பாக கோடைக்காலத்தில் இவ்வாறு நிகழும். ஆரோக்கியமான உச்சந்தலைக்கு,. ஓரளவு பெபம் சுரப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான் என்றாலும், அதிகமாக சுரக்கும் போது அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனை உண்டாகும்.

பிசுபிசுப்பான தலைமுடி ( எண்ணெய்பசை உச்சந்தலையின் விளைவு) எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக நீங்கள் சுத்தமான, அழுக்கில்லாத கூந்தலை விரும்பும் போது இந்த தன்மை இன்னும் எரிச்சல் தரும். இந்த பிரச்சனையை சமாளிக்க சில வழிகள் இதோ...  

ஸ்டிரைட்னர் வேண்டாம்
 

ஸ்டிரைட்னர் வேண்டாம்

ஸ்டிரைட்னர்கள் உங்கள் கூந்தலுக்கு வரப்பிரசாதமாக அமையலாம் என்றாலும் கூட, உங்கள் உச்சந்தலை பிசுபிசுக்கு அதுவும் காரணமாகலாம். உங்கள் தலை முடி எந்த அளவுக்கு நேரானாதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் உச்சந்தலை எண்ணெய்பசை கலந்திருக்கும். கூந்தல் மேல் பகுதியில் உள்ள சுருள் தன்மை தலைமுடியை தூக்கி விடுவதால், எண்ணெய் பசை கலப்பதை குறைக்கிறது. எனவே கொஞ்சம் ஸ்டிரைட்னர்களை தள்ளி வைத்துவிட்டு வழக்கமான வழியை நாடவும்.

சரியான ஷாம்பு, கண்டிஷனர் தேர்வு
 

சரியான ஷாம்பு, கண்டிஷனர் தேர்வு

ஆண்டு முழுவதும் உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க உச்சந்தலை பிரச்சனை இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை மாற்றுவது அவசியம். மாய்ஸ்சரைசிங் ஷாம்புவிற்கு பதிலாக ஹேர் கிளின்சரை நாடவும். டோவ் நர்சிஹிங் ஆயில் கேர் ஷாம்பு  பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது உங்கள் கூந்தலில் இயற்கையான எண்ணெய் பசையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. உங்கள் கூந்தலின் அடிப்பகுதியை, டிஆர்.இ செமே பாட்டனிக் நரீஷ் & ரெப்ளினிஷ் கண்டிஷனர்  போன்ற நீர்த்தன்மை அளிக்கும் கன்டிஷனர் கொண்டு மாய்ஸ்சரைஸ் செய்யவும். இது உச்சந்தலையை எண்ணெய் பசை இல்லாமல் வைத்திருக்க உதவும்.

கூந்தலை நன்றாக அலசவும்
 

கூந்தலை நன்றாக அலசவும்

உங்கள் கூந்தலின் குறிப்பிட்ட பகுதி பிசுபிசுப்பாக இருந்தால் நீங்கள் ஷாம்பு மற்றும் கண்டிஷனரை சரியாக அலசுவதில்லை என்று பொருள். இந்த நிலையை தவிர்க்க, உங்கள் கூந்தலை பகுதி பகுதியாக பிரித்து அனைத்து பகுதிகளிலும், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் நீக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கூந்தலை அலசவும்.   

கூந்தலை நன்றாக உலர வைக்கவும்
 

கூந்தலை நன்றாக உலர வைக்கவும்

நீங்கள் எப்போது அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தாலும், உங்கள் கூந்தலை புளோ டிரை செய்து நன்றாக உலர வைக்கவும். இது உச்சந்தலையில் சேரும் எண்ணெய் பசையை அகற்ற உதவும். இதனால் இப்போது தான் குளித்து விட்டு வந்தது போன்ற கூந்தல் தோற்றத்தை அளிக்கும் .