இதை நீங்கள் ரன்வே மாடல்களிலும், உங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களிடமும் பார்த்திருப்பீர்கள், ஆனால் ஸ்மோக்கியான ஐ மேக்கப்பை படங்களில் பார்த்ததைப் போல கச்சிதமாகப் போட முயற்சிக்கும்போது உங்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. உங்கள் கவலைகளை பின்னுக்குத் தள்ளி, கச்சிதமான ஸ்மோக்கி ஐ மேக்கப்பை எப்படிப் போடுவது என்று இந்தக் கையேட்டில் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் கண்களை அழகுபடுத்த விரும்புகிறீர்களா? ஸ்மோக்கி ஐ மேக்கப் மூலம் அதை சாதிக்கலாம். முதலில் அது கடினமாகத்தான் தோன்றும், ஆனால் உங்கள் கைகளில் சரியான கருவிகள் இருந்தால் ஸ்மோக்கி ஐ மேக்கப் செய்வது மிக எளிது. அதற்கு உங்களுக்கு அழியாத பூச்சை அளிக்கும் லாக்மே அப்சல்யூட் ப்ரெசிஷன் லிக்விட் லைனர் தேவை, இதில் மேக்கப் போடுவதற்கு எளிதாக ஒரு ஃபெல்ட் முனை உள்ளது. உங்கள் இமைகளுக்கு வண்ணம் கூட்ட லாக்மே அப்சல்யூட் ஃப்ளட்டர் சீக்ரெட்ஸ் டிராமாடிக் ஐஸ் மஸ்காராவைப் பயன்படுத்துங்கள், அதோடு உங்கள் கண்களுக்கு சரியான பளபளப்பை கொடுக்க லாக்மே 9டு5 ஐ க்வார்டெட் அல்லது ஐ ஷேடோ பேலெட்டைப் பயன்படுத்துங்கள். நீர்புகாத, அழியாத கண் மை வேண்டுமென்றால் லாக்மே ஐகானிக் காஜல் இன் பிளாக்கை நீங்கள் தாராளமாக நம்பலாம். இந்தத் தோற்றத்தை எப்படிப் பெறுவது:
கச்சிதமான ஸ்மோக்கி ஐ மேக்கப்பைப் பெறுவது எப்படி

படிநிலை 1

பேலெட்டிலிருந்து ஐ ஷேடோ பிரஷில் பழுப்பு ஐ-ஷேடோ பவுடரை எடுத்து, அதை உங்கள் கண் இமை முழுவதும் பூசுங்கள்.


படிநிலை 2

வெளிர்நிற ஷேடைத் தேர்ந்தெடுத்து, அதை பழுப்புடன் கலந்து, உங்கள் கண் இமைகளுக்குக் கீழுள்ள இடம் முழுவதும் பூசுங்கள்.


படிநிலை 3

கண் இரப்பை முழுவதையும் மூடியிருக்கும் ஐஷேடோக்களை கலக்க பிலெண்டர் பிரஷைப் பயன்படுத்துங்கள்.


படிநிலை 4

உங்கள் கண்களுக்கு பேஸ் மேக்கப்பை முடித்தவுடன், மேல் இமையிலும், கீழ் இமையிலும் ஒரு தடிமனான கோட்டை வரைவதற்கு லாக்மே ஐகானிக் காஜல் இன் பிரவுனைப் பயன்படுத்துங்கள். அது பளிச்சென்று தெரிவதற்கு உங்கள் விரல்களால் அதை தேய்த்துவிடுங்கள்.


படிநிலை 5

அடுத்து கண் மை பூசும் நேரம். உங்கள் கண்களின் ஓரத்தில் ஒரு முக்கோண வடிவத்தை வரையுங்கள். இதன் பிறகு, ஏற்கனவே பழுப்பு நிற ஷேடோ இருக்கும் அதே ஐ-ஷேடோ பிரஷை எடுத்து, மேல் இமைகளிலும், இரப்பை முழுவதிலும் கண் மையைப் பூசுங்கள்.


படிநிலை 6

உங்கள் கண்களுக்கு மேலும் அழகூட்ட, கீழ் இமைக் கோட்டில், குறிப்பாக முனைகளில், சிறிது கருப்பு வண்ண கோலைச் சேருங்கள், இது முடித்ததும், அதை சிறிதளவு பரப்பிவிட பிரஷைப் பயன்படுத்துங்கள்.
படிநிலை 7

உங்கள் பேலெட்டில் உள்ளதிலேயே வெளிர்நிறமான ஐஷேடோவைத் தேர்வுசெய்து, அதை உங்கள் மோதிர விரல்களில் சிறிதளவு எடுத்து, கண் இமையின் நடுவே அதைப் பூசுங்கள். மேல் இமையில் லாக்மே அப்சல்யூட் ப்ரெசிஷன் லிக்விட் லைனரைப் பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை கோடு வரையுங்கள். அதன் மேல் மஸ்காராவை தாராளமாகப் பூசினால், உங்கள் ஸ்மோக்கி ஐ லுக் தயார்.

ஸ்மோக்கி ஐ லுக்கை வேறு நிறங்கள் மூலமும் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அடிப்படையான ஸ்மோக்கி ஐ மேக்கப்பிற்கு பழுப்பு நிறமும், கறுப்பு நிறமும் போதுமானது, ஆனால் இன்னும் கொஞ்சம் முயற்சித்துப் பார்க்க நினைத்தால், வேறொரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து, இதே படிநிலைகளைப் பயன்படுத்தி ஸ்மோக்கி ஐ மேக்கப்பைப் பெறுங்கள். நீங்கள் வேலைக்குச் செல்லும்போது இன்னும் துடிப்பானவராகத் தெரிவதற்கு பழுப்பு நிற ஸ்மோக்கி ஐ மேக்கப்பைப் பயன்படுத்துங்கள். கூட்டத்தில் தனியாகத் தெரிய வைக்கும் செக்ஸியான, அழகான ஐ மேக்கப்பிற்கு கறுப்பு நிறத்தைப் பயன்படுத்துங்கள்.