எல்லாமே ஒன்று போலவே இருக்கும் முடிவில்லா வரிசையிலான பவுண்டேஷனால் நீங்கள் வெறுத்துப்போயிருக்கிறீர்களா? கவலையை விடுங்கள். பவுண்டேஷனில் உள்ள வகைகளை உங்களுக்கு விளக்குகிறோம். இதன் மூலம் உங்களுக்கு பொருத்தமானவை தேர்வு செய்து கொள்ளலாம். பத்தே நிமிடங்களில் நீங்களும் பவுண்டேஷனில் வல்லுனராகலாம்.  
1hjhnv

திரவ பவுண்டேஷன்

 இது தான் பரவலாக காணக்கூடிய பவுண்டேஷன் ரகம். அதனால் இதில் எண்ணற்ற பிரிவுகள் உள்ளன. இவற்றை பகுத்தறியலாம்.  
 
டிண்டட் மாயிஸ்சரைசர்
 
இதை திரவ பவுண்டேஷன் என வகைப்படுத்த முடியாது என்றாலும், இதை நாம் பட்டியலில் சேர்க்க இருப்பதால் இது நிச்சயம் பலன் அளிக்கும். இரட்டை பலன் அளிக்கும் பொருட்களை உவங்களுக்கு பிடிக்கும் அல்லவா? அந்த வகையில் இதுவும் பொருத்தமாக இருக்கும். மாய்ஸ்சரைசர் மற்றும் பவுண்டேஷனாக செயல்படும் இது அருமையானது. உங்களுடைய சரும குறைகளை மறைக்கும் அதே நேரத்தில் அதை மென்மையாகவும் தோன்றச்செய்யும்.
 
எண்ணெய் சார்ந்தவை
 
இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும், பனித்துளி போன்ற தோற்றத்திற்கு நீங்கள் ஏங்கினால், எண்ணெய்பசை சருமத்தால் கவலைப்பட வேண்டாம். இந்த பவுண்டேஷன் உங்களுக்கானது. ஈரப்பசையை சேர்ந்த்து சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்க கூடிய இது உங்கள் சருமத்தை மேம்படவும் செய்யும். உலர் சருமம் அல்லது கண்களைச்சுற்றி கோடுகள் போன்றவை இருந்தால் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
 ஷியர் பவுண்டேஷன்
 
மேக்கப் இல்லா தோற்றத்தை நாடுகிறீர்களா? சருமத்திற்கு கூடுதல் பொலிவை அளிக்கும் அதே நேரத்தில், பெரிய அளவிலான குறைபாடுகளை மறைக்க கூடிய லேசான கவரேஜை ஷியர் பவுண்டேஷன் அளிக்க கூடியது. உங்களுக்கு அதிகம் தேவை என நினைக்கும் நாட்களில் அதிகமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.  

மேட்டே பவுண்டேஷன்

அடிக்கடி முகம் துடைக்கும் காகிதத்தை நாடும் பெண்களுக்கான பவுண்டேஷன் இது. ஆயில் பேசை அடிப்படையாக கொள்வதற்கு பதில் இதன் முக்கிய பொருள் தண்ணீராக இருக்கிறது. இது உச்சி வெய்யிலில் உங்கள் நெற்றிப்பகுதி பளபளப்பதை தடுக்கிறது. இதுஇ உங்கள் சருமத்தை உலர வைக்கும் என்பதால்,  இதை பயன்படுத்தும் முன் நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும். ( எப்படியும் இதை நீங்கள் தவறாமல் செய்வீர்கள் என்பது வேறு விஷயம்).

கிரீம் பவுண்டேஷன்
 

கிரீம் பவுண்டேஷன்

மேக்கப்பில் கொஞ்சம் கூடுதலா இருந்தாலும் பரவாயில்லை என நினைக்கும் ரகத்தினருக்கான பவுண்டேஷன் இது. வழக்கமான திரவு பவுண்டேஷனை விட இது கொஞ்சம் கெட்டியானது மற்றும் அடர்த்தியானது. இதன் காரணமாக சிறந்த கவரேஜ் அளித்து, முகத்தை மாலையிலும் பொலிவுடன் வைக்கும். திரவ பவுண்டேஷனைவிட பிக்மெண்ட்சேஷன் அதிகம் கொண்டவை என்பதால், கிரீமி தன்மையை அளிக்கிறது. ஸ்டிக் பவுண்டேஷன் அல்லது பிரெஸ்ட் பான் வடிவில் நாடுங்கள்.


பவர் பவுண்டேஷன்  
 
உங்கள் சருமம் எப்போதுமே இப்படி தான் இயற்கையாகவே பொலிடவுடன் இருக்கிறது என்று சொல்ல விரும்புகிறவர்களுக்கான பவுண்டேஷன் இது. பிரெச்டு பான் அல்லது பவுடன் ரகத்தில் இவை கிடைக்கின்றன. எப்படி இருந்தாலும், மாசில்லா தோற்றம் பெற இவை ஏற்றவை..