- பன்றி முடி பிரெஷ்
- கிளாசிக் பிரெஷ்
- பேடில் பிரெஷ்
- அகல பல் கொண்ட சீப்பு
- வட்ட வடிவிலான பன்றி முடி பிரெஷ்
பன்றி முடி பிரெஷ்

எல்லா வகையான கூந்தலுக்கும் பொருத்தமான பிரெஷ் இது. இதன் இயல்பாக நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள், உச்சந்தலை இயற்கை எண்ணெயை தலைமுடியின் தண்டுப்பகுதியில் பரவச்செய்கிறது. சிடுக்கான தலைமுடிக்கு இது மிகவும் ஏற்றது. இதில் சில பிரெஷ்கள் நைலான் பற்களும் கொண்டிருப்பதால் சிடுக்குகளை நீக்க உதவுகிறது.
கிளாசிக் பிரெஷ்

கிளாசிக் பிரெஷ், ரப்பர் அடிபாகம் மற்றும் நைலான் முடிகளோடு, சிறிய, நடுத்தர மற்றும் பெரிய என பலவித அளவில் கிடைக்கிறது. சிடுக்குகளை நீக்குவது, உலர வைப்பது மற்றும் ஸ்டைலிங்கிற்கு உதவுவது இதன் சிறப்பம்சமாகும். நைலான் முடி, மென்மையாக்க உதவுவதால், சுருளான மற்றும் அலை போன்ற கூந்தலுக்கு ஏற்றது.
பேடில் பிரெஷ்

நீளமான முடி கொண்ட கூந்தல் இருந்தால், பேடில் பிரெஷ் சிறந்த தேர்வாக இருக்கும். இது முடியில் சிடுக்குகளை நீக்குகிறது. தலைமுடியை உலர வைக்கும் போதும் கைகொடுக்கிறது.
அகல பல் கொண்ட சீப்பு

ஈர முடியை சீராக்க இது ஏற்றது. அடர்த்தியான, சுருளான முடிக்கும் ஏற்றது. ஏனெனில், கூந்தல் அமைப்பை பாதிக்காமல் சிடுக்குகளை நீக்குகிறது. பற்களுக்கு இடையே நல்ல இடவெளி இருப்பதால் பாதிப்பை கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அடிக்கடி முடி உதிரும் பலவீனமான கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது.
வட்ட வடிவிலான பன்றி முடி பிரெஷ்

அடர்த்தியான கூந்தல் தோற்றத்தை உருவாக்க இந்த வகை ஹேர்பிரெஷ் ஏற்றவை. கூந்தலை உலர வைக்க ஏற்றது. இது மென்மையான சுருள் மற்றும் அலை தோற்றத்தை அளிக்கிறது. உலர வைப்பதில் அதிக அனுபவம் இல்லை எனில், பிரெஷ்சில் அதிக தலைமுடி திரளாமல் பார்த்துக்கொள்ளவும். அளவில் சிறியதாக இருந்தால் இருமுறை பயன்படுத்தலாம். நைலான், போர் மற்றும் இரண்டும் கலந்து வருகிறது. உள்ளே இருக்கும் பகுதி செராமிக் அல்லது வெப்ப கடத்தியாக இருக்கலாம். இது கூந்தலை அழக்காக்குவதை விரைவாக்கும்.
Written by Team BB on 20th Aug 2018