நள்ளிரவு வரை கண் விழித்து உங்கள் அபிமான தொலைக்காட்சி தொடர்களை பார்த்ததுதான் கருவளையங்களுக்கு காரணம் என நினைத்தால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். தூக்கமின்மை, களைப்பு மற்றும் மன அழுத்தம் கரு வளையங்கள் தோன்ற காரணங்கள் என்றாலும், வெளியே தெரியாத காரணத்தை நாம் பெரும்பாலும் உணர்வதே இல்லை. நம்முடைய உணவு பழக்கம் தான் அது. பல நேரங்கள் கருவளையங்கள் உணவு பற்றாக்குறை காரணமாக தோன்றலாம் அல்லது முந்தைய ஆரோக்கிய நிலையை சுட்டிக்காட்டலாம். எனவே, கருவளையங்களை விலக்கி வைக்க, கீழ் கண்ட உணவுப்பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 

வைட்டமின் சி

வைட்டமின் சி

வைட்டமின் சி யின் ஆற்றலை குறைத்து மதிப்பிட வேண்டாம். வைட்டமின் சியில் ஆன்டி ஆகிசிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. பிரி ரேடிகல்ஸ் உண்டாக்கும் பாதிப்பை அது குறைக்கிறது. இரத்த ஓட்டத்தை சீராக்கியும், கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம் சருமத்தின் உறுதி மற்றும் மினுமினுப்பை தக்க வைக்கிறது.

எங்கிருந்து: சிட்ரஸ் பழங்கள், ஸ்டிராபெரி, கொய்யா, சிவப்பு மற்றும் பச்சை மிளகு ஆகியவை மூலம் சருமத்திற்கு தேவையான டைட்டமின் சி’ யைப் பெறலாம்.

 

வைட்டமின் இ

வைட்டமின் இ

உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு தேவையான மற்றொரு அற்புதம் வைட்டமின் இ. இதில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளது. பிரி ரேடிகல்சையும் எதிர்க்கிறது. சருமத்தின் ஈரப்பதத்தை மீட்டுத்தருவதோடு, பிக்மென்டேஷனை குறைத்து, வயோதிக செயல்பாட்டை தாமதப்படுத்துகிறது.

எங்கிருந்து கிடைக்கும் :  பாதாம், உலர் விதைகள், ஹேஸ்லநட்ஸ், காலே, ஆலிவ், அவகாடோ மற்றும் பிராகோலி போன்ற அடர் கீரை வகைகளில் வைட்டமின் இ நிறைந்தவை. 

 

லைகோபினே

லைகோபினே

லைகோபினே பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் ஆற்றல் வாய்ந்த ரசாயனம். ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கும். இது, கண்களின் நலனை மேம்படுத்துவது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு   உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய பலன்களை அளிக்கிறது. கரு வளையங்களை உருவாக்க காரணமாகும் பிக்மென்டேஷனை குறைக்கிறது. தக்காளி, பப்பாளி, கொய்யா, தர்பூசணி ஆகியவற்றில் உள்ளது.

எங்கிருந்து கிடைக்கும்: தக்காளி, பப்பாளி, கொய்யா, தர்பூசனி, ஆஸ்பராகஸ் மற்றும் சிவப்பு கோஸ் மூலம் லைகோபினே பெறலாம். 

 

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

கரு வளையங்களோடு, தலைசுற்றல் மற்றும் களைப்பு இருந்தால், இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். இரும்புச்சத்து குறைவாக இருந்தால், உடல் தசைகளுக்கு பிராணவாயு செல்வது பாதிக்கப்படலாம். இதன் காரணமாக சருமம் வெளிர் நிறமாக கரு வளையங்கள் பளிச்சென தெரிகின்றன.

எங்கிருந்து கிடைக்கும்: பச்சை காய்கறிகள், துவரை வகைகள், பயிறு, டோபூ, உலர் பழங்கள், ஆலிவ்கள், காளான் மற்றும் மீன் உணவில் இந்த சத்து அதிகம்.

 

வைட்டமின் கே

வைட்டமின் கே

வைட்டமின் கே, பாதிக்கப்பட்ட சருமத்தை சீராக்கி , சருமத்தை சமநிலை பெற வைத்து, அதன் தளராத தன்மையை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. இதை அடிக்கடி எடுத்துக்கொள்வது கருவளைய பாதிப்பை குறைக்க உதவும்.

எங்கிருந்து கிடைக்கும்: சிறு தானியங்கள், காலிஃபிளவர், பிராகோலி, ஸ்பினாச், காலே,முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.