உங்கள் குடல் உள்ளேயிருந்து நன்றாக செயல்படுவதற்கு, அதை எப்படி குணப்படுத்துவது

Written by Kayal ThanigasalamMar 02, 2022
உங்கள் குடல் உள்ளேயிருந்து நன்றாக செயல்படுவதற்கு, அதை எப்படி குணப்படுத்துவது

நீங்கள் சாப்பிடும் உணவுதான் உங்களுடைய ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்ற ஒரு சொற்றொடர் நம் வாழ்க்கை முறையை செம்மைப்படுத்தத் தூண்டுகோலாக உள்ளது. ஆனால் அது உண்மையா என்றால் ஆம் உண்மைதான். நம்முடைய உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் நாம் உண்ணும் உணவு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நல்ல ஆரோக்கியமான மற்றும் தரமான வாழ்க்கை வாழ வேண்டுமானால், நாம் உண்ணும் உணவின் மிகவும் கவனமாக இருப்பது முக்கியம். எங்களுடைய அடுத்த சந்தேகத்திற்கு வருவோம்: உங்களுடைய பெற்றோர்கள் பருக்கள் வராமல் தடுக்க மசாலாப் பொருட்களைக் கட்டுப்படுத்தும்படியும், சருமம் குளிர்ச்சியடைவதை தவிர்க்க ஒரு பெரிய கோப்பை நிறைய தயிர் சாப்பிடுவதை தவிர்க்கச் சொல்லியும் உங்களைக் கட்டுப்படுத்தியதுண்டா? நாம் உண்ணும் உணவிற்கும், நாம் எப்படி தோற்றமளிக்கிறோம் என்பதற்கும் உள்ள தொடர்பைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? பரவாயில்லை, இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிப்பதோடு மட்டுமல்லாமல் சுத்தமான, பளபளப்பான சருமத்தைப் பெற உங்கள் குடலைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறோம்.

 

குடல் மற்றும் சருமம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன

முறையாகவும், நன்றாகவும் சாப்பிடுங்கள்

நம் உடலை ஆரோக்கியமாகவும், நிலையாகவும் வைத்திருக்க தேவையானது நமது சருமம், குடல் ஆகிய இரண்டும் உறுப்புகளும் மிக முக்கியமானதாகும். இந்த சமநிலையை பராமரிக்க இவை இரண்டும் ஒன்றாக இசைந்து செயல்பட வேண்டும். குடலின் அரண்களை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் குடல் நுண்ணுயிர்கள் உதவுகிறது அதுமட்டுமல்லாமல், இது நச்சு கள் நமது இரத்த ஓட்டத்தில் நுழைவதை தடுக்கவும், சருமத்திற்குச் சென்று ஏற்படுத்தும் பாதிப்பையும் குறைக்கிறது. அந்த குடலின் அரண்கள் பலவீனமாக இருந்தால், சைட்டோகைன்கள் போன்ற அழற்சியை ஏற்படுத்தக்கூடிய நச்சுகளை அடிக்கடி வெளிப்படுத்த வழிவகுக்கிறது. இவை இரத்த ஓட்டத்தில் கலந்து அதன் மூலமாக பின்னர் சருமத்தையடைந்து, முகப்பரு ஏற்படுவதைத் தூண்டுகிறது . சுருக்கமாகச் சொல்வதென்றால், ஆரோக்கியமற்ற குடல் பிரச்னைகள் முடிஉதிர்வு, எக்ஸிமா போன்ற அழற்சியுடன் கூடிய சருமப் பிரச்சினைகள் அல்லது குளிர்கால இரவுகள் போல் உங்கள் சரும்ம் பொலிவிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான ஒரு குறுக்குவழி

 

