நமது அழகை இன்னும் அழகாக்கும் மேக்கப் தரும் சுதந்திரம் நமக்குப் பிடிக்கும்தானே. ஆனால் கடுமையான ஃபவுண்டேஷன் பயன்படுத்துவதால் சரும துளைகள் அடைபடும். முகப் பரு ஏற்படும். மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்தினால் உதடுகள் வறண்டு போகும். ஆனால் இதெல்லாம் மேக்கப் பயன்படுத்துவதைத் தடுக்குமா என்ன. சருமத்திற்கு நல்லது செய்யும் சில மேகக்கப் பொருட்கள் கிடைத்தால் எப்படி இருக்கும். அதைத்தான் நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கப் போகிறோம். உங்களை அழகாக்குவதோடு சருமத்தை ஹெல்தியாக்கும் மேக்கப் பொருட்கள் இவை. இதோ அந்த லிஸ்ட்.

 

இதமளிக்கும் சி.சி க்ரீம்

இதமளிக்கும் சி.சி க்ரீம்

தினமும் ஃபவுண்டேஷன் பயன்படுத்த விரும்பாதவர்களா நீங்கள்? சி.சி க்ரீம் பயன்படுத்திப் பாருங்கள். இது சருமத்தில் உள்ள சமநிலையற்ற ஸ்கின் டோன் சரி செய்ய உதவும். ஆனால் சி.சி க்ரீம் பயன்படுத்தும் போது சருமம் பிசுபிசுப்பாக இருக்கும். இது தூசி, அழுக்கு படிய காரணமாக மாறும். Lakmé 9to5 Naturale CC Cream அலோ வேராவின் நற்குணங்கள் கொண்டது. இது சருமத்திற்கு களங்கமற்ற பொலிவைக் கொடுக்கும். அதோடு சருமத்தின் பாதுகாப்பு வளையமும் பலம் பெறும். வெளிப்புற பொருட்கள் சருமத்தின் மீது பாதிப்பு ஏற்படுத்துவதை இது தடுக்கும்.

 

ஊட்டச்சத்து தரும் லிப்ஸ்டிக்

ஊட்டச்சத்து தரும் லிப்ஸ்டிக்

நீண்ட நேரம் இருக்கும் என்பதால் நம்மில் பலரும் மேட் ஃபினிஷ் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துவோம். அது அசத்தலான தோற்றத்தைக் கொடுத்தாலும் உதடுகள் மிக அதிகமாக வறண்டு போய்விடும். ஊட்டச் சத்து பொருட்கள் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துவது இதற்கு நல்ல தீர்வு. அர்கன் ஆயில் கொண்ட Lakmé Absolute Matte Ultimate Lip Color மேட் ஃபினிஷ் கொடுப்பதோடு உதடுகளுக்கு ஊட்டச் சத்தும் கொடுக்கிறது.

 

நீர்ச் சத்து தரும் ப்ரைமர்

நீர்ச் சத்து தரும் ப்ரைமர்

மிருதுவான, பட்டுப் போன்ற சருமம் வேண்டும் என்றால் மேக்கப் பயன்படுத்தினாலும் பயன்படுத்த்தாவிட்டாலும் ப்ரைமர் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு ப்ரைமர் பயன்படுத்துவது பிரச்சனையாக இருக்கும். அதை சமாளிக்க ஊட்டச் சத்து உட்பொருட்கள் கொண்ட ப்ரைமர் பயன்படுத்த வேண்டும். Lakme Absolute Under Cover Gel Face Primer பயன்படுத்தும் போது சருமத்திற்கு மிருதுவான தோற்றம் கிடைக்கும். இதிலுள்ள விட்டமின் இ சருமத்திற்கு சத்து கொடுக்கும். இது ஹெல்தியான பொலிவைக் கொடுக்கும். மேக்கப்பின்கீழ் இதைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு கன்சீலர் பயன்படுத்தலாம்.

 

யு.வி பாதுகாப்பு தரும் காம்பேக்ட்

யு.வி பாதுகாப்பு தரும் காம்பேக்ட்

சன்ஸ்கிரீன். அதற்கு மாற்றே கிடையாது. ஒவ்வொரு நாளும் பயன்படுத்தியாக வேண்டும். ஆனால் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியுமா. ஆனால் மீண்டும் மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தலைவலியாக இருக்கும். என்ன செய்யலாம்? சிம்பிள். எஸ்.பி.எஃப் கொண்ட காம்பேக்ட் பயன்படுத்தலாம். Lakmé Sun Expert Ultra Matte SPF 40 PA+++ Compact பயன்படுத்தும் போது ஆயில் கன்ட்ரோல் ஆகும். மேக்கப்பும் கலையாமல் இருக்கும். இதில் சன் ஸ்கிரீன் பாதுகாப்பும் கிடைக்கும்.

 

மிருதுவான ஐலைனர்

மிருதுவான ஐலைனர்

பென்சில் ஐலைனர் பயன்படுத்தும் போது துல்லியமான ஃபினிஷ் கிடைக்கும். சீக்கிரமாக உலர்ந்துவிடும் என்பதால் அதைப் பயன்படுத்துவது சிக்கலாக இருக்கும். நீர்ச் சத்து கொடுக்கும் உட்பொருட்களையும் அதோடு சேர்த்துக்கொண்டால் அது சுலபமாகும். கண் எரிச்சலும் தவிர்க்கப்படும். விட்டமின் இ நற்பண்புகள் கொண்ட Lakmé Absolute Forever Silk Eyeliner வறண்டு போகாமல், மிருதுவாக அப்ளை செய்ய உதவும்.