முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

Written by Kayal Thanigasalam24th Feb 2021
முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு எந்தவித நேரமும் காலமும் பார்ப்பதில்லை. ஆனால், அவை மறைவதற்கு வெகுநாட்கள் எடுத்துக் கொள்ளும். மேலும், அவை உங்கள் முகத்தில் இருக்கும் கால நேரம், உங்கள் வாழ்க்கையின் அதிமுக்கியமான தருணங்களின் நேர் விகிதாசாரம் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள், அப்படித் தானே நீண்ட நாட்கள் முகப்பருக்கள் இருப்பதே மிக முக்கியமான தருணமாகும். முகப்பருக்கள் தானவே மறைந்துவிடும் வரை காத்திருப்பதற்கு நமக்கு நேரமில்லை. முகப்பருக்களை வளராமல் தடுத்து, வெகுவிரைவில் குணமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது தான் சரியான வழி, (அதை பிதுக்கி கிள்ளி எறிவது ஒரு தீர்வல்ல) உங்களுடைய தேடல் வரலாற்று பட்டியலில் “முகப் பருக்களை எப்படி குணப்படுத்துவது“ என்ற ஒன்று எப்போதுமே இருக்கிறதா? அப்படியானால், இக்கட்டுரை உங்களுக்கானதுதான்

எப்போதும் சரும பராமரிப்பு குறித்த கேள்விகளில் அதிகமாக கேட்கப்படுவது முகப்பருக்களை குணப்படுத்துவது எப்படி அல்லது ஒரே இரவுக்குள் முகப்பருக்களை எப்படி மறைப்பது என்பது பற்றியது தான். மேலும் உடனடியான தீர்வை நாம் விரும்பினாலும், (தொழில்நுட்பம் சார்ந்த காலத்தை குறைக் கூறவும் ) முகப்பருக்களை விரைவாகவும், சிறப்பாகவும் குணப்படுத்த சில வழிமுறைகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சில இயற்கையான உடனடி சிகிச்சை மூலம் உங்கள் முகப்பருக்களை விரைவில் நீங்களே குணப்படுத்தி விட முடியும், மேலும் கணநேரத்தில் அவற்றை ஒழித்து விடலாம். இத்தகைய உட்பொருட்கள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் தெரிந்து உங்களுடைய சமையலறையில் ஏற்கனவே இருப்பவைகள்தான். எனவே, ஐந்து இயற்கையான உடனடி சிகிச்சைகளையும், அவைகளை பயன்படுத்தி உங்கள் முகப்பருக்களை எப்படி குணப்படுத்த முடியும் என்பதையும் பாருங்கள். அப்போதுதான் உங்களால் அவற்றை முற்றிலுமாக அழிக்க முடியும்.

 

ஐஸ்

முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

ஐஸ் பேக்கை வைத்து ஒத்தட சிகிச்சையளிப்பதே, முகப்பருக்களை நீக்குவதற்கான எளிதான வழியாகும். ஆம், உங்கள் ஃப்ரீஸரில் தான் முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்பதற்கான பதில் உள்ளது! முகப்பருக்கள் மீது ஐஸ்ஸை தடவுவதால், சிவப்படைதல், வீக்கம் முதலியன குறையும். மேலும், ஒரே இரவில் அவை சுருங்குவதற்கும் உதவி செய்யும். கூடுதலாக, வலியை போக்குவதற்கும் உதவி செய்யும். முகப்பருக்களால் உங்களுக்கு சிவப்படைதல் மற்றும் வலி ஏற்பட்டால் அவற்றை சிறந்த முறையில் குணப்படுத்தும். மேலும், இதற்கு ஒரு விரிவான ஃபேஸ் பேக் செயல்முறை தேவையில்லை. ஆகவே, நீங்கள் இதை செயல்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு ஐஸ் க்யூபை எடுத்துக் கொண்டு கையில் வைத்துக் கொள்ளவும். அதை ஒரு மெல்லியத் துணியில் சுற்றியோ அல்லது நேரடியாக உங்கள் முகத்தின் மீதோ தடவவும். ஐஸ் உருகும் வரை மஸாஜ் செய்யவும். இது போல் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும். அது விரைவாக குணப்படுத்தச் செய்யும் மேலும் வடுவைக் கூட மறைந்து போகச் செய்யும்.

