சருமம் மீது அடர்த்தியாக பரவும் பவுண்டேஷன் மற்றும் மங்கலான, பழுப்பான தோற்றத்தை தரும் பவுண்டேஷன் இடையே உள்ள மெல்லிய வேறுபாட்டை சமாளிக்க விரும்புகிறவர்களுக்கு வேறு அழகான தீர்வு இருக்கிறது. சருமத்திற்கு ஏற்ற சரியான ஷேடை பெற இரண்டு ஷேட்களிலான பவுண்டேஷனை இனி கலந்து கொண்டிருக்க வேண்டாம். உற்சாகம் கொள்ளுங்கள் பெண்களே! அடர் ஸ்கின் டோன்கள் மேக்கப்பை தக்க வைத்து, ஒரு சில அழகு சாதன பொருட்கள் மூலமே பொலிவான தோற்றத்தை தரும்.

பின் குறிப்பு: வழக்கமான சி-.டி-.எம் முறையுடன் துவங்கவும். வாரம் ஒன்று அல்லது இரு முறை எக்ஸ்போலியேட் செய்ய மறக்க வேண்டாம். ஆரோக்கியமான,  மென்மையான சருமம் மேக்கப்பை மேலும் சிறப்பாக்கும்.

 

சரியான பவுண்டேஷன்

சரியான பவுண்டேஷன்

உங்களிடம் சரியான பவுண்டேஷன் இருந்தால் நீங்கள் உலகை ஆளலாம். எனினும், பவுண்டேஷன் வாங்கும் போது, நீங்கள் சிலவற்றை மனதில் கொள்ள வேண்டும்.உங்களுடைய சருமத்தின் ஆதார நிறம் எடுப்பாக தெரியும் தாடைப்பகுதியில் பவுண்டேஷனை முதலில் பரிசோதிக்கவும்.செயற்கை ஒளியை விட இயற்கையான ஒளியில் பயன்படுத்திப்பாருங்கள்.பவுண்டேஷன்கள் பலவகை கவரேஷ் மற்றும் பினிஷை அளிக்கின்றன.மங்கிய சரும சாயல் கொண்டவர்களுக்கு பொருத்தமான பலவகை ஷேட்களில் கிடைக்கும்( வால்நட் டான்), லாக்மே அப்சல்யூட் இல்யுமினேட்டிங் பவுண்டேஷன் போன்றவை இருக்கின்றன.  இவை எடுத்துக்காட்டும் தன்மையை பெற்றிருப்பதால் நீங்கள் எப்போதும் மெழுகுவர்த்தி ஒளியில் அமர்ந்திருப்பது போல தோன்றச்செய்யும். யார் தான் இத்தகைய அழகை விரும்ப மாட்டார்கள்.

 

கண்கள் மீது கவனம்

கண்கள் மீது கவனம்

ஆழமான சரும சாயல் கொண்டவர்கள் கரிய விழிகள் மற்றும் அடர்த்தியான இமைகள் பெற்றுள்ளனர். ஐலைனர் மற்றும் மஸ்காரா மூலம் உங்கள் கண்கள் மீது கவனத்தை குவியுங்கள். பிளம், பர்கண்டி மற்றும் காப்பர் ஷேட்களை முயன்று பார்க்கலாம். மாறுபட்ட, அதே நேரத்தில் கவரக்கூடிய தோற்றத்திற்கு மெட்டாலிக் ஷேட் மற்றும் ஜுவல்டு டோன்களை பரிந்துரைக்கிறோம். நான்கு மெட்டாலிக், பிக்மென்ட் நிறைந்த வண்ணங்களில் கிடைக்கும் லாக்மே அப்சல்யூட் ஷைன் லைன் உங்கள் தோற்றப்பொலிவை மெருக்கேற்றும்.

 

சரியான பொலிவு

சரியான பொலிவு

உங்கள் கண்ண பகுதியில் வண்ணமயமாக இருப்பது உங்கள் அழகை மேலும் எடுப்பாக்கும். ஆழமான சரும சாயல் எனில் பீச் அல்லது ஆரஞ்சு வண்ணம் அடிப்படையிலான வண்ணங்கள் ஏற்றதாக இருக்கும். பழுப்பு வண்ணங்களை தவிர்ப்பது நல்லது. உடனடி கிளாமர் வேண்டும் எனில் கண்ண எலும்பில் எடுப்பான பகுதியில் கொஞ்சம் தங்க நிறத்தை பூசிக்கொள்ளலாம். காலை முதல் இரவு வரை நிலைத்திருக்க கூடிய தோற்றத்திற்கு ஹைலைட்டர் ஒன்றைக் கையில் வைத்திருந்து, விருந்து நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் பயன்படுத்தவும்.

கச்சிதமான அழகு

மங்கிய சருமத்திற்கு கிலாஸ் மற்றும் மேட்டே இரண்டும் பொருத்தமாக இருக்கும். இவற்றில் உள்ள பல வகைகளை பரிசோதித்துப்பார்க்கலாம். அடர் சாயலுக்கு நியூட்ஸ் முதல் டீப் பர்பிள் வரை எல்லாம் சரியாக இருக்கும். கொஞ்சம் பவுண்டேஷனோடு உதடுகளுக்கு ஒரு லேயர் உருவாக்குவதும் சிறந்தது. உதடுகள் தோற்றத்தை இது சீராக்கும். அடர் உதடுகள் எனில், இது உங்கள் உதடு வண்ணத்தை பொலிவாக்கும். தேவைப்படும் போது பயன்படுத்த அபிமான லிப்ஸ்டிக்கை கையில் வைத்திருக்கவும்.

 

விரல் நுனியில் அற்புதம்

விரல் நுனியில் அற்புதம்

நக அழகு நல்ல பலனை அளிக்கும். உங்கள் நகங்களை முறையான மேனிகியூர் மூலம் நன்றாக பராமரிக்கவும். பிங்க்ஸ், கோரல்ஸ், பர்பில் வண்ணங்களை தேர்வு செய்யலாம். இளவரசி போன்ற தோற்றம் வேண்டும் எனில், நியூட்களை நாடலாம். எதுவாக இருந்தாலும் அசத்தலாக இருங்கள். லாக்மே 9 முதல் 5 பிரமர்+மேட்டே நைல்ஸ் ரகங்களில் உள்ள வகைகள் நீடித்த தோற்றத்தை அளிக்கும். பெயருக்கேற்ற பலனை இது தினமும் அளிக்கிறது.