உங்கள் உணவில் ப்ரீபயாடிக்குகள் மற்றும் புரோபயாடிக்குகளை சேர்க்கவும்

முறையாகவும், நன்றாகவும் சாப்பிடுங்கள்

புரோபயாடிக்குகள் என்பது நாம் உண்ணும் உணவு மற்றும் இதர சத்துணவு மூலமாக குடலுக்கு, நோயெதிர்ப்பு சக்தியையும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அளிக்கக் கூடிய நல்ல பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படும் ஒரு வடிவமாகும். எக்ஸிமா சரும அரிப்பு மற்றும் சரும அழற்சி போன்ற அழற்சி மற்றும் சருமம் பாதிப்புகளைத் தடுப்பதற்காகவும் மற்றும் அதற்கு சிகிச்சையளிப்பதற்காகவும் ப்ரீபயாடிக்குகள் மிகத் தீவிரமாக செயல்பட உதவுகிறது என்பது பல்வேறு ஆராய்ச்சி ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொம்புச்சா, கிம்ச்சி, மிசோ, தயிர், கேஃபிர், ஊறுகாய் உணவுகள், நாட்டோ மற்றும் டெம்பே போன்ற புரோபயாடிக் உணவுகள் குடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த உணவாகும். ஏனெனில் அவை நல்ல நுண்ணுயிரிகளை உருவாக்கித் தரும். இப்போது, ​​ப்ரீபயாடிக்குகள் என்றால் என்ன? அவை ஒரு வகை நார்ச்சத்து ஆகும். இது நல்ல பாக்டீரியாவை அதிகரிக்க உதவும் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. எனவே அடிப்படையில், புரோபயாடிக்குகளுக்கான திறமையாக செயல்படுவதற்கு உணவாக, ப்ரீபயாடிக்குகள் சிறந்த பங்கை வகிக்கிறது. பழுக்காத வாழைப்பழங்கள், ஆப்பிள்கள், பூண்டு, வெங்காயம், ஆர்டிசோக்ஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர், பீன்ஸ் மற்றும் பருப்பு ஆகியவை ப்ரீபயாடிக் உணவுகளுக்கு சில நல்ல எடுத்துக்காட்டுகள்.

 

நீர்ச்சத்து மிகவும் முக்கியமானது

முறையாகவும், நன்றாகவும் சாப்பிடுங்கள்

உங்கள் குடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், ஒட்டுமொத்தத்தில் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்தவும் நீர்ச்சத்து மிக முக்கியமான ஒன்றாகும். உங்கள் சருமத்தையும் குடலையும் மிகவும் சுகமாக வைத்திருக்க, தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகமிக அவசியம். உங்கள் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படாவிட்டால், முதலில் நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைத் துண்டை போட்டு குடிக்க தொடங்குவதன் மூலம் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அதிகரிக்கலாம். எலுமிச்சைத் துண்டுகள் மற்றும் புதினா இலைகள் அல்லது ஸ்ட்ராபெர்ரிகள், தர்பூசணி போன்ற பழங்களை வைத்து உங்கள் தண்ணீரை மேலும் சுவை சேர்க்கலாம். செலரி சாறைக் குடிப்பது மற்றொரு சிறந்த வழியாகும். செலரி சாறை உதாசீனப்படுத்த வேண்டாம். ஏனெனில், உங்கள் pH அளவை சமப்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவக்கூடிய வைட்டமின் K, C மற்றும் A ஆகிய சிறந்த சத்துக்களுடன் அத்தியாவசியமான தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இது உங்கள் குடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக அமைகின்றன.

 

முறையாகவும், நன்றாகவும் சாப்பிடுங்கள்

முறையாகவும், நன்றாகவும் சாப்பிடுங்கள்

நிச்சயமாக, முட்டைக்கோஸ் மற்றும் கருத்த, கீரைகள் போன்றவை உங்களுக்கு சிறந்த உணவாகும். ஏனெனில் அவை உங்கள் குடலில் மென்மையாக வைத்திருப்பது மட்டுமல்ல, பல ஆரோக்கிய சம்பந்தமான நன்மைகளையும் கொண்டுள்ளன. கூடுதல் பாதுகாப்புகள் அல்லது சர்க்கரை அல்லாத அதிகபட்சமான நன்மைகளைப் பெற பழச்சாறுகளை விட பழங்களைத் தேர்ந்தெடுக்கவும். என்று நீங்கள் எப்போதும் பாப்கார்னை போன்ற சிற்றுண்டி சாப்பிடலாம், ஏனெனில் இது குடலுக்கு ஒரு மிகவும் சிறந்த பலனைத் தரும் சிற்றுண்டியாகும். வெண்ணெய் மற்றும் சர்க்கரையில் வறுத்த பாப்கார்ன்களைத் தவிர்த்து நிச்சயமாக தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக ஏதாவது சிற்றுண்டி சிலவற்றை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளுங்கள். நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் உணவை நன்றாக மென்று மெல்ல உண்ண வேண்டும். ஏனெனில் நீங்கள் மென்று உண்ணும்போது, ​​​​ உங்கள் உடல் அதிக உமிழ்நீரை உற்பத்தி செய்கிறது, இது உணவை நன்றாக அரைத்து, அது செல்ல வேண்டிய இடத்திற்கு அனுப்பவதனால் உணவு சரியாக செரிமானமாக உதவுகிறது. எனவே, சாப்பிடும் போது அந்த புதிய தொடர் அல்லது திரைப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தவிர்க்கவும், ஏனெனில் டிவி அல்லது வீடியோக்களைப் பார்ப்பதால் நீங்கள் வேகமாக சாப்பிடலாம், அதை நாங்கள் அங்கீகரிப்பதில்லை.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
846 views

Shop This Story

Looking for something else