ப்ரைமரில் இருந்து ரோஸ் வாட்டருக்கு மாறுங்கள்

ஒரு ப்ரைமருக்கு பதிலாக ரோஸ் வாட்டரை தேர்வு செய்யுங்கள். ஒரு இயற்கையான டோனர் ஆக ரோஸ் வாட்டர் அறியப்பட்டுள்ளது. இது உங்கள் சருமத்தை புத்துணர்வு பெறச் செய்வது மட்டுமல்லாமல் களைத்து போயிருக்கும் சருமத்துக்கு உயிர்ப்பையும் தருகிறது. மேலும், இது உங்கள் மேக்கப்புக்கு புத்தணர்வுடன் கூடிய ஒரு அடித்தளத்தையும் வழங்குகிறது.

bb picks the lakme cc cream 500x300 piccontent

ஹெவி கவரேஜில் இருந்து ஒரு வெயிட்லெஸ் பேஸ்&க்கு மாறுங்கள்

ஒரு நல்ல மேக்கப் தோற்றத்துக்கு ஒரு நல்ல பேஸ் பவுண்டேசனாக செயல்பட்டாலும் கூட, கோடைக் காலத்தில் முகம் இயற்கையாகவே இருப்பதுதான் ஏற்றது. இதனை செய்வதற்கான சிறந்த வழி லைட்டாக இருக்கும் ஒரு சிசி க்ரீம் பயன்படுத்துவதுதான். மிக அதிகமாக பேஸ் பயன்படுத்தாமல் பிரகாசமாக ஒளிர்வதை பெற, லக்மே 9 டு 5 சிசி கலர் டிரான்ஸ்ஃபார்ம் க்ரீம் பயன்படுத்தவும். எஸ்பிஎஃப் 20 உடன் மற்றும் இரண்டு ஷேட்களில் கிடைப்பதால், அது வெயிலில் இருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதோடு உங்களின் சரும டோனை சமப்படுத்தி, பிரகாசமாக்கி மற்றும் உங்கள் சருமத்தை மறைக்கவும் செய்கிறது.

லிப்ஸ்டிக்கில் இருந்து டின்டட் லிப் பாம்&க்கு மாறுங்கள்

அந்த லிப் கலர்களை தூக்கி வீசி விட்டு டின்டட் லிப் பாம்களை எடுக்கவும். இதற்காகவே நாங்கள் வெயிலை எதிர்கொள்ள எஸ்பிஎஃப் 15 உடன் வரும் லக்மே லிப் லவ் கேர் கொண்டு வந்துள்ளோம். டூயல் கோர் பாம் உங்கள் உதடுகளுக்கு ஊட்டமளித்து பாதுகாப்பதோடு அவற்றுக்கு சிறிது நிறத்தையும் கொடுக்கிறது.

படம் உதவி
ஷியா பட்டர்