 

வேப்ப எண்ணெய்

முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

வேம்பு ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் அறிந்த விஷயமே. அது முகப்பருக்களை மட்டுமே குணப்படுத்துவதில்லை, மாசில்லாத சருமத்தைப் பெறவும் உதவுகிறது. வேம்பு பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல், பூஞ்சை தொற்று, தேமல மற்றும் புள்ளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு நட்சத்திரமாக விளங்குகிறது. பருக்களை குணப்படுத்தவும், மாசில்லாத சருமம் மற்றும் களங்கமற்ற சருமத்தை ஒரு சமயத்தில் பெறுவதற்கு வேப்ப எண்ணெயை உடனடியாக சிகிச்சையாக பயன்படுத்தலாம். உங்கள் முகத்தை கழுவி, பருத்தி துணியால் அல்லது சொட்டு விடும் டப்பாவின் உதவியுடன் திரவமாக்கப்படாத வேப்ப எண்ணெயைப் நேரடியாக முகப்பருக்கள் மீது தடவவும். சுமார் அரை மணி நேரம் அதை அப்படியே விட்டுவிட்டு மிதமான சுடு தண்ணீரில் கழுவவும். இது அனைத்து பாக்டீரியாக்களையும் கொன்று விடும். முகப்பருவை நன்றாக உலர வைக்கும். மேலும், இது முகமெங்கும் பரவாமல் இருக்க வைக்கும். எனவே உங்களுக்கு பரு இல்லாத மற்றும் ஆரோக்கியமான சருமத்தை தரும்.

 

கற்றாழை (ஆலோ விரா)

முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

மாஸ்யரைஸிங் முதல் குணப்படுத்துதல், உங்கள் சருமத்தின் மீது படியும் பசையை முற்றிலும் நீக்குவது வரை உள்ள அனைத்து சரும பிரச்னைகளையும் குணப்படுத்துவதை தவிர கற்றாழையால் வேறு என்ன செய்ய முடியும் எங்களுக்கு அப்படித் தோன்றவில்லை. உங்களுக்கு முகப்பருக்களால் பாதிப்புள்ளான சருமம் அல்லது ஒரே ஒரு முறை முகப்பரு வந்திருந்தாலும், உங்கள் வீட்டில் ஒரு கற்றாழை ஜெல் பாட்டில் அவசியம் தேவை அல்லது கற்றாழை செடியிலிருந்து கொஞ்சம் ஜெல்லை பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்க்கும் பொருட்கள் அதில் இருப்பதால், முகப்பருக்களை கற்றாழை ஜெல் குணப்படுத்தும் மற்றும் அழற்சியை ஒரே நாளைக்குள் குறைத்து விடும். ஒரு பட்டாணி அளவு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, முகப்பருக்களின் மீது தடவவும். இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் கழுவ வேண்டும். அவை பூஞ்சையடையாமல் இருக்கவும், தலையணை படாமல் இருக்கவும், தடவிக் கொண்டபின் அவற்றை ஒரு சிறிய டிஷ்ஷூ பேப்பரினால் நன்றாக சுற்றி, அது உலரும் வரை காத்திருந்தபின், உறங்கச் செல்லவும்!

 

மஞ்சள்

முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

தூய்மையான மற்றும் பளபளப்பு சருமத்திற்கு பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரே ஒரு மூலப்பொருள் மஞ்சளாகும். ஆரோக்கியமான சருமத்திற்கு மஞ்சளின் ஏராளமான அழகியல் நன்மைகளைப் பற்றி உங்கள் அம்மா அல்லது பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருளினால், பளபளப்பை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்காக மட்டுமில்லாமல், முகப்பருக்களை குணப்படுத்தும் ஒரு உடனடி சிகிச்சையாக அது பணி செய்கிறது. மோசமான முகப்பருக்கள், பருக்கள் இருந்த வடு போன்றவற்றை குணப்படுத்தி, மிருதுவான சருமத்தை மஞ்சள் உடனடியாக தருகிறது. நீங்கள் முகப்பருக்களினால் பாதிப்படைந்தவராயிருந்தால், உங்கள் முகப்பரு குணப்படுத்த வீட்டிருந்தை செய்யக் கூடிய ஒரே அருமந்து மஞ்சளாகும். இதை எலுமிச்சை சாறு அல்லது தேனுடன் கலந்து உங்கள் பருக்கள் மீது தடவவும். கழுவவும், பின்பு மாஸ்யரைஸ் செய்யுங்கள். இதை பருக்கள் மறையும் வரைசெய்யவும்.

முகப்பருக்களை எப்படி குணப்படுத்துவது என்று யோசிக்கிறீர்களா? இந்த உடனடி சிகிச்சைகள் அதற்கு உதவும் !

தேயிலை மர எண்ணெய் ?

