உங்கள் பேஸிக் ஃபேஸ் மேக்கப்பைச் எப்படி செய்வதென்று கற்றுக் கொள்வது மிக முக்கியம். வேலைக்குச் செல்லும்போதும், இரவில் வெளியே செல்வதாக இருந்தாலும், உங்கள் உடைகளுக்கும், அணிகலன்களுக்கும் பொருத்தமான அழகான தோற்றம் அவசியமானது. கச்சிதமான மேக்கப் பேஸைப் பெறுவதற்கு எங்களது படிப்படியான வழிகாட்டி உங்களுக்கு உதவிசெய்யும், இதன் மூலம் நீங்கள் எளிதாகவும், சிரமம் இன்றியும் மேக்கப் போடலாம்.

கச்சிதமான மேக்கப் பேஸுக்கு உங்களுக்குத் தேவை ஒரு CC கிரீம், கன்சீலர், ஃபவுண்டேஷன், காம்பாக்ட் மற்ரும் ஒரு பிரைட் பிரஷ். இந்த 5 மேக்கப் சாதன்ங்கள் மற்றும் கீழே உள்ள எங்களது வழிகாட்டி மூலம், 15 நிமிடங்களுக்குள் நீங்கள் ஒரு நிறைவான முகத்தை எளிதாகப் பெறலாம். ரெடி, ஸ்டெடி, போ! இந்தத் தோற்றத்தைப் பெறுவது எப்படி:

step by step face makeup 600x400

படிநிலை 1

குறைகளற்ற தோற்றத்தைப் பெறவும், சீரான சரும நிறத்தைப் பெறவும் லாக்மே சிசி க்ரீம் கொண்டு உங்கள் முகத்தைத் தயார் செய்யுங்கள்.


படிநிலை 2

உங்கள் கருவளையங்களையும், முகத்தில் உள்ள மற்ற கறைகளையும் மறைக்க ஒரு கன்சீலரைப் பயன்படுத்துங்கள். அது மென்மையாகவும், இயல்பாகவும் தெரிவதற்கு கன்சீலரைக் கலந்து, அதன் மேல் தட்டுங்கள். இதற்கு லாக்மே அப்சல்யூட் வொயிட் இன்டென்ஸ் ஸ்டிக் வித் எஸ்பிஎஃப் பரிந்துரைக்கப்படுகிறது. இதை சரியான அளவில் பூசுவதற்கு ஒரு கன்சீலர் பிரஷைப் பயன்படுத்தலாம்.


படிநிலை 3

உங்கள் சரும நிறத்திற்குப் பொருத்தமான ஷேட் உள்ள லாக்மே அப்சல்யூட் வொயிட் இன்டென்ஸ் ஃபவுண்டேஷனை சிறிதளவு பூசுங்கள். இதை ஒரு ஃபவுண்டேஷன் பிரஷைக் கொண்டு பூசி, இது உங்கள் முகத்திற்கும், கழுத்திற்கும் பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்யுங்கள்.


படிநிலை 4

லாக்மே அப்சல்யூட் வொயிட் இன்டென்ஸ் காம்பேக்ட் பவுடரைக் கொண்டு உங்கள் மேக்கப்பை அமைத்து, உங்கள் மேக்கப் சரியாகவும், இயல்பாகவும் காட்சியளிப்பதற்காக அதை தேவையான அளவு சரிசெய்யுங்கள்.


படிநிலை 5

கொஞ்சம் வண்ணம் சேர்ப்பதற்காக, லாக்மே அப்சல்யூட் ஃபேஸ் ஸ்டைலிஸ் ப்ளஷ் ட்யூவொ இன் கோரல் ப்ளஷைப் பூசுங்கள். இயல்பான நிறத்தைப் பெற முதலில் உங்கள் கன்னங்களில் அதைத் தேய்த்து, பின்னர் பிரஷ்ஷை மேல்நோக்கித் தேயுங்கள்.

இப்போது உங்கள் மேக்கப்பின் பேஸ் சரியாக உள்ளது, ஒரு சிக்கென்ற சிகை அலங்காரத்துடன் உங்கள் அழகான தோற்றத்தை மேலும் அழகாக்குங்கள். மேலும் பாராட்டுகளைப் பெற உங்கள் தலைமுடியை ஒரு பன் போல சுருட்டிக் கட்டுங்கள்.