எந்த வகையான முகப்பருவையும் சமாளிப்பது மிகவும் கடினமானதாகும், அதிலும் குறிப்பாக முதுகில் முகப்பரு ஏற்பட்டிருக்கும் அது மிகப் பெரிய வலியைத் தரும்! முதுகுப் பகுதியை பார்க்க முடியாததால் பின்புற பகுதியில் அடிக்கடி ஏற்படும் பாதிப்புகளின் மீது அதிக கவனம் செலுத்த முடியாது. எனவே, நாம் அதைப் புறக்கணிக்கிறோம். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால், உங்கள் முதுகுப் பகுதியை சரிவர கவனிக்காமல் விட்டுவிடுவது மிகுந்த வலியை அளிக்கும், மேலும் சருமத்தை பொலிவிழக்கச் செய்யும் பரு வடுக்களையும் விட்டுவிட்டுச் செல்லலாம். எனவே, முதுகில் பருக்கள் ஏற்படுவது அனைவருக்கும் மிகவும் பொதுவானது என்றாலும், அவற்றிற்கு சிகிச்சையளிக்கப்படாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று அர்த்தமல்ல.
முதுகில் ஏற்படும் பருக்களை குணப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிக்குறிப்புகளையும் நாங்கள் உங்களுக்கு வழங்குவதற்கு முன், முதலில் அவை ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இறந்த சரும செல்கள் மற்றும் சீப சுரப்பிகள் உங்கள் சருமத் துவாரங்களில் அதிகப்படியான அடைந்து கொள்வதின் விளைவாக, உங்கள் சருமத்தின் மீது பருக்களாக வெளிப்படுகின்றன. இது முகம், முதுகு, மார்பு, கைகள், அமரும் பகுதி போன்ற உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்; எனவே இப்போது, அதைக் குணப்படுத்தவதற்கான உதவிக்குறிப்புகளை தெரிந்த கொள்வோம். பருவைத் தடுப்பதற்கு உங்களின் அன்றாட உடல் பராமரிப்பு வழக்கத்துடன் சில எளிய உதவிக்குறிப்புகளுடன் சேர்த்து நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படியுங்கள்.
- 01. அன்றாடம் தவறாமல் குளிக்க வேண்டும்.
- 02. தவறாமல் இறந்த செல்களை நீக்கவும்
- 03. முடியை குறைத்து வைத்துக் கொள்ளவும்
- 04. காற்றோட்டமுள்ள ஆடைகளை அணியுங்கள்
- 05. உடலுக்குப் பூசிக் கொள்ளும் லோஷன்களை
01. அன்றாடம் தவறாமல் குளிக்க வேண்டும்.

விதி 01. உங்களுடைய சருமம் பருக்களில்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சருமத்தை நீங்கள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முதுகப் புறத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு அழுக்கும், வியர்வையும் மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றது எனவே தான், நீண்ட நேரம் குளிக்காமலும் அல்லது உடற்பயிற்சி செய்தபின் குளிக்காமலும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், வியர்வைகள் சருமத் துவாரங்களை அடைத்துக் கொண்டு பருக்கள் உருவாகக் காரணமாகி விடும். ஆகவே, உங்கள் முதுகுப் புறத்தை நன்றாக சுத்தம் செய்து குளிப்பதற்கு, தினமும் ஒரு சில நிமிடங்களை செலவழியுங்கள்.
உங்கள் உடலை மிகவும் சுத்த்தமாக வைத்திருப்பதற்கு இயற்கையான மற்றும் பாராபென் இல்லாத St. Ives Soothing Oatmeal & Shea Butter Body Wash போன்ற உடலை சுத்தம் செய்யக் கூடிய பாடி வாஷை தேர்வுசெய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். தோலியல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்த உடல் சுத்தம் செய்யும் பாடி வாஷ், 100% இயற்கை ஓட்ஸ் மற்றும் தாவர வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாக கையாளும்.
உங்களுடைய சருமத்தை மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருப்பதற்காக ஆழமாக மாஸ்யரைஸிங் செய்யும்போது, இயற்கையான மூலப்பொருள்கள் உங்கள் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்தி, நிம்மதியான சூழலையும் உருவாக்கும்
02. தவறாமல் இறந்த செல்களை நீக்கவும்

முதுகுப் புறத்தில் ஏற்படும் பருக்களின் அபாயத்தை நீங்கள் குறைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பின், வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் முதுகின் இறந்த செல்களை தவறாமல் அகற்ற வேண்டும்! உங்கள் சருமத் துவாரங்களை அடைத்து, முதுகில் பருக்களை ஏற்படுத்தும் அழுக்கு, அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த சரும செல்கள் முதலியவற்றை நீக்க உதவுகிறது. உங்களுடைய சருமப்பராமரிப்புக்கு Dove Exfoliating Body Polish Scrub with Kiwi Seeds and Cool Aloe மிகவும் சரியான தேர்வாக இருக்கும். கற்றாழை மற்றும் கிவி விதைகளின் தன்மையுடன் கூடிய இந்த உடல் ஸ்க்ரப் உங்கள் சருமத்தின் மீதுள்ள அசுத்தங்களை மென்மையாக உரித்தெடுக்க உதவுகிறது. அதே நேரத்தில் உங்கள் சருமத்தை பொலிவுடனும் மற்றும் மாஸ்யரைஸிங்கும் செய்யும் செயல்பாட்டிற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
03. முடியை குறைத்து வைத்துக் கொள்ளவும்

