"நன்றாக உடற்பயிற்சி செய்த பிறகு உங்களுக்கு எந்த வலிகளும் ஏற்படவில்லையெனில், நீங்கள் எதையுமே சரியாகச் செய்யவில்லை" என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. உங்கள் தசைகளில் ஏற்பட்டுள்ள வலிகளை நீங்கள் மிகவும் இறுக்கமாக உணர்ந்தீர்களானால், நீங்கள் நன்றாக உடற்பயிற்சி செய்துள்ளீர்கள் என்பதற்கு அதுவே அடிப்படை அறிகுறியாகும். ஆனால், வலியை நீங்கள் வரவேற்கிறீர்கள் என்று பொருளல்ல. எங்கள் கண்களுக்கு முன்னால் எந்தக் கெடுதலையும் நடக்க விட மாட்டோம். உடற்பயிற்சி செய்த பின்பு உங்களுக்கு ஏற்படும் தசை வலிகளை குணப்படுத்த உதவும் எளிமையான தீர்வுகளை நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
- 01. நிறைய தண்ணீர் குடிக்கவும்
- 02. வலிக்கும் உங்கள் தசைகளை மஸாஜ் செய்யவும்
- 03. வெந்நீரில் குளிக்கவும்
- 04. கை, கால்களை நீட்டி மடக்க வேண்டும்
- 05. உங்கள் உணவில் புரதத்தைச் சேர்க்கவும்
01. நிறைய தண்ணீர் குடிக்கவும்

தசை வலிக்கான மிக முக்கிய காரணங்களில் டீஹைட்ரேஷன் (நீரிழப்பு) ஒன்றாகும். அதுவே இரத்த ஓட்டத்தை குறைக்கும் மற்றும் நச்சுகள் வெளிவர வழிவகுக்கும், இதன் விளைவாக பதற்றம், தசைகளில் வலிகள், தசைப்பிடிப்புகள் மற்றும் தேவையில்லாமல் தசைகள் சுருங்கி விரிவடைவதால் ஏற்படும் வலி போன்றவை பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே, உட்பருகும் தண்ணீர் அளவை அதிகரிக்க வேண்டும் மற்றும் பெரிய அளவில் தசை வலிகளை ஏற்படுவதை குறைக்கவும். ஒரு நாளைக்கு சுமார் 8 முதல்10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும், நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு தண்ணீர் பாட்டிலை எப்போதும் கைவசம் வைத்திருக்கவும்.
02. வலிக்கும் உங்கள் தசைகளை மஸாஜ் செய்யவும்

வலியால் பாதிக்கப்பட்டிருக்கு உங்கள் தசைப் பகுதிகளை மஸாஜ் செய்வதினால், தசைகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை குறைக்க உதவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் உங்கள் உடலில் தசையின் பதற்றத்தைத் தணிக்க உதவுகிறது. எனவே, சிறிது எண்ணெய் அல்லது OTC ஒய்ன்மண்ட்டை எடுத்துக் கொண்டு, எங்கெல்லாம் வலியிருக்கின்றதோ அங்கெல்லாம் பூசி மெதுவாக மஸாஜ் செய்யவும். நீங்கள் ஒரு அழகியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொண்டு. அணுகி, அக்குபிரஷர் அல்லது டீப்-டிஷ்ஷூ மஸாஜ் முயற்சி செய்து பார்க்கலாம்.
03. வெந்நீரில் குளிக்கவும்

ஒரு நன்றாக உடற்பயிற்சி செய்த பிறகு ஆசுவாசப்படுத்திக் கொண்டு, வெந்நீரில் ஒரு குளிப்பதை விட சிறந்தது வேறு எதுவுமில்லை. இது உங்கள் சருமம் புத்துணர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல், ஹீட்டிங் பேட்களைப் போல உங்கள் தசைகளிலுள்ள வலியைப் போக்கிடவும் இது உதவுகிறது. வெந்நீரீல் குளிக்கும் போது உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது, அதனால் தசையிலிருந்து வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கின்றது. எனவே, உடற்பயிற்சி செய்த பின் ஒரு வெந்நீர் குளியலுக்கு Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Refresh Body Wash போன்ற ஒரு நல்ல பாடி வாஷினால் குளித்துப் பாருங்கள். இது உங்கள் உணர்வுகளையும், தசைகளையும் அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த சுத்தமான பாடி வாஷிலுள்ள இயற்கையான தேங்காய் நீர், மொராக்கோ மிமோசா பூக்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றுவதற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது, ஊட்டமளிக்கிறது மற்றும் ஹைட்ரேட் செய்கிறது.
04. கை, கால்களை நீட்டி மடக்க வேண்டும்

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் கை, கால்களை நீட்டி, மடக்குவது எப்போதும் சிறந்த யோசனையாகும். மேலும், உடற்பயிற்சி செய்த பின்னர் உங்களுக்கு ஏதேனும் வலியை ஏற்பட்டிருப்பதாக உணர்ந்தால், உங்கள் தசைப் பிடிப்புகள் ஏதாவது இருப்பின் அந்த இறுக்கத்தை போக்க கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் உடலை எப்போதுமே இயக்கத்திலும், சூடாகவும் வைத்திருக்கும், இதனால் உங்கள் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உங்கள் தசைகளால் வெளியேற்றப்படும் நச்சுகளால் தசைப்பிடிப்பு அல்லது பதற்றம் ஏற்படாது.
05. உங்கள் உணவில் புரதத்தைச் சேர்க்கவும்

உங்கள் உணவில் புரொட்டீன்களை சேர்த்துக் கொள்வது ஒன்று மட்டுமே உங்கள் தசைகளில் ஏற்படும் வலிகளை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். கடுமையான உடற்பயிற்சிக்குப் பின் தசைகளில் ஏற்படும் வலியை இந்தப் புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள் சரி செய்ய உதவி புரியும். எனவே, தசை வலியைப் போக்க முட்டை, கோழி, பாதாம், ஓட்ஸ், பாலாடைக்கட்டி, பால் மற்றும் ப்ரோக்கோலி போன்ற உணவுகளை உண்ணுங்கள்.
Written by Kayal Thanigasalam on 12th Nov 2021