தேயிலை மர எண்ணெய் முகப்பருக்களால் பாதிக்கப்பட்ட சருமம் மற்றும் எண்ணெய் பசையுள்ள சருமத்திற்கு கிடைத்த புனிதப் பொக்கிஷ மூலப் பொருளாகும். பருக்களை எப்படி குணப்படுத்துவது மற்றும் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற கவலைப்படுவதை நிறுத்துங்கள். ஏனெனில், நீண்ட நாட்களாக நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் தீர்வு இங்கே உள்ளது. தேயிலை மர எண்ணெய் உங்கள் முகத்திலிருந்து எண்ணெய்ப் பசையை முற்றிலும் அகற்றி, முகப்பரு வடுக்களை மறைத்து, ஒரே இரவில் முகப்பருக்களுக்கு சிகிச்சையளிக்கும். எனவேதான், இந்த சருமப் பாதுகாப்பு ஹீரோ உங்கள் அலமாரியில் கட்டாயம் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு எண்ணெயை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு அல்லது மூன்று சொட்டு தேயிலை மர எண்ணெயை விட வேண்டும். அதை நன்றாக கலந்து முகப்பருவின் மீது தடவவும். காலையில் கழுவிட வேண்டும். முகப்பருக்கள் மறையும் வரை இம்மாதிரி தினமும் செய்ய வேண்டும். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே: முகப்பருக்களை குணப்படுத்துவதற்கு ஐஸ் கட்டிகள் உதவுமா?

ப : முகப்பருக்களுக்கு சிகிச்சைக்கு ஐஸ் கட்டி ஒத்தடம் ஒரு மிகச் சிறந்த வழியாகும். முகப்பருக்களின் மீது நேரடியாக ஐஸ்ஸை தடவும்போது சிவப்பாதலை குறைக்கு, முகப்பருக்களின் அளவை சுருக்குகிறது மற்றும் வலியை குறைக்கவும் உதவுகிறது. ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் வரை ஒரு சிறிய ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய காட்டன் துணியில் சுற்றி முகப்பருக்களின் மீது தடவ வேண்டும்.

கே: ஒரே இரவுக்குள் முகப்பருக்களை எப்படி நீக்க முடியும்?

ப : முகப்பருக்களை ஒரே இரவுக்குள் நீக்க வேண்டுமென்றால், கற்றாழை ஜெல்லையோ அல்லது திரவமாக்காத தேயிலை மர எண்ணெயை கொஞ்சம் தடவ வேண்டும். தூங்கும் போது மற்ற இடத்தில் பூசாமல் இருக்க, ஒரு சிறிய டிஷ்ஷூ பேப்பர் துண்டால் மூடிக் கொள்ளுங்கள். இது ஒரு உடனடி சிகிச்சையாக செயல்படும். முகப்பருக்களை விரைவாக குணப்படுத்தும்.

கே: முகப்பருக்களின் சிகச்சைக்கு பற்பசையை பயன்படுத்துவது நல்லதா?

ப : பற்பசைகள் முகப்பருக்களை குணப்படுத்தும் என்று உங்களை தூண்டி விட்டு அவற்றை உங்கள் முகப்பருக்களின் மீது தடவுவதற்கு முதுமையடைந்த மனைவிகள் சொல்லக் கூடிய கதைகளாகும். ஆனால் அது உங்கள் சருமத்திற்கு நல்லதைவிட மிகவும் மோசமான தீங்கை விளைவிக்கும். இது ரசாயனத்தை உள்ளடக்கியது. அது உங்களை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், சருமப் பிரச்னைகளை அதிகரிக்கச் செய்யும். அதற்கு பதிலாக சரியான OTC முகப்பரு மருந்து மூலம் சிகிச்சையளிக்கவும்.

கே: முகப்பருக்களை வீட்டிலேயே என்னால் எப்படி குணப்படுத்துவது ?

ப : நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து உங்களுடைய வழக்கமான சருமப் பராமரிப்பு, சரியாக தயாரிப்புகளை பயன்படுத்துவது, மற்றும் சத்துள்ள உணவுகளை உண்பது முதலிய பழக்கங்களினால் வீட்டிலேயே முகப்பருக்களை குணப்படுத்தலாம். முகப்பருக்களை மறைப்பதற்கு தேன், கற்றாழை மற்றும் தேயிலை மர எண்ணெய் போன்ற இயற்கை வைத்தியங்களையும் முயற்சிக்க வேண்டும்.

கே: முகப்பருக்களுக்கான இயற்கையான சிறந்த உடனடி சிகிச்சைகளை என்னென்ன?

ப: தேயிலை மர எண்ணெய், கற்றாழை, மற்றும் மஞ்சள் ஆகியவை முகப்பருக்களுக்கான மிகச் சிறந்த உடனடி சிகிச்சையாகும். இத்தகைய மூலப் பொருட்களை நேரடியாக சிறிதளவு முகப்பருக்களின் மீது தடவவும். அதன் உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் முகப்பருவற்ற சருமத்தை இயற்கையாகவே பெறலாம்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
1016 views

Shop This Story

Looking for something else