முதுகுப் புறத்தில் ஏற்படும் எரிச்சலூட்டும் பருக்களுக்கு, உங்களுடைய நேசமுள்ள, அலைஅலையாய் இருக்கும் கூந்தலும் ஒருவிதத்தில் காரணமாகிறது. நீங்கள் தலைமுடிக்கு தடவும் எண்ணெய் மற்றும் அழுக்குகள் உங்கள் முதுகுப் புறத்தை நன்றாகத் தேய்கின்றன. எனவே, உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன், கூடுமானவரை முதுகுப் பகுதியிலிருந்து சற்று விலக்கியே தலைமுடியை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உங்கள் தலைமுடியை நன்றாகத் தூக்கி வாரி கட்டிக் கொண்டு, ஒரு போனிடெய்ல் கொண்டையையோ அல்லது பன் கொண்டையையோப் போட்டுக் கொள்ள வேண்டும். ஷேம்பூ அல்லது கன்டிஷனர் போன்றவைகளின் எச்சங்கள் உங்கள் முதுகுப்புறப் பருக்களின் துயரத்தை மேலும் மோசமடையச் செய்யும்.
இந்த தயாரிப்புகளில் உள்ள சிலிகான்கள் உங்கள் முதுகில் உள்ள துவாரங்களில் அடைத்துக் கொண்டு முதுகில் பருக்கள் உருவாக வழிவகுக்கும். அதனால்தான் Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Shampoo and Conditioner. போன்ற சிலிகான் இல்லாத முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலிகான், பராபென்ஸ் மற்றும் சாயங்கள் இல்லாமல் மொராக்கோ மிமோசாக்கள் மற்றும் தேங்காய் தண்ணீரால் இந்த ஷாம்பு தயாரிக்கப்படுகிறது. தேங்காய் மற்றும் மிமோசாவின் இனிமையான வாசனையுடன் இருக்கும் இந்த தயாரிப்பு, உங்கள் தலைமுடி மற்றும் சருமத்திற்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத அனைத்து வகையான இயற்கை மற்றும் நெறிமுறை வளர்க்கப்பட்ட மூலிகைச் செடிகளின் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
04. காற்றோட்டமுள்ள ஆடைகளை அணியுங்கள்

நீங்கள் இறுக்கமான ஆடைகளை அணியும்போது, வியர்வையை வெளியேற்றுவதில் உங்கள் சருமத்திற்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும்; இப்படி வெளியேற்றப்படாத வியர்வைகள் மயிர்க்கால்களை எரிச்சலடையச் செய்கிறது, அது மட்டுமல்லாமல் எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களை ஆழமாக சருமத் துவாரங்களுக்குள் உட்புகுத்தி, பருக்களை உருவாக்கத் தூண்டுகிறது. எனவே, உங்களுக்கு முதுகில் பருக்கள் இருந்தால், காற்றோட்டமுள்ள, தளர்வான மற்றும் மாற்றுவதற்கு எனிதான ஆடைகளை அணிவதே நல்லது. பருக்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்க்க்கூடிய பருத்தி அல்லது கைத்தறி போன்ற காற்றோட்டமுள்ளத் துணிகளை அணிவதுதான் சாலச் சிறந்த்து.
05. உடலுக்குப் பூசிக் கொள்ளும் லோஷன்களை

புத்திசாலித்தனத்துடன் தேர்வு செய்யவும்
உங்கள் முதுகில் உருவாகும் பருக்களைப் பற்றி கவலையின்றி, உங்கள் சருமத்தை மட்டும் ஈரப்பதமாக வைக்க முயற்சிப்பது புத்திசாலித்தனம் என்று நினைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
கிரீம் அடிப்படையிலானவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக ஜெல் சார்ந்த லோஷன்களுக்கு உபயோகப்படுத்துவது சிறந்ததாகும். நீர் சார்ந்த ஜெல் லோஷன்கள் மிக மென்மையாகவும், ஒட்டும் தன்மையற்றவையாகவும் இருக்கும். ஆகையால், மேலும் அவை உங்கள் சருமத் துவாரங்களை அடைக்காது.
Vaseline Ice Cool Hydration Lotion போன்ற ஜெல் லோஷன்களை முயற்சிக்கவும். ஜெல் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட லோஷன் உங்கள் சருமத்தின் மீது ஒட்டாதத் தன்மை மற்றும் மிருதுத் தன்மையும் கொண்ட இந்த லோஷன் உங்கள் சருமத்திற்கு எளிதாக காற்றோட்டத்தை உருவாக்கித் தருகிறது. நாங்கள் விரும்புவதெல்லாமா உங்கள் சருமத்திற்கு உடனடியாக குளிர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்தித் தர முடியும் என்பதுதான். உங்கள் சருமத்தை 3 டிகிரியில் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க இந்த லோஷன் உதவி செய்கிறது. மேலும், முதுகில் பருக்களினால் ஏற்படும் எரிச்சலுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதோடு, உங்கள் சருமத்திற்கு நீரேற்றத்துடனும், ஊட்டத்தையும் அளிக்கிறது.
Written by Kayal Thanigasalam on 1st Sep 2021